கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி
நீங்கள் ஆச்சர்யமடைய ஆயத்தமாய் இருக்கிறீ்களா? அப்படியானால் இதை கேளுங்கள்
பழைய ஏற்பாட்டில், தானியேல் விண்ணப்பம் செய்து கொண்டிருந்த பொழுது, காபிரியேல் தூதன் வந்து சொன்னது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் 483 வருஷங்கள் செல்லும்
தானியேல் மேற்கோள் காட்டிய கட்டளை, கி.மு 445 ல் அர்த்தசஷ்டா (நெகேமியா 2:1-6) ராஜா எருசலேம் திரும்ப கட்டபடுதலைக் குறித்து திட்டமாய் சொன்னது. அப்படியானால், மேசியா (அபிஷேகம் பண்ணப்பட்டவர்) ஆளுகிறவராய் கி.பி 38ல் வருவார் என்று கணிக்கிறது
ஆனாலும், அவர் அரசாளுகிறவராய் அல்ல, ‘மரணத்திற்கு ஒப்பு கொடுக்கப்பட்டவராய்(தானியேல் 9:26) கி.பி 38ல் வருவார் என்று இந்த பகுதி கூறுகிறது.
இது நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்ட இயேசுவின் மரணத்தைக் குறித்த அசாதாரண துல்லியமான தீர்க்கதரிசனம்
அதாவது, கர்ததர் உனக்காக வருவதற்கான ஏற்பாட்டை நேர்த்தியாய் செய்திருக்கிறார்.
ஜெபம்
அன்பின் பிதாவே
எனக்கான மற்றும் உம்முடைய எல்லா படைப்புகளுக்கான உமது அன்பு மாறாதது, அற்புதமானது.
முழு உள்ளத்தோடே முழங்காலில் நின்று உமக்கு நன்றி செலுத்துவதுதான் நான் செய்யும் கைமாறு.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.
More