இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்மாதிரி
உதவி
பூமியில் இன்னும் சில நாட்களே வாழப்போகும் ஒருவருடன் நீங்கள் எப்பொழுதாவது இருந்திருக்கிறீர்களா? ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு அசைவும் அவர்களுக்குப் பொக்கிஷமாயிருக்கும். ஒன்றையும் வீணடிக்க முடியாது. சும்மா உட்கார்ந்து நேரத்தை வீணடிக்கும் வேளையல்ல அது. இறுதியான பிரியாவிடைகள், வாழ்த்துகள், அறிக்கைகள், மற்றும் அறிவுரைகளெல்லாம் வெறும் வாய்ச்சலனங்கள் அல்ல.
அதைப்போலவே இயேசுவும், தன்னுடைய கடைசி வேளை (யோவான் 13:1) அது என்பதை அறிந்திருந்தபடியினால், அந்த இறுதி மணித்துளிகளை முடிந்த அளவு பயன்படுத்த முயற்சித்தார். ஈஸ்டர் பண்டிகையின் பாதி வழியில் வந்துவிட்டோம், ஆகவே நாம் அவர்மேல் சாய்ந்தவர்களாய், அவருடைய இறுதி வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போம்.
லூக்கா 14:15-31 ஐ வாசியுங்கள்
இது மிகவும் நல்லதுதான். ஆனால் அதில் ஒரு பிரச்சனையுள்ளது: உதவி கேட்பதென்பது எனக்குப் பிடிக்காது.
நீங்கள் எப்படி? உதவி கேட்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையா? அல்லது அது உங்களுக்கும்கூட பிடிக்காத காரியமா?
உங்களுக்கு உதவி தேவை என்பதை நீங்கள் உணரும்போது, அதை ஒத்துக்கொள்வது மிகத்தைரியமான செயலாகும். உங்களால் முடியவே முடியாது என்பதை உணரும்போது, நீங்கள் செய்யக்கூடிய மிகத் தைரியமான செயல் எதுவெனில், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவிசெய்யும்படி விட்டுவிடுவதேயாகும்.
கடந்த வருடத்தில் இந்த பலத்தை நான் இதற்குமுன் ஒருபோதும் உணர்ந்திராத விதத்தில் அனுபவித்திருக்கிறேன். எந்த மாதத்தில் நான் ஊழியத்தை ஆரம்பிக்க முடிவெடுத்திருந்தேனோ, அதே மாதத்தில் நான் என்னுடைய மூன்றாவது குழந்தையுடன் கர்ப்பமடைந்திருப்பதைக் கண்டறிந்தேன். எனக்கு இது தாங்கக்கூடாத பெரும் பாரத்தைப் போல் இருந்தது. செயல்திறனுள்ளவன் செயலாற்ற முடியாதிருப்பது போலவும், பெருஞ்சாதனையாளன் சாதிக்க இயலாமல் உயிர்மட்டும் தப்பினது போலவும் மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன். இருந்தாலும், தேவனுடைய கிருபையும், ஆவியானவரின் பலமும் என்னுடைய அற்பமான ஊழியத்தை அபரிதமாகப் பெருகப்பண்ணிற்று. (தேவனுக்கே மகிமை உண்டாவதாக.)
பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவிசெய்தார் என்ற நிச்சயத்தை நீங்கள் அனுபவித்த ஒரு தருணம் இருக்கிறதா?
பரிசுத்த ஆவியானவரின் உதவியைப் பயன்படுத்தக்கூடிய விதத்தில், இப்பொழுது உங்களுக்கு ஏதாவது தேவை இருக்கிறதா?
உங்களுக்கு உதவும்படி அவரிடம் கேளுங்கள். உங்களுக்கு உதவிசெய்ய அவரை விட்டுவிடுங்கள்.
கடந்த ஒன்றரை வருடங்களாக, இந்த இரண்டு காரியங்கள்தான் எனக்கு மிகமிக உதவியாக இருந்து வருகின்றன. இந்த வசனத்தை அடிக்கடி நான் மிகவும் சத்தமாகச் சொல்வதுண்டு:
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?
More