கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி

CHRISTMAS: God's Rescue Plan Realised

14 ல் 6 நாள்

கிறிஸ்துவனாக இருப்பதால் நாம் வேதனைகள், ஏமாற்றங்களுக்கு தப்பித்து கொள்ள முடியாது. நம்மால் ஏதுவுமே செய்யக்கூடாத பெரிய பிரச்சனைகள் வரலாம். வாகனத்தின் ஒளி கற்றையில் அசைய முடியாமல் மாட்டிக் கொண்ட முயலைப் போல உணரலாம்.

யோசேப்பு இவ்வாறு உணர்ந்து இருக்கலாம். அவருக்கு நியமிக்கப்பட்ட பெண் வேறொருவருடன் உறவு வைத்துக் கொண்டது போலிருக்கிறது.

யோசேப்பு சொல்லொண்ணா வேதனை அடைந்தாலும், மரியாதைக்குரிய வைகையில் அவளை விவாகரத்து செய்துவிட முனைகிறான். இது இரகசியமாக செய்யப்பட வேண்டும், விபசாரம் செய்ததாக சமுதாயத்திற்கு தெரிந்தால், அவள் கல்லெறிந்து கொல்லப்படுவாள்

யோசேப்பு தனது வாழ்க்கையில் பெரிய ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறார். அவர் வேதனையில் இருக்கும் பொழுது, மொத்த பரலோகமும், சரித்திரத்தில் இடம் பெறப் போகிற ஒரு முக்கிய நிகழ்வுக்காக, கரத்தரின் பூலோக வருகைக்காக மூச்சை பிடித்துக் கொண்டு காத்திருப்பது அவருக்கு தெரியாது. பூலோகத்தில் பார்வையில் வேதனைக்குரியதாக தோன்றின ஒன்று, உண்மையில் கர்த்தரின் மகிமையான முயற்சி.

ஆகையால், உங்கள் வேதனைகளில் கர்த்தரை இணையுங்கள்… பின்னர் அவர் செய்யப் போவதை கவனியுங்கள்

ஜெபம்

அன்பின் பிதாவே

இறுதியில் உம்முடைய குறிக்கோள்கள் தான் நிலைக்கும். எங்கள் கண்ணீரை துடைப்பதாக வாக்கு அருளியிருக்கிறீர். அதினால் என் வாழ்க்கையும், வேதனைகளையும் உம்முடைய கரத்தில் வைக்கிறேன்

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

CHRISTMAS: God's Rescue Plan Realised

மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.

More

ஆஸ்திரேலிய வேதாகமச் சங்கம்