இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்மாதிரி

The Final Lessons: A Holy Week Plan

10 ல் 1 நாள்

தியாகம்

புனித வாரம் என்பது குருத்தோலை ஞாயிற்றுக் கிழமையிருந்தே அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. அதற்கு முந்தின நாளாகிய இன்று, நாம் இந்தத் திட்டத்தைத் தொடங்குகிறோம், ஏனென்றால் ஈஸ்டர் கதை உண்மையாகத் தொடங்குமிடத்தை நாம் விட்டுவிட முடியாது. மக்கள் கூட்டம், ஒட்டகம், பனைஓலைகள்கூட மரியாள், மற்றும் அவளின் தியாகத்தை நாம் பெரும்பாலும் மறக்கும்படி செய்கிறது. ஆகவே குருத்தோலை ஞாயிறுக்கு ஆயத்தமாயிருக்கும்படி நாம் சனிக்கிழமை தொடங்குகிறோம்.

இன்று, நாம் ஆரவாரிக்கும் மக்கள் கூட்டத்தோடில்லாமல், மிகவும் தாழ்மையான ஒரு இடத்தில் தொடங்குகிறோம். நண்பர்களுடன் சாப்பாடு மேஜையைச் சுற்றிலும் இருப்பதைப்போன்ற சௌகரியமாக உணரக்கூடிய ஒரு இடத்திலிருந்து தொடங்குகிறோம்.

யோவான் 12:1-8 ஐ வாசியுங்கள்.

இயேசுவின் இந்த நண்பர்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இல்லையெனில், ஒரு சிறிய பின்னணி: லாசரு சுகவீனமாயிருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டதும் இயேசு உடனே வராமல் காலம் தாழ்த்தினது, லாசருவின் சகோதரிகளுக்கு அவ்வளவாக சம்மதமில்லை. தாமதித்ததினால் லாசரு மரித்துப்போனான். இயேசு துக்கப்பட்டார் என்று நாம் பார்க்கிறோம் (யோவான் 11:35 சொல்லுகிறது, “இயேசு அழுதார்” என்று.) பின்னர் அற்புதம் செய்து, லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்புகிறார்!

இந்த நண்பர்கள் மரணத்தைக்குறித்து மட்டுமல்லாமல், உயிர்த்தெழுதலைக் குறித்தும் நன்கு அறிந்திருந்தனர். லாசருவின் சகோதரிகள் தங்களுடைய சகோதரன் கல்லறையிலிருந்து உயிரோடு எழுந்து வந்ததைக் கண்கூடாகப் பார்த்தார்கள் (யோவான் 11:44). சாத்தியமில்லாதது சாத்தியமாக்கப்பட்டதைப் பார்த்தார்கள்.

இராவிருந்து மேஜையில், மரியாள் அசாதாரணமானக் காரியமொன்றை செய்கிறதை நாம் பார்க்கிறோம். யோவான் 12:3 இல் நாம், “மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு ராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்” என்று வாசிக்கிறோம்.

இந்த “விலையேறப்பெற்ற தைலம்” என்பது நீங்கள் பயன்படுத்தும் வாசனைத் திரவியம் அல்லது நறுமணத் தைலப் புட்டிகளில் ஒன்றைப் போலானதல்ல. நான் வாசித்திருக்கின்ற விளக்கவுரைகள் அல்லது ஆராய்ச்சி வேதாகமம் போன்றவைகள், இது ஒரு முழுவருடக் கூலிக்குச் சமமான மதிப்புள்ளதென்று சொல்கின்றன.

ஒரு வருடத்திற்கான உங்களது வருமானம் என்னவென்பதை நினைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது, அந்த முழுத்தொகையை நீங்கள் இயேசுவுக்காக ஒரு காசோலையில் எழுதுவீர்களானால் எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

என்னால் கிரகிக்கக்கூட முடியவில்லை. என்னுடைய 10% தசம்பாகம் அல்லது காலை நேரத்தில் அவரோடு செலவழிக்கும் 30 நிமிடங்கள் அல்லது ஆலய குடும்பத்தினருடனான ஞாயிறு ஆராதனை இவைகளை தேவனுக்குக் கொடுப்பதற்கேப் போராடுகிறேன். ஒரு முழுவருடத்திற்கான வருமானத்தைக் கொடுப்பதா? முடியாது. என்னால் அங்கு போகமுடியாது. இதுதான் உங்கள் பதிலாயிருக்கிறதா?

எப்படியிருப்பினும், ஈஸ்டர் கதையானது, தன்னிடமிருந்த விலையேறப்பெற்ற ஒரு பொருளைக் கொடுத்து (“களங்கமில்லாத நளதம்”), அவருடையப் பாதங்களைத் தன்னுடைய தலைமயிரினால் துடைத்த, இயேசுவின் சிநேகிதியான ஒரு பெண்ணிடமிருந்தே தொடங்குகிறது. நம்முடைய எல்லாவற்றிற்கும், நம்மிடத்தில் காணப்படும் மிகச்சிறந்தவைகள் எல்லாவற்றிற்கும் கிறிஸ்து தகுதியானவர் என்பது மரியாளுக்குத் தெரிந்திருந்தது.

நாம் ஏன் பெரும்பாலும் நம்மிடம் மீந்திருப்பதை மட்டுமே தேவனுக்குக் கொடுக்கிறோம்?

உங்களால் முடிந்தால், முழங்காலில் நின்று இன்றைய நாளை முடியுங்கள். இயேசுவுக்குத் தாராளமாகக் கொடுங்கள், நீங்கள் இதுவரை கொடாமலிருந்ததை ஒத்துக்கொள்ளுங்கள். அதிக உதாரத்துவமும், பரந்த மனப்பான்மையும் உள்ளவர்களாய் இருக்கும்படியான விசுவாசத்தைக் கேளுங்கள். உங்கள் திராணிக்கு மிஞ்சி கொடுக்கும்படியான தைரியத்திற்காகக் கெஞ்சுங்கள்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Final Lessons: A Holy Week Plan

இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக சேக்ரெட் ஹாலிடேஸ்-உடன் பெக்கி கைசர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.sacredholidays.com ஐ பார்க்கவும்.