இயேசுவே ராஜா: திமோத்தி கெல்லரின் உயிர்த்தெழுந்த நாளின் தியானம்மாதிரி
"எதிர்பார்பை விட அதிகம்"
சில சமயங்களில் இயேசு நமக்கு, புரியாத சில விஷயங்களை நமது வாழ்வில் நடக்க அனுமதிக்கிறார். நம் திட்டப்படியோ, நம்க்கு புரியும் விதத்திலோ அவர் காரியங்களைச் செய்வதில்லை. ஆனால் இயேசு தேவனாக இருந்தால், உங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை நீங்கள் கடந்து செல்ல, சில காரணங்களை வைத்திருக்கும் அளவுக்கு அவர் மிகவும் பெரியவராக இருக்க வேண்டும். அவருடைய வல்லமை எப்படி எல்லையற்றதோ, அதேபோல் அவருடைய ஞானமும் அவருடைய அன்பும் எல்லையற்றது. இயற்கை உங்களைப் பற்றி அலட்சியமாக இருக்கிறது, ஆனால் இயேசு உங்கள் மீது அளவற்ற அன்பினால் நிறைந்திருக்கிறார். இயேசு தங்களை நேசித்தார் என்பதை சீஷர்கள் அறிந்திருந்தால், அவர் வல்லமை வாய்ந்தவர் மற்றும் அன்பானவர் என்பதை அவர்கள் உண்மையிலேயே புரிந்துகொண்டிருந்தால், அவர்கள் பயந்திருக்க மாட்டார்கள். இயேசு அவர்களை நேசித்திருந்தால், அவர்களுக்குத் தீமைகள் நடக்காமல் விடமாட்டார் என்ற அவர்களின் நம்பிக்கை தவறானது. அவரால் யாரையும் நேசிக்க முடியும், அதேபோல் அவர்களுக்கு மோசமான விஷயங்கள் நடக்க அனுமதிக்கவும் முடியும், ஏனென்றால் அவர் தேவன்-ஏனெனில் அவர் அவர்களை விட நன்றாக அறிந்தவர்.
உங்கள் துன்பங்களைத் தடுக்காத, உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் அளவுக்குப் பெரிய சூழ்நிலையை அனுமதிக்கும் வல்லமை வாய்ந்த தேவன் உங்களுக்கு இருந்தால், உங்களால் புரிந்துகொள்ள முடியாத காரணங்களைக் கொண்டிருக்கும் அளவுக்கு மகிமை வாய்ந்த மற்றும் வல்லமை வாய்ந்த தேவனாகவும் அவர் இருக்கிறார். நீங்கள் அதை இரு வழிகளிலும் கொண்டிருக்க முடியாது. எனது ஆசிரியர் எலிசபெத் எலியட் அதை இரண்டு சுருக்கமான வாக்கியங்களில் இவ்வாறாக அழகாகக் கூறுவார்: “கர்த்தர், அவர் கர்த்தர் என்பதால், அவர் என் ஆராதணைக்கும் எனது சேவைக்கும் தகுதியானவர். அவருடைய விருப்பத்தைத் தவிர வேறு எங்கும் நான் ஓய்வைக் காணமாட்டேன், அந்த விருப்பம் எல்லையற்றது, அளவிட முடியாதது, அவர் என்ன செய்கிறார் என்பது பற்றிய எனது பெரிய கருத்துக்களுக்கு அப்பாற்பட்டது.” நீங்கள் புயலின் தயவில் இருந்தால், அதன் சக்தியை கட்டுப்படுத்த முடியாதது மற்றும் அது உன்னை நேசிப்பதில்லை. நீ பாதுகாப்பாக இருக்கும் ஒரே இடம் கர்த்தரின் சித்தத்தை செய்வதில் தான், எனினும் அவர் கர்த்தர் ஆதலால் மற்றும் நாம் கர்த்தர் இல்லை என்பதால், அவரின் விருப்பம் அவசியம், அளவிட முடியாதது, அவர் என்ன செய்கிறார் என்பது, நமது பெரிய கருத்துகளுக்கு அப்பாற்பட்டது.. அதுமட்டும் அல்ல நாம் பாதுகாப்பாக இருப்போமா? "நிச்சயமாக அவர் இல்லை, பாதுகாப்பாக இருப்பதைப் பற்றி யார் என்ன சொன்னார்கள்? ஆனால் நமது தேவன் நல்லவர், அவர் ராஜா."
பதட்டம் மற்றும்/அல்லது விரக்தியை உருவாக்கும் வாய்ப்புள்ள சூழ்நிலைகளில் கிறிஸ்துவில் நாம் எப்படி அமைதி பெற முடியும்? உங்கள் வாழ்க்கையில் இயேசு உதவி வழங்குவதற்காக நீங்கள் எங்கே காத்திருக்கிறீர்கள்?
திமோதி கெல்லர் எழுதிய JESUS THE KING இலிருந்து ஒரு பகுதி
பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனமான பெங்குயின் குரூப் (யுஎஸ்ஏ) எல்எல்சியின் உறுப்பினரான ரிவர்ஹெட் புக்ஸ் உடன் ஏற்பாட்டின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டது. பதிப்புரிமை © 2011 டிமோதி கெல்லர்
மற்றும் திமோதி கெல்லர் மற்றும் ஸ்பென்ஸ் ஷெல்டனின் JESUS THE KING படிப்பு ஏடு, ஹார்பர்காலின்ஸ் கிறிஸ்டியன் பப்ளிஷர்ஸின் ஒரு பிரிவான Zondervan மூலம் பதிப்புரிமை (c) 2015.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நியூயார்க் டைம்ஸின் அதிகபட்ச புத்தக பிரதிகளின் விற்பனைக்கு காரணமான எழுத்தாளரும், புகழ்பெற்ற போதகருமான திமோத்தி கெல்லர், மாற்கு எழுதின சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறபடி இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தொடர் அத்தியாயங்களை பகிர்கிறார். இக்கதைகளை கூர்ந்து கவனித்தால் பிதாவானவரின் மகனின் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும், உயிர்த்தெழுதலின் நாள் வரை உள்ள தொடர்பினை ஒரு புது கண்ணோட்டத்துடன் இவர் வழங்கியிருப்பதை காணலாம். சிறு குழுக்களுக்கு, இயேசுவே ராஜா இப்போது புத்தகமாகவும், பாட வழிகாட்டியாகவும், எங்கேயெல்லாம் புத்தகங்கள் விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிடைக்கிறது.
More
பெங்குவின் ராண்டம் ஹவுஸ், ஹார்ப்பர்காலின்ஸ் கிறிஸ்துவ பதிப்பகத்தாரின் பாட வழிகாட்டி, இக்குழுமத்தின் அங்கத்தினரான ரிவர்ஹெட் புக்சின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். மேலும் தகவல் அறிய: http://www.penguin.com/book/jesus-the-king-by-timothy-keller/9781594486661 அல்லது http://www.zondervan.com/jesus-the-king-study-guide க்குச் செல்லவும்.