எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 1 நாள்

சாம்பல் புதன்

ஒரு வாரநாளில் வழிபாடு முடிந்து தங்கள் நெற்றியில் சாம்பல் பொட்டுடன் வரும் சக ஊழியர்களை ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கலாம். சில கிறிஸ்துவ தேவாலயங்கள் தவக்காலம் துவங்குவதை குறிக்க "சாம்பல் புதன்" என்னும் சொல்லை பயன்படுத்துவதல்லாமல் நம்முடைய பாவம், மரணம் மற்றும் இந்த இரண்டையும் அகற்ற செலுத்தப்பட்ட பயங்கரமான விலையையும் நினைவூட்டும் வகையில் அவர்கள் விசுவாசிகளை உண்மையிலேயே சாம்பல் பசையை அணிய செய்கிறார்கள்.

நீங்கள் உங்கள் நெற்றியில் சாம்பலை அணிகிறீர்களோ இல்லையோ ஆனால் உங்கள் தேவனின் முன்பாக மண்டியிட்டு எவ்வளவாய் உங்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை உணர்ந்து அதனை மனத்தாழ்மையோடு இந்த நேரத்தில் அறிக்கையிடுவது மிகவும் உசிதமானது. "இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன், " என்று ஒருமுறை ஆபிரகாம் (ஆதியாகமம் 18:27) கூறினார், நாமும் அது போலத்தான்.

தேவனால் உருவக்கப்பட்டோம், தேவனுடைய உலகத்தில் வாழ்கிறோம், தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்கிறோம், தேவனின் நியாயத்தீர்ப்பிற்கு உட்பட்டவர்களாய் இருக்கிறோம், நாம் மிக மோசமான நிலையில் உள்ளோம். நாம் மரபுரிமையாக பெற்ற நம்முடைய பாவ டிஎன்ஏ நாம் பிறப்பதற்கு முன்பே தேவனின் பார்வையில் நம்மை குற்றவாளியாக்குகிறது, அதோடு நாமும் வாழ்கிற ஒவ்வொரு நாளும் ஆவலுடன் தீமை செய்து குவிக்கிறோம். நாம் சுமக்கும் பாவம் தேவனின் தீர்ப்பை கொண்டு வருகிறது -- "நீ மண்ணுக்கு திரும்புவாய்." இன்னும் மோசமாக--"நீ நரகத்திற்கு போவாய்."

ஆனால் நோன்பு காலம் நமக்கு இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் இறப்பு பற்றி வியக்கத்தக்க சம்பவங்களைக் கொண்டு வருகிறது. அவரே உலகத்தின் பாவங்களை நீக்குகிற தேவ ஆட்டுக்குட்டி. அவர் நம்முடைய பாவம், பழி, நிந்தைகளை சுமந்துத் தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி. அதோடு சாம்பலையும்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

More

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.