இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்மாதிரி

The Final Lessons: A Holy Week Plan

10 ல் 3 நாள்

அன்புகூருங்கள், சேவைசெய்யுங்கள்

நான் சற்று அதிகமாக சுத்தம் பார்ப்பவள், எனக்கு ஐந்து வயது மற்றும் அதற்குக் கீழுள்ள மூன்று பெண்குழந்தைகள் இருப்பதினால் இப்பொழுது அது எனக்குப் பெரும்பிரச்சனையாக உள்ளது. என்னால் இதை சமாளிக்கமுடியவில்லை, அநேக நேரங்களில் இது என்னைப் பைத்தியம் பிடித்தவள் போலாக்குகிறது. ஒருநாள் நான், “அலங்கோலத்தை மன்னிக்கவும். என் குழந்தைகள் நினைவுகளை உருவாக்குகிறார்கள்” என்ற அடையாளக்குறி ஒன்றை வாங்கி, அதைத் தொங்கவிட்டேன். லெகோ விளையாட்டுப் பொருட்கள், துவைக்கவேண்டிய துணிமணிகள், குழந்தைகளின் குட்டிப் பாவாடைகள், அழுக்கான பாத்திரங்கள், வெகுநாட்களுக்கு முன்பே துவைக்கப்பட்டு மடிப்பதற்குத் தயாராக உள்ள டவல்கள் இவைகளுக்கு முன்பாக நான் கடந்து செல்லுகையில், ஒரு நாளில் 100 முறை அந்த அடையாளக்குறியை நான் கடந்து செல்கிறேன், நான் எனக்குள்ளேயே சொல்லிக்கொள்கிறேன்: “நினைவுகளை உருவாக்கிக்கொள், பெக்கி. நினைவுகளை உருவாக்கிக்கொள்” என்று.

அலங்கோலத்தை சரிசெய்வதில் நான் மிகவும் குழம்பிப்போகிறேன், அதினால் நேசிப்பதை விட்டுவிடுகிறேன்.

இன்றைய வாசிப்புப் பகுதி நம்மை, இயேசுவோடு கணிசமான அளவு நேரம் செலவழித்து, அவரால் நேசிக்கப்பட்டு, அவருடையவர்களென்று எண்ணப்பட்டவர்களோடு இயேசு இருந்த இன்னொரு மேஜைக்கு எடுத்துச் செல்கிறது.

யோவான் 13:1-17 ஐ வாசியுங்கள், இயேசு சீடர்களிடம் நடந்துகொண்ட விதத்தைக் கவனியுங்கள்.

இயேசு, தேவகுமாரன், மற்றும் மனுக்குலத்தின் மீட்பர், அவர் தன்னைத்தான் தாழ்த்தி, 12 அழுக்கான கால்களைக் கழுவினார். ஆனாலும் அந்தக் கால்களிலுள்ள அழுக்கு அல்லது துர்நாற்றத்தை அவர் உணர்ந்ததாக நான் நினைக்கவில்லை. தாம் நேசிக்கிறவர்களோடு இருக்கப்போகும் கடைசி நேரம் அது என்பதை அவர் அறிந்திருந்தார், மேலும் தாம் கற்பிக்கப்போகும் பாடத்தை அவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனவும் விரும்பினார். இந்த தருணத்தில் வார்த்தைகளால் புரியவைப்பதென்பது கடினமானக் காரியம். ஆகவே அவர் தம்மைத்தாம் தாழ்த்தி, அழுக்கைத் துடைத்து அவர்களுக்கு மாதிரியானார்.

யோவான் 13:15-17 ஐ திரும்பவும் வாசியுங்கள்.

நீங்கள் சேவைசெய்யும்(அல்லது சேவை செய்யவேண்டிய) மக்கள் யார்யார்? உங்களுடன் வேலைசெய்பவர் அல்லது உங்களுக்கு வேலைசெய்பவர்? குழந்தைகள்? அறைத்தோழர்கள் அல்லது வாழ்க்கைத்துணைவர்? நண்பர்கள்? அக்கம்பக்கத்தார்?

உவமையில் சொல்வதானால், இந்த வாரத்தில் நீங்கள் கால்களைக் கழுவக்கூடிய ஒரு வழி என்ன? அல்லது உண்மையாகவே நீங்கள் ஒருவருடைய கால்களைக் கழுவ வேண்டியிருக்கும், அது யாருடையது?

யோவான் 13:34-35 ஐ இப்பொழுது வாசியுங்கள்.

ஒருவருக்கொருவர் சேவைசெய்வதே நாம் ஒருவரிலொருவர் அன்புகூறுவதாகும். அப்படி செய்வதினால் மற்றவர்கள் நம்மைக் கிறிஸ்தவர்களென்று அறிந்துகொள்வார்கள் என்று இயேசு சொல்கிறார். அடுத்தவர்கள், நீங்கள் கிறிஸ்தவர், மற்றும் இயேசுவைப் பின்பற்றுகிறவர் என்பதை அறிந்துகொள்கிறார்களா?

சமூகவலைத்தளங்களில், அநேகர் கிறிஸ்தவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் விதம் உண்மையாகவே வேதனையளிக்கத்தக்கதாய் இருக்கிறது. சேவைசெய்வது, அன்புகூறுவது என்பதான நம்முடைய ஊழியப்பணியை நாம் விட்டுவிட்டோம். கிறிஸ்துவின் சாயலைப் பின்பற்றாதவர்களை வடிவமைக்க முயற்சிப்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறோம். மற்றவர்களை நம்மோடு இசைந்துபோகும்படி கட்டாயப்படுத்த அல்ல, சேவைசெய்யவும், அன்புகூறவுமே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

குற்றம்காண்பதற்குப் பதிலாக, சேவைசெய்யும் மற்றும் அன்புகூறும் ஒரு அணுகுமுறை, மற்றவர்கள் கிறிஸ்துவை அனுபவிக்கக்கூடிய விதத்தை எவ்வாறு மாற்றும்?

உலகத்தை மாற்றுவதோ அல்லது உலகத்தை இரட்சிப்பதோ நமக்குரியதல்ல என்பதை அறிந்துகொள்ளுதல் எவ்வளவு விடுதலையளிப்பதாய் இருக்கிறது! நம்மைநாம் தாழ்த்தி, மற்றவர்களுக்கு சேவைசெய்து, அவர்களில் அன்புகூறுவதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Final Lessons: A Holy Week Plan

இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக சேக்ரெட் ஹாலிடேஸ்-உடன் பெக்கி கைசர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.sacredholidays.com ஐ பார்க்கவும்.