கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி
நீ எதற்கு காத்திருக்கிறாய்? உன் வாழ்க்கையில் எது நிறைவேறவில்லை. நம்பிக்கை மற்றும் நிறைவைப் பற்றி நீங்கள் என்ன காத்திருக்கிறீர்கள்.
காத்திருக்கும் நேரம் பயங்கரமானதாக இருக்கலாம். விசுவாசத்தை விட்டு நீங்கள் விலகி போகத்தக்கதாக சோதிக்கப் படலாம். எபிரெய மக்கள் மோசேக்கும், கர்த்தருக்கும் காத்திருப்பதை விட்டு விட்ட போது, தங்களுக்காக பொன் கன்று குட்டிகளை உண்டாக்கி, அதையும் தங்கள் சொந்த யோசனைகளையும் வணங்கினார்கள். இது தான் மனித குலத்தின் பழைய முட்டாள்தனம், இன்றும் அநேகர் இதை செயகிறார்கள்.
கிறிஸ்து பிறப்பு இரண்டு அசாதாரண மனிதர்களை குறிப்பிடுகிறது: சிமியோன் மற்றும் அன்னாள். இரண்டு பேரும் மிகவும் வயதானவர்கள். இரண்டு பேரும் மதத் தலைவர்களின் (யார் பிரதான ஆசாரியர் என்று சண்டையிட்ட ஜான் ஹிரகானஸ் மற்றும் அரிஸ்டோபுலஸ் II) மோசமான நடத்தையைப் பார்த்தவர்கள்.
ஆனாலும், அவர்கள் இரண்டு பேரும் உலகத்தின் முட்டாள்தனம் தங்களது நம்பிக்கையை சிதைக்க இடங்கொடுக்கவில்லை. உலக நம்பிக்கையான இயேசுவைக் கண்ட பின் தான் மரித்தார்கள்
தயவு செய்து, இயேசுவைக் கண்டு கொள்ளாமல் மரித்து விடாதீர்கள்
ஜெபம்
அன்பின் பிதாவே
நான் ஒருபோதும், உம்மையும், உமது சத்தியத்தையும், நம்பிக்கையையும் விட்டு கொடுக்க விரும்பவில்லை. தயவாய் நான் சரியாய் இந்த வாழ்க்கையை நிறைவு செய்து, “நன்றாய் செய்தாய்” என்று நீர் சொல்வதை கேட்கத்தக்க என்னைக் காத்தருளும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.
More