கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி
ஒரு தீர்க்கதரிசனமும் இல்லாத அந்த 400 வருடங்களில், அநேகர் மேசியாவிற்காக காத்திருப்பதை விட்டு இருப்பார்கள். ஆனால் 400 வருடங்களின் முடிவில், தேவன் ஒரு தேவ தூதனை ஒரு சாதரண இளம் பெண்ணிடம் அனுப்பினார்.
அந்நாட்களில் பெண்கள் மதிக்கப் படவில்லை, அவரகளின் உரிமைகளும் குறைவாகவே இருந்தன. அவர்கள், தகப்பன் அல்லது கணவனின் சொத்துக்களாகவே கருதப்பட்டனர். அவர்களின் வார்த்தைகள் நம்பப் படவில்லை, அவர்களின் சாட்சி நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆனால், கர்த்தர் வேறுவிதமாய் பார்த்தார். அவர் காபிரியேல் தூதனை மரியாளிடத்தில்:’’கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்று உரைக்க அனுப்பினார். கர்த்தர் அவளோடு இருக்கிறார், அவளை அவர் மதிக்கிறார் என்றும் திட நம்பிக்கை அளிக்கிறார்.
மரியாளின் களிகூருதலும், நன்றியும், தேவாலயங்களில் மகத்துவமுமான மரியாளின் கீதம் என்று அறியப்படுகிற கீதமாக வெளிப்பட்டதில் ஆச்சரியமில்லை (லூக்கா 1:46-56)
.கர்த்தர் பயன்படுத்தக்கூடாத கீழோர் என்று யாருமில்லை.
ஜெபம்
அன்பின் பிதாவே
நீர் அளிக்கிற நம்பிக்கைகாக நானும் மரியாளின் வாழ்த்துதலோடே இணைந்து கொள்ளுகிறேன். நீர் எளியவர்களுக்கு கனத்தையும், ஏழைகளுக்கு களிப்பையும் அளிக்கிறீர்.
உமக்கு நன்றி சொல்ல என்னிடத்தில் போதுமான வார்த்தைகள் இல்லை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.
More