இயேசுவே ராஜா: திமோத்தி கெல்லரின் உயிர்த்தெழுந்த நாளின் தியானம்மாதிரி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

9 ல் 7 நாள்

"நற்கருணை விருந்து மற்றும் சமூகம்"

பாத்திரத்தையும் எடுத்து இயேசு சொன்னதை நினைவில் வையுங்கள்:

"பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."
(மாற்கு 14:23-25)

இயேசுவின் வார்த்தைகளின் அர்த்தம், அவருடைய சிலுவை மரணத்தின் விளைவாக இப்போது தேவனுக்கும் நமக்கும் இடையே ஒரு புதிய உடன்படிக்கை உள்ளது. இந்த உறவின் அடிப்படை இயேசுவின் சொந்த இரத்தம்: "என் உடன்படிக்கையின் இரத்தம்." தேவனுடைய ராஜ்யத்தில் நம்மைச் சந்திக்கும் வரை அவர் இந்த பந்தியில் சாப்பிடவோ குடிக்கவோ மாட்டேன் என்று அறிவிக்கும்போது, ​​நம்க்கு அவர் நிபந்தனையின்றி உறுதியளிக்கிறார்: “நான் உங்களை பிதாவின் கரங்களுக்குள் கொண்டுவரப் போகிறேன். நான் உங்களை அரசரின் விருந்துக்கு அழைத்து வருகிறேன்” என்று நமக்கு வாக்களிக்கிறார். இயேசு பெரும்பாலும் தேவனுடைய ராஜ்யத்தை ஒரு பெரிய விருந்திற்கு ஒப்பிடுகிறார். மத்தேயு 8 இல், இயேசு கூறுகிறார், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் பலர் வந்து, விருந்தில் தங்கள் இடங்களைப் பெறுவார்கள். . . பரலோக ராஜ்யத்தில்." இந்த ராஜ்ய விருந்தில் நாம் அவருடன் இருப்போம் என்று இயேசு வாக்குக் கொடுக்கிறார்.

ரொட்டியையும் திராட்சை ரசத்தையும் உயர்த்திப்பிடிக்கும் இந்த எளிய சைகைகளுடன், “இது என் உடல் . . . இது என் இரத்தம்” என்று இயேசு கூறுகிறார், முந்தைய விடுதலைகள், முந்தைய பலிகள், பஸ்காவின் ஆட்டுக்குட்டிகள் அனைத்தும் தன்னையே சுட்டிக்காட்டுகின்றன என்று நம்க்கு உணர்த்துகிறார். தேவன் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டுத் தந்ததற்கு, ஆட்டுக்குட்டிகளின் இரத்தத்தின் மூலம் முந்தைய நாள் இரவு முதல் பஸ்கா அனுசரிக்கப்பட்டது போல, இயேசுவின் இரத்தத்தின் மூலம் தேவன் உலகத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டெடுப்பதற்கு முந்தைய இரவு இந்த பஸ்கா விருந்து அனுசரிக்கப்பட்டது.

இயேசு வழங்குவதை நீங்கள் உண்மையாக ஏற்றுக்கொள்ள உங்கள் இதயத்திலும் மனதிலும் நடக்க வேண்டிய சில மாற்றங்கள் யாவை?

திமோதி கெல்லர் எழுதிய JESUS THE KING இலிருந்து ஒரு பகுதி
பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனமான பெங்குயின் குரூப் (யுஎஸ்ஏ) எல்எல்சியின் உறுப்பினரான ரிவர்ஹெட் புக்ஸ் உடன் ஏற்பாட்டின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டது. பதிப்புரிமை © 2011 டிமோதி கெல்லர்

மற்றும் திமோதி கெல்லர் மற்றும் ஸ்பென்ஸ் ஷெல்டனின் JESUS THE KING படிப்பு ஏடு, ஹார்பர்காலின்ஸ் கிறிஸ்டியன் பப்ளிஷர்ஸின் ஒரு பிரிவான Zondervan மூலம் பதிப்புரிமை (c) 2015.

வேதவசனங்கள்

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

நியூயார்க் டைம்ஸின் அதிகபட்ச புத்தக பிரதிகளின் விற்பனைக்கு காரணமான எழுத்தாளரும், புகழ்பெற்ற போதகருமான திமோத்தி கெல்லர், மாற்கு எழுதின சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறபடி இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தொடர் அத்தியாயங்களை பகிர்கிறார். இக்கதைகளை கூர்ந்து கவனித்தால் பிதாவானவரின் மகனின் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும், உயிர்த்தெழுதலின் நாள் வரை உள்ள தொடர்பினை ஒரு புது கண்ணோட்டத்துடன் இவர் வழங்கியிருப்பதை காணலாம். சிறு குழுக்களுக்கு, இயேசுவே ராஜா இப்போது புத்தகமாகவும், பாட வழிகாட்டியாகவும், எங்கேயெல்லாம் புத்தகங்கள் விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிடைக்கிறது.

More

பெங்குவின் ராண்டம் ஹவுஸ், ஹார்ப்பர்காலின்ஸ் கிறிஸ்துவ பதிப்பகத்தாரின் பாட வழிகாட்டி, இக்குழுமத்தின் அங்கத்தினரான ரிவர்ஹெட் புக்சின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். மேலும் தகவல் அறிய: http://www.penguin.com/book/jesus-the-king-by-timothy-keller/9781594486661 அல்லது http://www.zondervan.com/jesus-the-king-study-guide க்குச் செல்லவும்.