இயேசுவே ராஜா: திமோத்தி கெல்லரின் உயிர்த்தெழுந்த நாளின் தியானம்மாதிரி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

9 ல் 8 நாள்

"சிலுவையில் அறையப்பட்ட ராஜா"

பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டபோது, இயேசு, "நான் அவர்தான்" என்றார். பின்பும், இயேசு: “மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார். இது ஒரு ஆச்சரியமான அறிக்கை. இது தெய்வீக கூற்று.

எபிரேய மொழியில் உள்ள பல உரைகளைக்கொண்டோ அல்லது கருப்பொருள்க்ளைக்கொண்டோ, உருவங்களைக்கொண்டோ அல்லது உருவகங்களைக்கொண்டோ அல்லது பத்திகளைக்கொண்டோ, இவையெல்லவற்றிலும் இயேசு, எதெனும் ஒன்றை பயன்படுத்தி அவர் யார் என்பதைச் அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்களாம் - ஆனால் இங்கு அவர் உபயோகப்படுத்தும் சொல் நியாயதிபதி. அவருடைய உரையின் மூலம், இயேசு வேண்டுமென்றே முரண்பாட்டைக் காணும்படி நம்மை வற்புறுத்துகிறார். ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் உலகம் முழுவதுக்கும் நியாயதிபதி, இப்பொழுது உலகத்தால் நியாயந்தீர்க்கப்படுகிறார் வருகிற காலங்களில் அவர் நியாந்தீர்ப்பார். அவர் நியாயாசனத்தில் இருக்க வேண்டும், நாம் கப்பல்துறையில் சங்கிலியில் இருக்க வேண்டும். எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

இயேசு தன்னை இந்த நியாதிபதி என்று கூறியவுடன், அவர் தன்னை தெய்வம் என்று கூறியவுடன், மாற்கு இவ்வாறு எழுதுகிறார்:

"அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள். அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்."
(மாற்கு 14:62–65)

பிரதான ஆசாரியன் தனது சொந்த ஆடைகளை கிழித்து எறிகிறான், இது மிகப்பெரிய சீற்றம், திகில் மற்றும் துயரத்தின் அடையாளம். பின்னர் முழு விசாரணையும் மோசமடைகிறது. உண்மையில் அது இனி ஒரு விசாரணை அல்ல; அது ஒரு கலவரம். மக்களும் நீதிபதிகளும் அவர் மீது எச்சில் துப்பவும் அடிக்கவும் தொடங்குகிறார்கள். விசாரணையின் நடுவில், அவர்கள் முற்றிலும் வெறித்தனமாக செல்படுகிறார்கள். அவர் உடனடியாக தேவ தூஷனம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரணத்தண்டனைக்குத் தள்ளப்படுகிறார்.

நீங்களும் நானும் இயேசுவின் முகத்தில் துப்ப முடியாது என்றாலும், நாம் அவரை கேலி செய்து நிராகரிக்கலாம். எந்தெந்த வழிகளில் நாம் இயேசுவை தேவன் அல்ல என்று நிராகரிக்கிறோம்?

திமோதி கெல்லர் எழுதிய "JESUS THE KING" இலிருந்து ஒரு பகுதி
பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனமான பெங்குயின் குரூப் (யுஎஸ்ஏ) எல்எல்சியின் உறுப்பினரான ரிவர்ஹெட் புக்ஸ் உடன் ஏற்பாட்டின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டது. பதிப்புரிமை © 2011 டிமோதி கெல்லர்

மற்றும் திமோதி கெல்லர் மற்றும் ஸ்பென்ஸ் ஷெல்டனின் "JESUS THE KING இன் வழிகாட்டி", ஹார்பர்காலின்ஸ் கிறிஸ்டியன் பப்ளிஷர்ஸின் ஒரு பிரிவான Zondervan மூலம் பதிப்புரிமை (c).

வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

நியூயார்க் டைம்ஸின் அதிகபட்ச புத்தக பிரதிகளின் விற்பனைக்கு காரணமான எழுத்தாளரும், புகழ்பெற்ற போதகருமான திமோத்தி கெல்லர், மாற்கு எழுதின சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறபடி இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தொடர் அத்தியாயங்களை பகிர்கிறார். இக்கதைகளை கூர்ந்து கவனித்தால் பிதாவானவரின் மகனின் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும், உயிர்த்தெழுதலின் நாள் வரை உள்ள தொடர்பினை ஒரு புது கண்ணோட்டத்துடன் இவர் வழங்கியிருப்பதை காணலாம். சிறு குழுக்களுக்கு, இயேசுவே ராஜா இப்போது புத்தகமாகவும், பாட வழிகாட்டியாகவும், எங்கேயெல்லாம் புத்தகங்கள் விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிடைக்கிறது.

More

பெங்குவின் ராண்டம் ஹவுஸ், ஹார்ப்பர்காலின்ஸ் கிறிஸ்துவ பதிப்பகத்தாரின் பாட வழிகாட்டி, இக்குழுமத்தின் அங்கத்தினரான ரிவர்ஹெட் புக்சின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். மேலும் தகவல் அறிய: http://www.penguin.com/book/jesus-the-king-by-timothy-keller/9781594486661 அல்லது http://www.zondervan.com/jesus-the-king-study-guide க்குச் செல்லவும்.