கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி
இயேசுவைக் கண்டு கொண்டார்கள் என்று மேய்ப்பர்கள் அறிக்கையிட, கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த துப்பு என்ன?
அதென்னவென்றால், அவர்கள் பிரபஞ்சத்தை உண்டாக்கிய, ஒப்பு நகர் அற்ற, சகல வல்லமையும், மகிமையும் உடைய கர்த்தரை, குழந்தையாய், துணிகளில் சுற்றி முன்னணையில் கிடத்தியிருக்க காண்பீர்கள் என்பதுதான்.
நம்மைப் போல சாதாரண மனிதர்களை சந்திக்க கர்த்தர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை இது கூறுகிறது. நம்மை அவருக்கென்று மீட்பதற்காக கர்த்தர் எந்த கால்வாயிலும் வர தயங்க மாட்டார்.
பாலஸ்தீன மேய்ப்பர்கள் சமூகத்தில் கீழானவர்களாய் கருதப் பட்டார்கள். ஆனால் சமூகத்தில் கீழாய் கருதப் பட்ட அவர்கள் தான் இயேசுவின் முதல் மிஷனரிகள். மேய்ப்பர்களாக இயேசுவோடு ஏற்பட்ட நிஜமான சந்திப்பு, அவர்களை மிஷனிரிகளாக மாற்றியது.
இது உங்களுக்கும் நடக்கட்டும்.
ஜெபம்
பரலோக பிதாவே
எனக்கு இயேசுவை முற்றிலும் முழுமையாக காண வேண்டும். அவரைக் கண்டு, என் சமூகத்திற்கு நானும் மிஷினரியாக மாற வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.
More