கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி

CHRISTMAS: God's Rescue Plan Realised

14 ல் 10 நாள்

கடவுள் இந்த உலகத்தில் தனது குமாரனின் பிறப்பைக் கொண்டாட இரண்டு குழுக்களை அழைத்தார். முதலாவது மேய்ப்பர்களின் குழு. இரண்டாவது மற்றொரு பாரம்பரியத்தின் மேல் நம்பிக்கை கொண்ட சாஸ்திரிகளின் குழு. இவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியாது என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு தாழ்மையுள்ளவர்களாய் இருந்தனர்... மேலும் அவர்கள் உண்மையாகவே வாஞ்சித்தனர்.

கடவுள் யாரை முன்னிலைப் படுத்துகிறார் என்பதைப் பற்றி இந்த இரண்டு குழுக்களும் நமக்கு நிறைய சொல்ல வேண்டும்!

கடவுள் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியின் மூலம், அதாவது பிரபஞ்சத்தின் அற்புதங்களின் மூலம் சாஸ்திரிகளிடம் பேசினார் --, மற்றும் சாஸ்திரிகள் அதன் வழியைப் பின்பற்றும் அளவுக்கு தைரியமாக இருந்தனர்.

இன்றும், கடவுள் தனது வணிக அட்டையை அண்டவெளியில் தொங்கவிட்டு, அவரைத் தேட நம்மை அழைக்கிறார் (சங்கீதம் 19:1-4).

ஆனால் கடவுளைத் தேடுவதற்கு, அவர்கள் தங்களின் வசதியான சூழ்நிலையை விட்டு, சோம்பேறித்தனமாக வைத்திருந்த முந்தைய நம்பிக்கைகளை விட்டுவிட்டு, உண்மையாகத் தேட வேண்டியிருந்தது.

இதோ கேள்வி: அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்திருந்தால், இயேசுவைத் தேடி, கண்டுபிடிப்பதற்கான பயணத்தில் இணைந்திருப்பீரகளா?

இயேசுவைக் கண்டுபிடிக்கும் வரை அவர்களின் தேடுதல் நின்றுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, உங்களுடையது கூட நிற்கக்கூடாது.

பிரார்த்தனை

என் பிதாவே,

நான் உம்மைத் தேடாத அளவுக்கு அகங்காரம் கொண்டவனாகவும் சுயநலம் கொண்டவனாகவும் ஆகிவிடுவேனோ என்று பயப்படுகிறேன். தயவு செய்து உங்கள் அன்பில் என்னைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்... மேலும் நாளின் அமைதியான நேரங்களில் உங்களைச் சந்திக்க அனுமதியுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

CHRISTMAS: God's Rescue Plan Realised

மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.

More

ஆஸ்திரேலிய வேதாகமச் சங்கம்