இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்மாதிரி

The Final Lessons: A Holy Week Plan

10 ல் 4 நாள்

மறுதலித்தல்

மறுதலித்தல் அல்லது காட்டிக்கொடுத்தல் என்பது இருதயத்தை உறைய வைக்கும் ஒரு காரியமாகும்.

மறுதலித்தலை நீங்கள் எப்பொழுதாவது அனுபவித்திருக்கிறீர்களா? அப்படியானால் அது உங்களை எவ்விதத்தில் பாதித்தது? இன்னமும் அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது?

இவ்வுலகத்தில் தன்னுடைய கடைசி வேளையில், இயேசு இரண்டு வெவ்வேறு விதமான மறுதலித்தலின் அடிகளை அனுபவித்தார்.

யோவான் 13:21-30, 36-38 ஐ வாசியுங்கள்.

இந்த இரண்டு சூழ்நிலைகளும் எவ்வாறு ஒத்துப்போகின்றன? எவ்வாறு வேறுபடுகின்றன?

இயேசு முழுவதும் மனிதனாக இருந்தார், மனிதனுக்குண்டான உணர்ச்சிகள் எல்லாம் அவருக்கு இருந்தன என்பது நமக்குத் தெரியும், இது அவரை எவ்வாறு பாதித்திருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸிற்கு 30 வெள்ளிக்காசுகள் கொடுக்கப்பட்டது என மத்தேயு 27:3 சொல்லுகிறது. அவரை முற்றிலுமாக மறுதலிப்பதற்கு வெறும் 30 வெள்ளிக்காசுகள்தான். அவன் அதைத் திரும்பக்கொடுக்க முயற்சித்தான், ஆனால் காலம் தாழ்ந்துவிட்டது, இயேசு ஏற்கனவே அதிகாரிகளிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டுவிட்டார்.

இயேசுவை விற்ற யூதாஸை நினைக்கையில், அதிர்ச்சியில் மிக எளிதாக மூச்சுத்திணறல் வந்துவிடுகிறது.

அப்படியானால் பேதுருவைக் குறித்து என்ன சொல்வது? தண்ணீரின் மேல் நடந்தான் (மத்தேயு 14:22-32), மூழ்கும் தருவாயில் காப்பாற்றப்பட்டான், அன்பையும், பக்தியையும் காத்துக்கொள்ள அவனுக்கு இது போதாதா? தன் கால்களையேக் கழுவின கிறிஸ்துவை அவன் மறுதலிப்பானா?

ஆமாம். நாமும் அவனைப் போலத்தான் இருக்கிறோம்.

ஆனால் நமக்கு மிக நல்ல செய்தி ஒன்று இருக்கிறது:

ரோமர் 8:38-39 ஐ வாசியுங்கள்.

நீங்கள் இதைக் குழப்பிக்கொள்ளாதீர்கள். நீங்கள் செய்யும் செயல்கள் எதுவுமே அவருடைய அன்பை மாற்றாது. நீங்கள் செய்யும் செயல்கள் எதுவுமே அவர் உங்களில் செய்திருக்கின்ற கிரியைகளை மாற்றாது. நீங்கள் செய்யும் செயல்கள் எதுவுமே உங்களை அவரை விட்டுப் பிரிக்காது.

சமீபகாலமாக, குழந்தைகளை வளர்ப்பதென்பது உண்மையாகவே மிகக்கடினமான காரியமாய் இருந்து வருகிறது. நாம் மிகவும் சோர்ந்துபோகிறோம், குழந்தை வளர்ப்பதில் தேவன் நமக்கு வழிகாட்டும்படி நாம் அவரை நோக்கிக் கெஞ்சுகிறோம். சில வாரங்களுக்கு முன்பதாக நான் செய்யத் தொடங்கின காரியம் என்னவென்றால், என் மகளின் மதிய உணவு பாத்திரத்தில் இதய வடிவிலான 2 சாக்லேட்களை வைத்துவிடுகிறேன். வீட்டைவிட்டு வெளியே செல்லும் நேரங்கள், மற்றும் பள்ளிக்குச் செல்லும் நேரங்களில் ஏற்படும் அடம்பிடித்தல்கள், மற்றும் அழுகைகள் என்பன போன்ற பிரச்சனைகள் தவிர்க்க முடியாததுதான். ஆனால் பள்ளிக்கு நடந்துசெல்வதற்கு முன்பதாக, நான் என் மகளின் கையைப் பிடித்துக்கொண்டு, அவளண்டை குனிந்து, அவள் காதில், “உன்னுடைய மதிய உணவு பாத்திரத்தில் உள்ள இதய வடிவிலான இரண்டு சாக்லேட்கள் எதை நினைவுபடுத்துகின்றன?” என்று மெதுவாகக் கேட்பேன். அவளுக்கு இப்பொழுது தெரிகிறது. இந்த அம்மாவின் இருதயத்தைக் கருணையுடன் உருகச்செய்யும், தன்னுடைய இனிமையான புன்முறுவலுடன் சிரித்துக்கொண்டே, அவள் என்னிடம் சொல்வாள், “நான் செய்யும் செயல்கள் எதுவும் நீங்களோ அல்லது அப்பாவோ என் மேல் வைத்திருக்கும் அன்பை மாற்றாது” என்று.

நீங்கள் என்ன தீர்மானங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்பதோ அல்லது எவ்விதமான மறுதலித்தல்களை அனுபவித்திருக்கிறீர்கள் என்பதோ எனக்குத் தெரியாது, ஆனால் இது மட்டும் எனக்குத் தெரியும்:

உங்கள் தகப்பன் உங்களை நேசிக்கிறார், நீங்கள் செய்யும் செயல்கள் எதுவும் அதை மாற்றாது.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

The Final Lessons: A Holy Week Plan

இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக சேக்ரெட் ஹாலிடேஸ்-உடன் பெக்கி கைசர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.sacredholidays.com ஐ பார்க்கவும்.