இயேசுவே ராஜா: திமோத்தி கெல்லரின் உயிர்த்தெழுந்த நாளின் தியானம்மாதிரி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

9 ல் 1 நாள்

"ராஜாவால் அழைப்புப் பெற்றவன்"

நற்செய்தி அறிவுரை அல்ல: தேவனிடம் நெருங்கி வரும் வழியை கண்டடைய நீங்கள் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது நல்ல செய்தி; இயேசு அதை உங்களுக்காக ஏற்கனவே செய்திருக்கிறார். இது முற்றிலும் தகுதியற்ற நமக்கான தேவனின் தயவு. இது அவரது சுத்த கிருபையால் நாம் பெறும் ஒரு பரிசு. நாம் அந்தப் பரிசைப் பற்றிக்கொண்டு, அதைப் பிடித்துக் கொண்டால், இயேசுவின் அழைப்பானது நம்மை வெறி அல்லது மிதமான நிலைக்கு இழுக்காது. இயேசுவை நமது முழுமையான குறிக்கோளாகவும், முன்னுரிமையாகவும், கொண்டு அவரையே சுற்றி வர ஆர்வமாக இருப்போம்; அது மட்டுமல்லாது வேறு முன்னுரிமைகள், வேறு நம்பிக்கை கொண்ட ஒருவரை நாம் சந்திக்கும் போது, ​​அவர்கள் நம்மை விட தாழ்ந்தவர்கள் என்று கருதமாட்டோம். உண்மையில் அவர்களை ஒடுக்குவதை விட அவர்களுக்கு சேவை செய்ய முற்படுவோம்.

ஏன்? ஏனெனில் நற்செய்தி அறிவுரைகளைப் பின்பற்றுவதைத் தேர்ந்தெடுப்பது அல்ல, அது ஒரு ராஜாவைப் பின்பற்ற அழைக்கப்படுவதைப் பற்றியது. என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லும் சக்தியும் அதிகாரமும் உள்ள ஒருவர் மட்டுமல்ல - செய்ய வேண்டியதைச் செய்ய வல்லமையும் அதிகாரமும் உள்ள ஒருவர், பின்னர் அதை உங்களுக்கு நல்ல செய்தியாக வழங்குவார்.

அத்தகைய அதிகாரத்தை நாம் எங்கே பார்க்கிறோம்? இயேசுவின் ஞானஸ்நானத்தில் அவருடைய தெய்வீக அதிகாரத்தை அறிவிக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிகுறிகளை கண்டோம். சீமோன், அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான் தாமதமின்றி இயேசுவைப் பின்தொடர்வதைப் பார்க்கிறோம் - எனவே அவருடைய அழைப்பிற்கு அதிகாரம் உள்ளது. இந்த கருப்பொருளில் மாற்கு தொடர்ந்து இவ்வாறாக கூறுகிறார்:

"பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார். அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால் அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்."
(மாற்கு 1: 21-22)

மாற்கு அதிகாரம் என்ற வார்த்தையை முதல் முறையாகப் பயன்படுத்துகிறார்; இந்த வார்த்தையின் அர்த்தம் "உண்மையான அல்லது உள் இருந்து". இது ஆசிரியர் என்ற வார்த்தையின் அதே மூலத்திலிருந்து வருகிறது. மாற்கு என்றால், இயேசு வாழ்க்கையைப் பற்றி தனது உண்மையான அதிகாரத்தைக் கொண்டு கற்பித்தார் என்பதே. அது மாறுபாடு அற்றது.

இந்த பரிபூரண ராஜாவிடம் நீங்கள் முழுமையாக சரணடைந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? உங்கள் பணி? குடும்ப வாழ்க்கை? நிதி வாழ்க்கை? சமூக வாழ்க்கை?

திமோதி கெல்லர் எழுதிய JESUS ​​THE KING இலிருந்து ஒரு பகுதி, பெங்குயின் குழு (யுஎஸ்ஏ) எல்எல்சி, ஏ பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் உறுப்பினரான ரிவர்ஹெட் புக்ஸின் ஏற்பாட்டின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டது. பதிப்புரிமை © 2011 திமோதி கெல்லர்

மற்றும் திமோதி கெல்லர் மற்றும் ஸ்பென்ஸ் ஷெல்டன் எழுதிய JESUS THE KING கையேட்டில் இருந்து, பதிப்புரிமை (சி) 2015 ஹாண்டர்காலின் கிறிஸ்டியன் பப்ளிஷர்ஸின் ஒரு பிரிவான சோண்டர்வனின்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

நியூயார்க் டைம்ஸின் அதிகபட்ச புத்தக பிரதிகளின் விற்பனைக்கு காரணமான எழுத்தாளரும், புகழ்பெற்ற போதகருமான திமோத்தி கெல்லர், மாற்கு எழுதின சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறபடி இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தொடர் அத்தியாயங்களை பகிர்கிறார். இக்கதைகளை கூர்ந்து கவனித்தால் பிதாவானவரின் மகனின் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும், உயிர்த்தெழுதலின் நாள் வரை உள்ள தொடர்பினை ஒரு புது கண்ணோட்டத்துடன் இவர் வழங்கியிருப்பதை காணலாம். சிறு குழுக்களுக்கு, இயேசுவே ராஜா இப்போது புத்தகமாகவும், பாட வழிகாட்டியாகவும், எங்கேயெல்லாம் புத்தகங்கள் விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிடைக்கிறது.

More

பெங்குவின் ராண்டம் ஹவுஸ், ஹார்ப்பர்காலின்ஸ் கிறிஸ்துவ பதிப்பகத்தாரின் பாட வழிகாட்டி, இக்குழுமத்தின் அங்கத்தினரான ரிவர்ஹெட் புக்சின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். மேலும் தகவல் அறிய: http://www.penguin.com/book/jesus-the-king-by-timothy-keller/9781594486661 அல்லது http://www.zondervan.com/jesus-the-king-study-guide க்குச் செல்லவும்.