இயேசுவே ராஜா: திமோத்தி கெல்லரின் உயிர்த்தெழுந்த நாளின் தியானம்மாதிரி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

9 ல் 6 நாள்

"சாத்தியமற்றதை சாத்தியமாக்குதல்"

இந்த சந்திப்பில், நம் அனைவரிடத்திலும் ஏதோ தீவிரமான தவறு இருக்கிறது என்று இயேசு கூறுகிறார் - பணத்திற்கு அது நம்மைக் குருடாக்கும் சக்தி உண்டு. உண்மையில், நமது உண்மையான ஆவிக்குரிய நிலையிலிருந்து நம்மை ஏமாற்றுவதற்கு அதற்கு அதிக வல்லமை உண்டு, அதைப் பார்க்க தேவனிடமிருந்து ஒரு கிருபையான, அற்புதமான தலையீடு தேவைப்படுகிறது. தேவன் இல்லாமல், ஒரு அதிசயம் அவருடைய கிருபை இல்லாமல் இது சாத்தியமற்றது.

இந்த இளைஞனுக்கு இயேசு எப்படி அறிவுரை கூறினார் என்பதைக் கவனியுங்கள். ஆம், இந்த மனிதருக்கு ஆலோசனை தேவை, வெளியில் பார்த்தால் அவன் முற்றிலும் நன்றாகவே இருந்தான். அவன் பணக்காரனாக இருந்தான், அவன் இளமையாக இருந்தான், அநேகமாக அவன் நல்ல தோற்றமுடையவனாக இருந்தான்—பணக்காரனாகவும் இளமையாகவும் இருந்துவிட்டு, அழகாக இல்லாமல் இருப்பது கடினம். ஆனால் அவன் அதை ஒன்றாகக் கொண்டிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால், அவன் ஒருபோதும் இயேசுவிடம் வந்து, “நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டிருக்க மாட்டான்.

எந்த ஒரு பக்தியுள்ள யூதருக்கும் இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்திருக்கும். ரபீக்கள் தங்கள் எழுத்துக்களிலும் போதனைகளிலும் இந்தக் கேள்வியை எப்போதும் முன்வைத்தனர். அவர்களின் பதில் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தது; இந்த விஷயத்தில் மாறுபட்ட சிந்தனைப் பள்ளிகள் எதுவும் இல்லை. பதில் "தேவனின் கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து, எல்லா பாவங்களையும் தவிர்ப்பதே." இந்த பதிலை அந்த இளைஞன் அறிந்திருப்பான். பிறகு ஏன் இயேசுவிடம் கேட்டான்?

இயேசுவின் புலனுணர்வுள்ள, “உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு” என்ற கூற்று, அந்த இளைஞனின் போராட்டத்தின் சாராம்சத்தை உணர நமக்கு உதவுகிறது. அந்த மனிதன் இயேசுவிடம், “உங்களுக்கு தெரியுமா, நான் எல்லாவற்றையும் சரியாகச் செய்தேன்: நான் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், மத ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளேன். நீங்கள் ஒரு நல்ல ரப்பி என்று நான் கேள்விப்பட்டேன், நான் தவறவிட்ட ஏதாவது இருக்கிறதா என்றும், நான் கவனிக்காமல் விட்டது ஏதும் இருக்கிறதா என்றுமே காண வந்தேன் என்றான். என்னில் ஏதோ குறை இருப்பதாக நான் உணர்கிறேன்."

நிச்சயமாக, ஒரு குறைவு உண்டு. ஏனென்றால், நித்திய ஜீவனைப் பெறுவதற்கு ஓடும் எவரும், அவர்கள் சாதித்த அனைத்தையும் மீறி, ஒரு வெறுமை, ஒரு பாதுகாப்பின்மை, ஒரு சந்தேகம் இருப்பதை உணர்வார்கள். ஏதோ ஒன்று தவறியிருக்க வேண்டும். நாம் போதுமானவர்களா என்பதை எவராலும் எப்படி அறிந்து கொள்ள முடியும்?

செல்வம் உருவாக்கும் மன போரட்டத்தில் சிக்கி கொள்ளாமல், அடிபணியாமல் எப்படி வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடரலாம்? பணத்தைப் பற்றிய உங்கள் அணுகுமுறையை உங்களுக்கு மாற்றிய அல்லது மாற்றக்கூடிய சில நற்செய்தியின் வழிகள் யாவை?

திமோதி கெல்லர் எழுதிய JESUS THE KING இலிருந்து ஒரு பகுதி
பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனமான பெங்குயின் குரூப் (யுஎஸ்ஏ) எல்எல்சியின் உறுப்பினரான ரிவர்ஹெட் புக்ஸ் உடன் ஏற்பாட்டின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டது. பதிப்புரிமை © 2011 டிமோதி கெல்லர்

மற்றும் திமோதி கெல்லர் மற்றும் ஸ்பென்ஸ் ஷெல்டனின் JESUS THE KING படிப்பு ஏடு, ஹார்பர்காலின்ஸ் கிறிஸ்டியன் பப்ளிஷர்ஸின் ஒரு பிரிவான Zondervan மூலம் பதிப்புரிமை (c) 2015.

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

நியூயார்க் டைம்ஸின் அதிகபட்ச புத்தக பிரதிகளின் விற்பனைக்கு காரணமான எழுத்தாளரும், புகழ்பெற்ற போதகருமான திமோத்தி கெல்லர், மாற்கு எழுதின சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறபடி இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தொடர் அத்தியாயங்களை பகிர்கிறார். இக்கதைகளை கூர்ந்து கவனித்தால் பிதாவானவரின் மகனின் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும், உயிர்த்தெழுதலின் நாள் வரை உள்ள தொடர்பினை ஒரு புது கண்ணோட்டத்துடன் இவர் வழங்கியிருப்பதை காணலாம். சிறு குழுக்களுக்கு, இயேசுவே ராஜா இப்போது புத்தகமாகவும், பாட வழிகாட்டியாகவும், எங்கேயெல்லாம் புத்தகங்கள் விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிடைக்கிறது.

More

பெங்குவின் ராண்டம் ஹவுஸ், ஹார்ப்பர்காலின்ஸ் கிறிஸ்துவ பதிப்பகத்தாரின் பாட வழிகாட்டி, இக்குழுமத்தின் அங்கத்தினரான ரிவர்ஹெட் புக்சின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். மேலும் தகவல் அறிய: http://www.penguin.com/book/jesus-the-king-by-timothy-keller/9781594486661 அல்லது http://www.zondervan.com/jesus-the-king-study-guide க்குச் செல்லவும்.