கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி

CHRISTMAS: God's Rescue Plan Realised

14 ல் 4 நாள்

மரியாள் கன்னியாக இருந்ததின் விசேஷம் என்ன? அது ஏன் முக்கியமானது?

லூக்கா சுவிஷேக ஆக்கியோனுக்கு தெரியும், கன்னி மரியாள் என்று அழுத்தமாக கூறுவதன் மூலம், ஆரம்ப காலத்தில் கிறிஸ்துவத்திற்கு இருந்த மூன்று அச்சுறுத்தல்களுக்கு பதில் அளிக்க முடியும் என்று

  1. இயேசு விசேஷித்தவர் அல்ல என்ற யூதர்களின் கிறிஸ்துவ தாக்குதலுக்கு பதில் அளிக்கும் (கிறிஸ்தவர்கள் ஏசாயா 7:14 ல் கூறப்பட்ட தீர்க்கதரிசனம், ‘ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்’ இயேசுவைப் பற்றியது என்று கூறினார்கள்).
  2. பூர்வத்தில் வழக்கில் உள்ள, இயேசு உண்மையிலே மனுபுத்திரன் அல்ல, தோற்றம் தான், என்ற போதனைக்கு பதில் அளிக்கும். (அவர் பெண்ணிடத்தில் பிறந்தார் என்று தெளிவு படுத்தப்பட்டது)
  3. இயேசு வயது வந்த பின்னர் கடவுளால் தத்தெடுக்கப்படும் வரை, அவர் விசேஷித்தவர் அல்ல என்பவர்களுக்கு பதில் அளிக்கும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கன்னியிடத்தில் பிறந்தது இயேசு விசேஷித்தவர், மனுபுத்திரன் மற்றும் அவர் கர்த்தரால் மனுக்குலத்திற்கு முன் குறிக்கப்பட்ட பரிசு என்று கற்பிக்கிறது.

மற்றும், மேசியாவை கன்னியிடத்தில் பிறக்க வைத்து, சாத்தியமற்றதை, அவருடைய ஆவியினால் சாத்தியமாக்கியிருப்பது ஒப்பற்றது.

இன்றும் அவர் அதை செய்கிறார்

ஜெபம்

அன்பின் பிதாவே

எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிற, உமது பிள்ளையாக நான் ஆக முடியும் என் கற்பனைக்கும் எட்டாதது

இந்த பாக்கியத்திற்காக உம்மை கனம் பண்ணுகிறேன். மேலும் எனது வாழ்க்கைக்கான உமது நோக்கத்தை நான் நிறைவேற்ற வேண்டிக் கொள்ளுகிறேன்.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

CHRISTMAS: God's Rescue Plan Realised

மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.

More

ஆஸ்திரேலிய வேதாகமச் சங்கம்