இயேசுவே ராஜா: திமோத்தி கெல்லரின் உயிர்த்தெழுந்த நாளின் தியானம்மாதிரி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

9 ல் 9 நாள்

"மரணத்தின் மரணம்"

இயேசு தம் சீஷர்களிடம், “மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன்” என்றார். அவர் அதை மாற்கு 8 இல் கூறினார், மீண்டும் மாற்கு 9 இல், மீண்டும் மாற்கு 10 இல் கூறினார்.

திரும்பத் திரும்பச் சொன்னபோதிலும், ஒரு வினோதம் இங்கு நடந்தது. இயேசு இறந்த மூன்றாம் நாளில், சுற்றிலும் ஆண் சீஷர்கள் இல்லை; பெண் சீஷிகள் சிலர் அங்கு தோன்றுகிறார்கள், ஆனால் அவர்களும் கூட எல்லா விலையுயர்ந்த வாசனை திரவியங்களையும் கொண்டு வருகிறார்கள். உயிர்த்தெழுதலை யாரும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் நற்செய்தி எழுத்தாளர் மாற்காக இருந்திருபீர்களானால், நம்பத்தகுந்த புனைகதையை எழுத முயற்சித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுப்பப்படுவேன் என்று இயேசு தம் சீஷர்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லியிருந்ததால், இயேசுவின் வாழ்க்கைக்குப் பிறகு ஒரு சீஷனாவது இதைப் பற்றி சிந்தித்து மற்றவர்களிடம், "ஏய், இது மூன்றாவது நாள். நாம் இயேசுவின் கல்லறையைப் போய் பார்க்கச் செல்ல வேண்டும். பார்த்துவிட்டு வருவதினால் நமக்கு என்ன நேரிடும்?" அது மட்டுமே நியாயமானதாக இருக்கும். ஆனால் யாரும் அப்படி எதுவும் சொல்லவில்லை. உண்மையில், அவர்கள் உயிர்த்தெழுதலை எதிர்பார்க்கவே இல்லை. அது அவர்களுக்குத் தோன்றவில்லை. காலியாக இருந்த கல்லறைக்கு முன்னால் இருந்த தேவ தூதனே அந்த பெண் சிஷிகளுக்கு நினைவூட்டுகிறார்: “அவர் உங்களுக்குச் சொன்னபடியே நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்.” மாற்கு இந்தக் கதையை உருவாக்கியிருந்தால், அவர் இதை இப்படி எழுதியிருக்க மாட்டார்.

இங்கே முக்கிய விஷயம்: உயிர்த்தெழுதல் என்பது முதலில் சீஷர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, அவர்களுக்கு அதை நம்புவது என்பது சாத்தியமற்றது, இன்று நம்மில் கூட பலருக்கு இவ்வாறு தான் உள்ளது. அவர்களின் காரணங்கள் நமது காரணங்களிலிருந்து சற்று வேறுபட்டிருக்கும் என்பது உண்மைதான். கிரேக்கர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்ளவில்லை; கிரேக்க உலகக் கண்ணோட்டத்தில், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது உடலில் இருந்து ஆன்மாவை விடுவிப்பதாகும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை, மரணத்திற்குப் பிறகு உயிர்த்தெழுதல் ஒருபோதும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்காது. யூதர்களைப் பொறுத்தவரை, அவர்களில் சிலர் முழு உலகமும் புதுப்பிக்கப்படும் போது எதிர்கால பொது உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டிருந்தனர், ஆனால் இறந்தவர்களிடமிருந்து ஒரு தனிமனிதன் உயிர்த்தெழுவதைப் பற்றிய கருத்து அவர்களிடம் இல்லை. இயேசுவின் காலத்து மக்கள் நம்மை விட உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்ள முன்வரவில்லை.

இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நீங்கள் நம்புவது கடினமா? இயேசுவின் உயிர்த்தெழுதல் உங்களுக்கு எப்படி நம்பிக்கை அளிக்கிறது?

திமோதி கெல்லர் எழுதிய JESUS THE KING இலிருந்து ஒரு பகுதி
பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனமான பெங்குயின் குரூப் (யுஎஸ்ஏ) எல்எல்சியின் உறுப்பினரான ரிவர்ஹெட் புக்ஸ் உடன் ஏற்பாட்டின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டது. பதிப்புரிமை © 2011 டிமோதி கெல்லர்

மற்றும் திமோதி கெல்லர் மற்றும் ஸ்பென்ஸ் ஷெல்டனின் JESUS THE KING படிப்பதற்க்கான வழிக்காட்டி, ஹார்பர்காலின்ஸ் கிறிஸ்டியன் பப்ளிஷர்ஸின் ஒரு பிரிவான Zondervan மூலம் பதிப்புரிமை (c) 2015.
நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

நியூயார்க் டைம்ஸின் அதிகபட்ச புத்தக பிரதிகளின் விற்பனைக்கு காரணமான எழுத்தாளரும், புகழ்பெற்ற போதகருமான திமோத்தி கெல்லர், மாற்கு எழுதின சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறபடி இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தொடர் அத்தியாயங்களை பகிர்கிறார். இக்கதைகளை கூர்ந்து கவனித்தால் பிதாவானவரின் மகனின் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும், உயிர்த்தெழுதலின் நாள் வரை உள்ள தொடர்பினை ஒரு புது கண்ணோட்டத்துடன் இவர் வழங்கியிருப்பதை காணலாம். சிறு குழுக்களுக்கு, இயேசுவே ராஜா இப்போது புத்தகமாகவும், பாட வழிகாட்டியாகவும், எங்கேயெல்லாம் புத்தகங்கள் விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிடைக்கிறது.

More

பெங்குவின் ராண்டம் ஹவுஸ், ஹார்ப்பர்காலின்ஸ் கிறிஸ்துவ பதிப்பகத்தாரின் பாட வழிகாட்டி, இக்குழுமத்தின் அங்கத்தினரான ரிவர்ஹெட் புக்சின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். மேலும் தகவல் அறிய: http://www.penguin.com/book/jesus-the-king-by-timothy-keller/9781594486661 அல்லது http://www.zondervan.com/jesus-the-king-study-guide க்குச் செல்லவும்.