இயேசுவே ராஜா: திமோத்தி கெல்லரின் உயிர்த்தெழுந்த நாளின் தியானம்மாதிரி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

9 ல் 2 நாள்

"ஆழமான இரட்சிப்பு"

மனிதனுக்குத் தெரியாத ஒரு விஷயம் இயேசுவுக்குத் தெரியும். நம்முடைய உடல் நிலையைவிட நமக்கு பெரிய பிரச்சனை இருக்கிறது. இயேசு நம்மிடம் இவ்வாறாக உரைக்கிறார், “உன் பிரச்சனைகளை நான் புரிந்துகொள்கிறேன். உன் கஷ்டத்தைப் பார்த்தேன். நான் அதற்கு வருகிறேன். ஆனால் அதற்க்கு முன்பு ஒரு நபரின் வாழ்க்கையில் முக்கிய பிரச்சனை அவரது துன்பம் அல்ல என்பதை தயவுசெய்து உணருங்கள்; அது அவன் பாவமே."

இயேசுவின் பதிலை நீங்கள் புண்படுத்துவதாகக் கண்டால், குறைந்தபட்சம் இதைக் கவனியுங்கள்: யாராவது உங்களிடம், “உங்கள் வாழ்க்கையில் உள்ள முக்கிய பிரச்சனை உங்களுக்கு என்ன நடந்தது என்பது அல்ல, மக்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதும் அல்ல; அதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளித்தீர்கள் என்பதுதான், உங்கள் முக்கிய பிரச்சனை" என்று சொன்னால் - முரண்பாடாக, அது நமக்கு சரியாக தோண்றுகிறதே? ஏன்? ஏனென்றால் உங்களுக்கு என்ன நடந்தது அல்லது மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது - ஆனால் உங்களைப் பற்றி நீங்கள் ஏதாவது செய்யலாம். பாவத்தைப் பற்றி வேதாகமம் பேசும்போது அது நாம் செய்யும் கெட்ட காரியங்களை மட்டும் குறிப்பிடுவதில்லை. வெறும் பொய்யோ, காமமோ அல்லது எதுவாக இருந்தாலும் - நாம் செய்யும் பாவம், தேவனை அவர் உருவாக்கிய உலகில் புறக்கணிப்பதற்க்கு சமம்; அது நாம் அவரைக் குறிப்பிடாமல் வாழ்வதன் மூலம் அவருக்கு எதிராகக் கலகம் செய்கிறது. "எனது வாழ்க்கையை நான் எப்படி வாழ வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன்" என்று பாவம் கூறுகிறது. அதுவே நமது முக்கிய பிரச்சனை என்று இயேசு கூறுகிறார்.

முடக்குவாதக்காரனிடம் அவர் இந்த முக்கிய பிரச்சனையை இயேசு எதிர்கொள்கிறார். இயேசு கூறுகிறார், “என்னிடம் வந்து, உனது உடல் மட்டும் குணமாக வேண்டும் என்று கேட்பதன் மூலம், போதுமான அளவு நீ ஆழமாக செல்லவில்லை. உனது ஏக்கங்களின் ஆழத்தை, உனது இதயத்தின் ஏக்கங்களை நீ குறைத்து மதிப்பிட்டுவிட்டாய்." முடங்கிப்போயிருக்கும் ஒவ்வொருவரும் இயற்கையாகவே தனது ஒவ்வொரு இழையுடனும் நடக்க விரும்புகிறார்கள். ஆனால் நிச்சயமாக இந்த மனிதன் மீண்டும் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று தனது நம்பிக்கைகள் அனைத்தையும் ஓய்வெடுக்கவைத்திருப்பான். அவனது இதயத்தின் நினைவோ, "நான் மீண்டும் நடக்க முடிந்தால், நான் வாழ்க்கைக்கு தயாராக இருப்பேன். நான் ஒருபோதும் கவலைப்பட மாட்டேன், புகார் செய்ய மாட்டேன். என்னால் மட்டும் நடக்க முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும்." அதற்கான இயேசுவின் பதில், "என் மகனே, நீ தவறாக நினைக்கிறாய்". இது கடுமையாகத் தோன்றலாம், ஆனால் அது ஆழமான உண்மை. இயேசு கூறுகிறார், "நான் உங்கள் உடலைக் குணப்படுத்தும்போது, நான் அதைச் செய்தால், நீங்கள் இனி ஒருபோதும் கவலை அடைய மாட்டீர்கள் என்று நீங்கள் உணருவீர்கள். ஆனால் இரண்டு மாதங்கள், நான்கு மாதங்கள் காத்திருங்கள் - மகிழ்ச்சி நீடிக்காது. மனித இதயத்தின் அதிருப்தியின் வேர்கள் ஆழமாகச் செல்கின்றன.

ஏன் மன்னிப்பு என்பது முடக்குவாத நோயாளியின் ஆழ்ந்த தேவையாக இருந்தது? அது ஏன் நமது ஆழ்ந்த தேவை? மன்னிப்பின் தேவையை விட வேறு என்ன "தேவைகள்" ஆழமானவை என்று நாம் உணர்கிறோம்?

திமோதி கெல்லர் எழுதிய JESUS THE KING இலிருந்து ஒரு பகுதி
பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனமான பெங்குயின் குரூப் (யுஎஸ்ஏ) எல்எல்சியின் உறுப்பினரான ரிவர்ஹெட் புக்ஸ் உடன் ஏற்பாட்டின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டது. பதிப்புரிமை © 2011 டிமோதி கெல்லர்

மற்றும் திமோதி கெல்லர் மற்றும் ஸ்பென்ஸ் ஷெல்டனின் JESUS THE KING படிப்பு வழிக்காட்டி, ஹார்பர்காலின்ஸ் கிறிஸ்டியன் பப்ளிஷர்ஸின் ஒரு பிரிவான Zondervan மூலம் பதிப்புரிமை (c) 2015.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

JESUS THE KING: An Easter Devotional By Timothy Keller

நியூயார்க் டைம்ஸின் அதிகபட்ச புத்தக பிரதிகளின் விற்பனைக்கு காரணமான எழுத்தாளரும், புகழ்பெற்ற போதகருமான திமோத்தி கெல்லர், மாற்கு எழுதின சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறபடி இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தொடர் அத்தியாயங்களை பகிர்கிறார். இக்கதைகளை கூர்ந்து கவனித்தால் பிதாவானவரின் மகனின் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும், உயிர்த்தெழுதலின் நாள் வரை உள்ள தொடர்பினை ஒரு புது கண்ணோட்டத்துடன் இவர் வழங்கியிருப்பதை காணலாம். சிறு குழுக்களுக்கு, இயேசுவே ராஜா இப்போது புத்தகமாகவும், பாட வழிகாட்டியாகவும், எங்கேயெல்லாம் புத்தகங்கள் விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிடைக்கிறது.

More

பெங்குவின் ராண்டம் ஹவுஸ், ஹார்ப்பர்காலின்ஸ் கிறிஸ்துவ பதிப்பகத்தாரின் பாட வழிகாட்டி, இக்குழுமத்தின் அங்கத்தினரான ரிவர்ஹெட் புக்சின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். மேலும் தகவல் அறிய: http://www.penguin.com/book/jesus-the-king-by-timothy-keller/9781594486661 அல்லது http://www.zondervan.com/jesus-the-king-study-guide க்குச் செல்லவும்.