கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி

CHRISTMAS: God's Rescue Plan Realised

14 ல் 1 நாள்

எதிரி படையால் ஆக்கிரமிக்கப் பட்ட ஒரு நாட்டில் மிகச்சிறிய கிராமத்தில் பிறக்க கடவுள் ஏன் தனது குமாரனை அனுப்பினார்? கடவுளை, எது ஒரு விவசாயப் பெண்ணையும் ஒரு தச்சரையும் ஈடுபடுத்த வைத்தது? விலங்குகளுக்கு உணவளிக்கும் இடத்தில் கடவுளின் குமாரனை பிறக்கத் தூண்டியது எது?

உண்மை என்னவென்றால்: இந்த நிகழ்விற்கான திட்டங்களைக் கடவுள் வெகு காலத்திற்கு முன்பே கவனமாக வகுத்தார். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அதை முன்னறிவித்தனர். தீர்க்கதரிசி மீகா (5:2-4) பண்டைய பரம்பரையின் இளவரசனைப் பெற்றெடுக்கும் ஒரு தாயைப் பற்றிப் பேசியிருந்தார், அவர் தனது மக்களை மேய்ப்பவர் மற்றும் பெத்லகேமில் பிறக்கப் போகிறார் என்றும் பேசியிருந்தார்.

700 ஆண்டுகளுக்குப் பிறகு, சாஸ்திரிகள் எருசலேமுக்கு ஒரு நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்டனர், அங்கு அவர்கள் ‘யூதர்களின் ராஜா எங்கே பிறப்பார் என்று ராஜா ஏரோதுவிடம் விசாரித்தனர்.

வேதபாரகர், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தைப் பார்த்து, மேசியா பெத்லகேமில் பிறப்பார்... ஆச்சரியம், ஆச்சரியம்: என்று சாஸ்திரிகளிடம் சொன்னார்கள்.

யுகங்களுக்கு முன்பு, கடவுள் உன்னிடம் வர வேண்டும் என்று தனது திட்டங்களை கவனமாக வகுத்தார்.

பிரார்த்தனை

அன்புள்ள தந்தையே,

உங்கள் அன்பான திட்டத்திற்கு யுகங்களுக்கு முன்பே அடித்தளமிட்டீர்கள். மேலும் நீங்கள் மாறாத கடவுள் என்று உங்கள் வார்த்தை கூறுகிறது.

வரலாற்றில் என்றும் மாறாத நேசத்தில் நான் சாரந்திருக்க முடிவதற்காக நன்றி.

அந்த நேசத்திற்கு அடி பணிகிறேன்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

CHRISTMAS: God's Rescue Plan Realised

மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.

More

ஆஸ்திரேலிய வேதாகமச் சங்கம்