கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி
இயேசு வளர்ந்த நாசரேத்தூரைப் பற்றி பெரிதாக சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. இயேசுவின் சீஷரில் ஒருவன், ‘நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை வரக் கூடுமோ?’ என்று கேட்டான்(யோவான் 1:46).
அப்படி ஒரு ஊரே இல்லையென்று சில நாத்திகர்கள் கூறுகின்றனர்! எனவே அதைப் பற்றி நமக்கு என்ன தெரியும்.
செலுக்கிய ஆட்சியாளர்களை, மக்கபேயர்கள் வெளியேற்றிய பின்னர், வடக்குலிருந்து வந்த யூதர்கள் நாசரேத் நகரத்தை நிர்மாணித்தனர். (செலுக்கியர்கள் யூதர்களை, கிரேக்க கலாச்சாரத்தையும், தெய்வங்களையும் பின்பற்ற வற்புறுத்த முயற்சித்தனர்).
நாசரேத்தின் சுற்றுபுறத்தில் ஐந்து புறகர் குக்கிராமங்கள் இருந்தன, அவற்றில் ஒன்றில் இயேசுவின் தாயாகிய மரியாள் வாழ்ந்து வந்தார். அதின் பிறகு, அந்த குக்கிராமம், நாசரேத்தின் நவீன தளமாக மாறியது. அசல் நாசரேத், 2500 மீட்டர் தென் மேற்கில் இருக்கிறது, அது இப்போது டெல் யாஃபியா என்று அறியப்படுகிறது. (ரோமர்கள் கி.பி 69ல் அதை முற்றிலும் அழித்திருக்கக் கூடும்)
நாசரேத்தூரில் ஆராதனையை வழி நடத்துவர்கள் பட்டியலொன்று, சிசேரியா மரித்மாவில் கிடைத்த கல்வெட்டில் உள்ளது, இது நாசரேத் இருந்ததை நிருபணம் செய்கிறது.
நான் ஏன் இவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
ஏனெனில், கர்த்தர் தாம் வாசம் செய்ய இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தெரிந்துகொண்டார். அவர் உன்னை தெரிந்து கொண்டார்.
ஜெபம்
பரலோக பிதாவே
நீர் அற்புதமானவர். உம்மிலே நிலைத்திருந்து அன்பு கூருகிறவர்களிடத்தில் வாசம் செய்வதை நீர் தெரிந்து கொண்டீர்.
அவர்களில் ஒருவராக நான் இருப்பதையே வாஞ்சிக்கிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.
More