இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்மாதிரி

The Final Lessons: A Holy Week Plan

10 ல் 2 நாள்

"ஆராதனை"

புனித வாரத்துக்கு உங்களை வரவேற்கிறோம்- இன்று குருத்தோலை ஞாயிறு. கிறிஸ்துவைப் பின்பற்றுவதைப் பற்றி நாம் இரண்டாம் பாடத்தில் (முதற்பாடத்தில் நமது மிகச் சிறந்தவற்றை தியாகம் செய்வதைப் பற்றியது) பற்றிப் பார்ப்போம்.

யோவான் 12:12-19 வாசிக்கவும்.

லாசருவுக்கு இயேசு செய்திருந்த அற்புதத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட ஜனங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர். தங்கள் தேவைக்கான குணமாக்குதலை ஆசிக்காமல் அவர்கள் கபடமின்றி அவரை ஆராதனை செய்தனர் என்பது எனக்கு சுவாரசியமாகத் தெரிகிறது. அவர் செய்தவற்றைக் குறித்து அச்சமும் வியப்பும் கலந்து, அவர்கள் அவரை ஆராதனை மட்டுமே செய்யக்கூடிய நிலையில் இருந்தார்கள்.

அந்த ஜனக்கூட்டத்தில் நீங்கள் இருந்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறீர்கள்?

அங்கிருந்த பலரும் பின்னால் திரும்பிக் கொண்டு, தங்களது ஐ போனை மேலாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இயேசு அருகில் கடந்து செல்லும்போது சரியாக செல்பி எடுத்து தாங்கள் இயேசுவுடன் இருந்ததை உடனுக்குடன் பதிவேற்றம் செய்து #ஓசன்னா என்று குறிப்பிடத் தயாராக இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். பின்னர் நமது செயலியை புத்தாக்கம் செய்து யாரெல்லாம் நமக்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் என்று பார்ப்போம், ஒருவேளை இயேசுவே கூட நாம் அவரை தொடர் செய்வதை விரும்புகிறாரோ என்றும் பார்ப்போம்.

இயேசுவின் எளிமையை நம் ஊடகத்தின் குழப்பங்களில் இழந்து விட்டோம். நம் வாழ்க்கையும் இயேசுவுடனான நம் உறவுமே நமது சொந்த வாழ்க்கையைப் பற்றியது என்று தான் நம் கலாச்சாரம் வலுப்படுத்துகிறது.

அந்த ஜனக்கூட்டமோ அதை சரியாகப் புரிந்து கொண்டது. இது இயேசுவைப் பற்றியது என்று புரிந்து கொண்டனர்.

ஓசன்னா என்பது ஒரு வகையில் ஆராதனைக்குரிய வார்த்தை தான், ஆனால் அது இரட்சிப்பு அல்லது மீட்பு - அதைக் கேட்பது அல்லது அதைப் பிரசித்தம் செய்வது என்பதையும் குறிக்கும் வார்த்தை ஆகும்.

கர்த்தர் உன்னை எவற்றிலிருந்து உன்னை மீட்டிருக்கிறார்?

இன்று எதிலிருந்து உன்னைக் கர்த்தர் மீட்க வேண்டும்?

ஒரு புதுவிதமான ஓசன்னாவைப் பாடி நாம் இன்றைய பாடத்தை முடிக்கலாம்.
நீங்கள் பாடும் வாசகங்கள் உங்கள் ஜெபமாக அமையட்டும். ஓசன்னா என்று பாடும் போது உங்களைக் கர்த்தர் இன்று எதிலிருந்து மீட்க வேண்டுமென்பதை பாவித்துக் கொள்ளுங்கள். ஓசன்னா என்று பாடும் போது உங்களைக் கர்த்தர் எவற்றிலிருந்தெல்லாம் விடுவித்திருக்கிறார் என்பதை நினைத்து துதி செய்யுங்கள்.

ஆம் கர்த்தாவே, "எங்கள் இருதயத்தை குணமாக்கி சுத்திகரியும்" என்று வேண்டுகிறோம். காணக்கூடாதவற்றை காணும்படி என் கண்களைத் திறந்தருளும். என்னை எவ்வளவாக நீர் நேசிக்கிறீரோ அவ்வளவாக நானும் நேசிக்கும்படி எனக்கு காண்பித்தருளும். உமது உள்ளத்தை உடைக்கும் காரியங்கள் என் உள்ளத்தையும் உடைக்கச் செய்யும். உமது இராஜ்ஜியத்துக்காக எனது அனைத்தையும் அர்ப்பணிக்கிறேன். நான் இவ்வுலகிலிருந்து நித்தியத்துக்கு கடந்து போகும்போது, ஓசன்னா, ஓசன்னா, உன்னதத்திலே ஓசன்னா.”

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

The Final Lessons: A Holy Week Plan

இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக சேக்ரெட் ஹாலிடேஸ்-உடன் பெக்கி கைசர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.sacredholidays.com ஐ பார்க்கவும்.