இயேசுவே ராஜா: திமோத்தி கெல்லரின் உயிர்த்தெழுந்த நாளின் தியானம்மாதிரி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

9 ல் 4 நாள்

"உரிமையற்ற உறுதிப்பாடு"

"அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்."
(மாற்கு 7:28-30)

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவள் சொல்கிறாள், "ஆம், ஆண்டவரே, ஆனால் நாய்க்குட்டிகள் அந்த மேசையிலிருந்தும் சாப்பிடுகின்றன, என்னுடையதுக்காக நான் இங்கே இருக்கிறேன்." இயேசு அவளுக்கு ஒரு உவமையைச் சொன்னார், அதில் அவர் அவளுக்கு சவால் மற்றும் வாய்ப்பைக் கொடுத்தார், அவள் அதைப் பெறுகிறாள். அவள் சவாலுக்கு பதிலளிக்கிறாள்: “சரி ஆண்டவரே, எனக்கு புரிகிறது. நான் இஸ்ரவேலைச் சேர்ந்தவள் அல்ல தான், இஸ்ரவேலர்கள் வணங்கும் தேவனை நான் வணங்குவதில்லை. எனவே, எனக்கு மேஜையில் இடம் இல்லை. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்."

இது ஆச்சரியமாக இல்லையா? அவள் புண்படவில்லை; அவள் உரிமையில் நிற்கவில்லை. அவள் சொல்கிறாள், “சரி ஆண்டவரே. எனக்கு மேஜையில் இடம் இல்லாமல் இருக்கலாம் - ஆனால் உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மேசையில் போதுமானதை விட அதிகமான அளவுக்கு உள்ளது, எனக்கு இப்போது என்னுடையது தேவை. அவள் மிகவும் மரியாதைக்குரிய விதத்தில் இயேசுவுடன் மல்யுத்தம் செய்கிறாள், அவள் மாட்டேன் என்ற பதிலையும் எடுக்க மாட்டாள். இந்த பெண் செய்வதை நான் விரும்புகிறேன்.

மேற்கத்திய கலாச்சாரங்களில் இதுபோன்ற உறுதியான தன்மை எதுவும் இல்லை. நமது உரிமைகளை வலியுறுத்துவது மட்டுமே நம்மிடம் உள்ளது. நாம் நமது உரிமைகளுக்காக நின்று, நமது கண்ணியம் மற்றும் நமது நன்மையின் மீது நின்று, "இதுதான் எனக்குக் கடமைப்பட்டிருக்கிறது" என்று கூறினால் ஒழிய எப்படிப் போராடுவது என்று நமக்கு தெரியாது. ஆனால் இந்தப் பெண் அப்படிச் செய்யவில்லை. இது உரிமையில்லா போராட்டம், இது பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. "ஆண்டவரே, என் நன்மையின் அடிப்படையில் எனக்கு தகுதியானதை எனக்குக் கொடுங்கள்" என்று அவள் கூறவில்லை. அவள் சொல்கிறாள், "உங்களது நன்மையின் அடிப்படையில் எனக்கு தகுதியில்லாததை எனக்குக் கொடுங்கள் - எனக்கு இப்போது அது தேவை." அதில் மறைந்திருக்கும் சவால் மற்றும் சலுகை இரண்டையும் அவள் உணர்ந்து ஏற்றுக்கொள்வது எவ்வளவு குறிப்பிடத்தக்கது என்று நீங்கள் பார்க்கிறீர்களா?

அவளுக்கு இயேசுவின் பதில், நமது மொழிபெயர்ப்பில் "நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம்" என்கிறார். சில மொழிபெயர்ப்புகளில் இயேசு "அற்புதமான பதில், நம்பமுடியாத பதில்" என்று கூறியிருக்கிறார். அதனால் அவளுடைய வேண்டுகோளுக்கு பதில் கிடைத்து, அவளுடைய மகள் குணமாகிறாள்.

நீங்கள் தேவனை அணுகும் விதத்தை இந்த புறஜாதி பெண்ணின் நம்பிக்கை எவ்வாறு மாற்றியமைக்கும்?

திமோதி கெல்லர் எழுதிய JESUS THE KING இலிருந்து ஒரு பகுதி
பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனமான பெங்குயின் குரூப் (யுஎஸ்ஏ) எல்எல்சியின் உறுப்பினரான ரிவர்ஹெட் புக்ஸ் உடன் ஏற்பாட்டின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டது. பதிப்புரிமை © 2011 டிமோதி கெல்லர்

மற்றும் திமோதி கெல்லர் மற்றும் ஸ்பென்ஸ் ஷெல்டனின் JESUS THE KING பட்டிபு ஏடு, ஹார்பர்காலின்ஸ் கிறிஸ்டியன் பப்ளிஷர்ஸின் ஒரு பிரிவான Zondervan மூலம் பதிப்புரிமை (c) 2015.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

நியூயார்க் டைம்ஸின் அதிகபட்ச புத்தக பிரதிகளின் விற்பனைக்கு காரணமான எழுத்தாளரும், புகழ்பெற்ற போதகருமான திமோத்தி கெல்லர், மாற்கு எழுதின சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறபடி இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தொடர் அத்தியாயங்களை பகிர்கிறார். இக்கதைகளை கூர்ந்து கவனித்தால் பிதாவானவரின் மகனின் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும், உயிர்த்தெழுதலின் நாள் வரை உள்ள தொடர்பினை ஒரு புது கண்ணோட்டத்துடன் இவர் வழங்கியிருப்பதை காணலாம். சிறு குழுக்களுக்கு, இயேசுவே ராஜா இப்போது புத்தகமாகவும், பாட வழிகாட்டியாகவும், எங்கேயெல்லாம் புத்தகங்கள் விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிடைக்கிறது.

More

பெங்குவின் ராண்டம் ஹவுஸ், ஹார்ப்பர்காலின்ஸ் கிறிஸ்துவ பதிப்பகத்தாரின் பாட வழிகாட்டி, இக்குழுமத்தின் அங்கத்தினரான ரிவர்ஹெட் புக்சின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். மேலும் தகவல் அறிய: http://www.penguin.com/book/jesus-the-king-by-timothy-keller/9781594486661 அல்லது http://www.zondervan.com/jesus-the-king-study-guide க்குச் செல்லவும்.