இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்மாதிரி
மரணம்
இன்று பெரிய வெள்ளி என்று அழைக்கப்படுவது எனக்கு எப்பொழுதுமே வினோதமாயிருக்கும். என்னுடைய கணவர் என்னைக் கேலி செய்வதுண்டு, ஏனென்றால் நான் பெரும்பாலும் பெரிய வெள்ளியையும், கருப்பு வெள்ளியையும் குழப்பிக் கொள்வதுண்டு, பெரிய வெள்ளியைக் கருப்பு வெள்ளி என்றும்(ஏனென்றால் இது துக்ககரமானது), கருப்பு வெள்ளியை பெரிய வெள்ளி என்றும் (விலை மலிவாக இருப்பதால் இது நல்லது) அழைப்பதுண்டு. (எப்படி!)
இயேசுவின் சிலுவை மரணத்தைத் தியானிக்கும் இந்நாள் மிக நல்ல நாளாக எனக்குத் தோன்றவில்லை. நமக்காக அந்நாளில் அவர் செய்துமுடித்தவைகளெல்லாம் நல்லதுதான் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அவர் உயிர்த்தெழாவிட்டால் அவருடைய மரணத்திற்கு எந்த ஒரு வல்லமையும் இல்லை. ஆகவே இந்த நாள் எனக்கு நன்மைக்கு நேரெதிரான துக்கம் நிறைந்த ஒரு இருண்டநாளாகத் தோன்றுகிறது.
சிலுவையைக் குறித்து சிந்திக்கும்போது, உங்களுக்குள் என்ன உணர்ச்சிகள் மேலிடுகின்றன?
இன்றைய வாசிப்புப் பகுதி நீளமானது. இந்தக் கதை நன்றாகத் தெரிந்திருப்பதால் மேலோட்டமாகவோ அல்லது விட்டுவிட்டோ வாசிக்காதீர்கள். ஒரு புது வழியில் கிறிஸ்துவின் மரணத்தோடு உங்களை இணைத்துக்கொள்ள உங்கள் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள்.
யோவான் 19:1-30 ஐ வாசியுங்கள்.
நான் இதை வாசிக்கும்போது, இயேசு சகித்தக் காரியங்களைக் குறித்து நான் எடுத்த சிலக்குறிப்புகள் இவைகளே: பிலாத்துவினால் சாட்டையால் அடிக்கப்பட்டு, முள்முடி சிரசின்மேல் வைக்கப்பட்டு, பரியாசமூட்டும் சிவப்பங்கி மற்றும் வாழ்த்துதல்களினால் நிந்திக்கப்பட்டு, போர்ச்சேவகரினால் அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவராய் மக்களுக்கு முன்பதாகக் கொண்டுவரப்பட்டார், சிலுவையில் அறையும் என்னும் சத்தத்தைக் கேட்டார், பிலாத்துவினால் குற்றமற்றவர் எனக் காணப்பட்டார், பேச மறுத்தார், தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்தார், நியாயாசனத்திற்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டார், சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுக்கப்பட்டார். தம்முடைய சிலுவையைத் தாமே சுமந்துசென்றார், சிலுவையிலறையப்பட்டார், தன்னுடைய தாயை யோவானிடம் ஒப்படைத்தார், தாகமாயிருந்தார், காடியைப் பெற்றுக்கொண்டார், முடிந்தது என்று சொல்லி, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
அநேக நேரங்களில் கிறிஸ்துவின் சிலுவைக்காட்சி என்னை மரத்துப்போகச் செய்கிறது. எங்குபார்த்தாலும் சிலுவைகள் இருக்கின்றன. நாம் அவைகளை நம்முடைய கழுத்தில் அணிந்துகொள்கிறோம், சுவர்களில் மாட்டி வைக்கிறோம். நாம் சிறு வயதிலிருந்தே ஆலயம் செல்பவர்களாய் இருந்தால், இந்தக் கதையைத் திரும்பத் திரும்ப பலமுறை நாம் கேட்டிருப்போம். நம்முடைய கலாச்சாரம் கண்ணைக் கவரும் வண்ணப்படங்கள் நிறைந்த ஊடகங்களில் மூழ்கி விட்டிருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை, சிலுவையை நாம் அலைஅலையான குன்றுகள், மற்றும் பிரகாசமான சூரிய அஸ்தமனம் இவைகளின் பின்னணியில் பார்க்கும்போது, அது நமக்கு மிகவும் இருண்டதாகத் தோன்றுவதில்லை.
அந்நாளில் இயேசு கடந்துசென்ற, மற்றும் சாதித்தக் காரியங்களைக் குறித்ததான ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கும்படியாக, இன்று நாம் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனைக் கேட்போம்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாகவே, ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவைக் குறித்தும், அவர் அனுபவிக்கவிருக்கும் பாடுகளைக் குறித்தும் எழுதி வைத்திருக்கிறார்:
ஏசாயா 53:4-12 ஐ வாசியுங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?
More