இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்மாதிரி
இரண்டாவது தருணம்
நம்முடைய லெந்து கால ஆசரிப்புகள் மற்றும் கொண்டாட்டம் ஈஸ்டர் நாளோடு முடிவடைவதில்லை. விடுமுறை என்றால் இதுதான் பிரச்சனை, அடுத்த நாளே நடைமுறை வாழ்க்கைக்குச் சென்று, மீண்டும் பழைய வாழ்க்கையை வாழத்தொடங்குகிறோம். நாம் இன்று பார்க்கப்போவதெல்லாம், இயேசு பாவத்தின் சாபத்தை முறித்து, நமக்குப் புதுவாழ்வைக் கொண்டுவருகிறார் என்ற நம்முடைய விசுவாசத்தில் நாம் எப்படி முன்னேறிச் செல்வது என்பதே.
பேதுருவை நினைவிருக்கிறதா? இயேசுவை அவன் மூன்றுதரம் மறுதலித்ததைக் குறித்து நாம் இந்த வாரத்தின் தொடக்கத்தில் வாசித்தோம். இன்று அவனையும், இயேசுவையும் குறித்து மறுபடியும் பார்க்கப் போகிறோம்.
யோவான் 21:15-19 வசனங்களை வாசியுங்கள்.
இப்பகுதியில் பேதுருவின் அன்பைக் குறித்து இயேசு கேள்வி எழுப்புகிறதைப் பார்க்கிறோம். தம்மீதான அவனுடைய அன்பை உறுதிப்படுத்தும்படியாக இயேசு பேதுருவுக்கு மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கிறார் என நான் நினைக்கிறேன். தம்மீது அவன் வைத்திருக்கும் அன்பை அவன் எவ்விதத்தில் வெளிக்காட்டலாமென்று இயேசு மூன்று முறை அவனுக்குச் சொல்கிறார்: “என்னுடைய ஆட்டுக் குட்டிகளை மேய்ப்பாயாக,” “என் ஆடுகளை மேய்ப்பாயாக,” மற்றும் “என் ஆடுகளை மேய்ப்பாயாக,” என்று மூன்று முறை சொல்கிறார்.
இயேசுவின்மேல் நாம் கொண்டிருக்கும் அன்பைக் காட்டுவதென்பது, நம்முடைய வாயினால் அதைக்குறித்து சொல்வதல்ல. யார் வேண்டுமென்றாலும் சிலுவையை அணிந்துகொள்ளலாம், தங்களுடைய முகநூல் சுயவிவரத்தில் கிறிஸ்தவர் என்ற தெரிவை தேர்வுசெய்துகொள்ளலாம், அல்லது ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்லலாம். ஆனால் இயேசு, நாம் அவரை நேசிப்போமானால் அவருடைய ஆடுகளை (மக்களை) மேய்க்கவேண்டுமென்று சொல்கிறார்.
மற்றவர்களை நேசிக்க மட்டுமே இயேசு பேதுருவிடம் சொல்லவில்லை; அவர் அவனுக்கு இன்னுமொரு அறிவுரையையும் கொடுத்தார்:
யோவான் 21:19 ஐ மறுபடியும் வாசியுங்கள்.
அவர் பேதுருவை தம்மைப் பின்பற்றும்படியாகவும் சொல்கிறார். இயேசு நம்முடைய மீட்பர் என்பதை மிக அழகாகப் படம்பிடித்துக்காட்டும் சம்பவம் இது. தண்ணீரின்மேல் நடக்கும்போது பேதுரு தன் கண்களை அவர் மீதினின்று விலக்கியதை அவர் பெரிதாக எண்ணவில்லை. ஒரு முறையல்ல, மூன்று முறை அவன் தம்மை மறுதலித்ததையும் அவர் பெரிதாக எண்ணவில்லை. திரும்பவும் தம்மைப் பின்பற்றும்படியாக இயேசு பேதுருவுக்கு அழைப்புவிடுக்கிறார்.
-இயேசு (யோவான்10:10-11)
இயேசு உங்களைக்குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். திருடன் (சாத்தான்) உங்கள் வாழ்க்கையில் திருடிய, கொன்று போட்ட, மற்றும் அழித்த எல்லா காரியங்களையும் அவர் அறிந்திருக்கிறார், எப்படியிருப்பினும் இயேசு உங்களை நேசிக்கிறார், உங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் விரும்புகிறார்.
அவருடைய ஜீவன், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினால் உண்டான அவருடைய அன்பினால் நீங்கள் அழகாயிருக்கிறீர்கள்! இயேசுவைப் பின்பற்றுங்கள், அவருடைய ஆடுகளில் அன்புகூருங்கள், பரிபூரண வாழ்க்கை வாழுங்கள்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?
More