இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்மாதிரி

The Final Lessons: A Holy Week Plan

10 ல் 6 நாள்

சந்தோஷம் மற்றும் சமாதானம்

இன்று, மத நாட்காட்டியில் பெரிய வியாழக்கிழமை என்று சொல்லப்படும் கர்த்தருடைய இராப்போஜனத்தை நாம் கொண்டாடும் ஒரு நாள். சில நாட்களாக அந்த மேஜையைச் சுற்றி நடந்த காரியங்களை நாம் தியானித்து வருகிறோம்.

அவைகளைக் குறித்து நாம் ஏற்கனவே வாசித்ததில் சிலவற்றை இப்பொழுது நினைவிற்குக் கொண்டுவருவோம். அவைகளில் எது உங்களுக்கு மிகப் பிரயோஜனமாய் இருந்து வருகிறது?

இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கடைசியாக சொன்ன காரியங்களைத் தொடர்ந்து நாம் தியானிப்போமாக.

யோவான் 16:16-33 ஐ வாசியுங்கள்.

இயேசுவின் வார்த்தைகளை வாசிக்கும்போது, சிலவேளைகளில் அவருடைய சீஷர்களைப் போலவே நானும் குழப்பமடைகிறேன். அவர் சொல்லவரும் கருத்து தெளிவாகப்புரியும் வரை நிதானமாயிருப்பது போராட்டமாயுள்ளது.

நீங்கள் இந்தப் பகுதியை வாசிக்கும்போது, அவருக்குள் நமக்கு இருப்பதாக இயேசு சொல்லும் இரண்டு முக்கியக் காரியங்கள் என்ன?

எனக்கு நினைவிருக்கிறது, நான் கிறிஸ்தவளாவதற்கு முன்பு, மக்கள் கர்த்தருக்குள் நமக்கு கிடைக்கும் இந்த சந்தோஷம் மற்றும் சமாதானத்தைப் பற்றிச் சொல்லி, அதோடு இரட்சிப்பைக் குறித்து என்னிடம் பேசுவதை நிறுத்த முயற்சிப்பது போல் பேசுவார்கள். கிறிஸ்துவைப் பின்பற்றும் பலரிடம் காணப்படும் சந்தோஷம் மற்றும் சமாதானம் என்னைக் குழப்பமடையப் பண்ணும். இது போலியாகத் தோன்றும்; ஏறத்தாள புனையப்பட்டது போல் இருக்கும்.

நான் கிறிஸ்தவளான பின்பு, உண்மையிலேயே, இது அநேகர் தாங்கள் போட்டுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிற ஒரு முகமூடி என்பதைப் புரிந்துகொண்டேன். கிறிஸ்துவுக்குள் நாம் சந்தோஷம், மற்றும் சமாதானமாய் இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டு, புன்சிரிப்புகள், துதிபாடும் கைகள் மற்றும் “நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” என்ற பதில்கள் போன்றவைகளைப் போலியாக ஒட்டவைத்துக்கொள்கிறோம். போராட்டங்களுக்கு அங்கு இடமே இல்லை என்பதுபோல் காட்டிக்கொள்கிறோம்.

ஆனால், இந்தப் பகுதியில் இயேசு தெளிவாகச் சொல்கிறார், உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு, போராட்டம் உண்டு என்று. அவைகள் தவிர்க்கமுடியாதது. இதை உணர்ந்துகொள்வது நம்முடைய மிகப்பெரிய சுயாதீனம். யாருமே பூரணர் அல்ல; யாருடைய வாழ்க்கையும் பூரணமானதல்ல. ஆனாலும், “உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்” (வசனம் 20) என்றும் “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (வசனம் 33) என்றும் இயேசு சொல்கிறார்.

ஏன் நம்முடைய துக்கம் சந்தோஷமாய் மாறி, நாம் சமாதானத்தைக் கண்டடைவோம்? (வசனம் 33 ஐ திரும்பவும் வாசியுங்கள்)

நான் உலகத்தை ஜெயித்தேன்! என்று நம்முடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்து சொல்வது, எவ்வளவு சந்தோஷம்! எவ்வளவு சமாதானம்!

அவர் கொடுக்கும் சமாதானத்தைக் குறித்து, யோவான் 14:27 இல் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது, “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.” உலகம் சித்தரிக்கும் சமாதானத்தை விட தேவன் அருளும் சமாதானம் வித்தியாசமானது. இந்தப் பகுதியில், பரிசுத்த ஆவியானவருக்குள் நமக்கு சமாதானம் உண்டாயிருக்குமென்று இயேசு சொல்கிறார்.

இன்று உங்களுக்கு என்னுடைய சவால் என்னவென்றால், நீங்கள் எதிர்நோக்கும் சோதனைகளிலெல்லாம் உங்களுக்கு சமாமானம் உண்டாயிருக்கும் பொருட்டு, அவரை மட்டுமே தேடுவீர்களாக. அவருக்குள் உங்கள் சந்தோஷத்தைத் தேடுங்கள். அப்பொழுது அதைக் கண்டுபிடிப்பீர்கள். யோவான் 16:24 இல், “கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” என்று இயேசு சொல்கிறார்.

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

The Final Lessons: A Holy Week Plan

இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக சேக்ரெட் ஹாலிடேஸ்-உடன் பெக்கி கைசர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.sacredholidays.com ஐ பார்க்கவும்.