கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி

CHRISTMAS: God's Rescue Plan Realised

14 ல் 14 நாள்

கிறிஸ்துமஸ் கதை என்பது கடவுளினால், முன்பே திட்டமிடப்பட்ட, கிருபையின் கதை. கடவுள் தனது சிருஷ்டிகளை, பாவத்தின் அழிவுகளிலிருந்து, அதாவது துன்பம் மற்றும் மரணத்திலிருந்து காப்பாற்றும் கதை -–.

கடவுளின் நம்ப முடியாத செயலை மிகைப்படுத்துவது கடினம். மற்ற எல்லாக் கடவுள்களும் மனிதகுலத்தைப் பற்றி அலட்சியமாக இருப்பதாக, மற்றும் முதலில் பிறந்த குழந்தையைப் பலியிடுவது போன்ற அசாதாரணமான "பக்தி" மூலம் மட்டுமே அவர்களின் தயவைப் பெற முடியும் என்றும் கருதப்பட்ட நேரத்தில், கடவுள் நமக்காக வந்து தமது அன்பை வெளிப்படுத்தினார்.

இம்மானுவேல் என்ற வார்த்தையின் அர்த்தம் “தேவன் நம்மோடிருக்கிறார்”—–இதைத்தான் நாம் இயேசுவிடம் அனுபவிக்கிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்களிலும் சோதனைகளிலும் கடவுள் இயேசுவின் மூலம் பங்குகொண்டார். நமக்காக இறப்பதன் மூலம், பரிசுத்தமான கடவுளால் சகிக்க முடியாத நம்முடைய பாவங்களுக்கான விலையை இயேசு செலுத்தினார். அவருடைய செயல், நாம் கடவுளோடு அவருடைய ராஜ்யத்தில் நித்தியமாக இருக்கும் உரிமையை வென்றெடுத்தது.

உங்கள் இடத்தைப் சுதந்தரித்துக் கொள்ள உங்களை அழைக்கிறேன்.

பிரார்த்தனை

அன்புள்ள பிதாவே,

எங்கள் மீதான உமது அன்பு அழகானது மற்றும் நிலையானதது. உங்களின் அன்பினால் எங்களைக் கௌரவித்தமைக்கு நன்றி… மேலும் உங்களுடன் நித்தியத்தில் நாங்கள் பங்குபெறுவதை சாத்தியமாக்கியதற்கு நன்றி.

நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வேதவசனங்கள்

நாள் 13

இந்த திட்டத்தைப் பற்றி

CHRISTMAS: God's Rescue Plan Realised

மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.

More

ஆஸ்திரேலிய வேதாகமச் சங்கம்