எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 4 நாள்

நேரம் ஆகிவிட்டது

என் வீட்டிற்கு எப்போதாவது நீங்கள் வந்தால், கடிகாரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று முதலிலேயே அறிவீர்கள்--என் முன் அறையில் மட்டுமே ஆறு கடிகாரங்கள் உள்ளன. அவை அனைத்தும் இயந்திரங்கள்; அந்த டிக் டிக் சத்தமும் மணியோசையும் எதோ ஒரு விதத்தில் என் ஆத்துமாவை தணிய செய்கிறது. காலத்தாமதமாக செல்வதுப் பற்றி எனக்கு ஒரு உள்ளான பயம் இருக்கும் என்று நினைக்கிறன். முக்கியமான ஏதோ ஒன்றை நான் தவறப் போகிறேன் என்ற பயத்தை ஒருவேளை அத்தனை கடிகாரங்களும் அடக்குகின்றன.

என்ன நேரம் என்று இயேசுவுக்கு எப்போதுமே தெரிந்திருந்தது--சுகமளிக்கும் நேரம், போதிக்கும் நேரம், கண்டிக்கும் நேரம், ஒதுங்க வேண்டிய நேரம், கொண்டாட்ட விருந்துகளில் பங்கேற்கும் நேரம். அவர் மரிக்கும் நேரத்தை தன் பிதா அவருக்கு தெரியப்படுத்தினார். இயேசுவின் சீடர்கள் பயணம் செய்து போதிக்கும் ஊழியம் கிட்டதட்ட முடிந்து விட்டது என்று இயேசு அவர்களிடம் சொன்னார். “அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.” (மத்தேயு 16:21) குருத்தோலை ஞாயிறு அன்று எருசலேமிற்குள் ராஜரீகமாக உள் செல்வது தன் இறுதியானது என்று அவர் அறிந்திருந்தார்.

குருத்தொலைகளுக்கு மத்தியில் ஒரு பெரிய அற்புதம் நடந்தது. தாழ்மையான கழுதைக்குட்டியின் மீது இருக்கும் இந்த அமைதியான நபர் தங்கள் மேசியா என்றும் சகல பழைய ஏற்பாட்டு வேதத்தின் நிறைவேறுதல் என்றும் திரளான மக்கள் கூட்டத்தினர் அடையாளம் கண்டனர். அவரகளுக்கு என்ன நேரம் என்று தெரிந்திருந்தது என்று தங்கள் ஓசன்னாக்கள் காட்டுகின்றன--தங்கள் ராஜா தங்கள் வாழ்க்கைக்குள் சவாரி வருகிறார் என்றும் தங்கள் விசுவாசத்தை உரிமைக்கொள்கிறார் என்றும்.

இது என்ன நேரம் என்று உங்களுக்கு தெரியுமா? குழப்பமடைவதை விட்டுவிட்டு இயேசு கிறிஸ்துவை உங்கள் ஆண்டவராகவும் ராஜாவாகவும் பற்றிக் கொள்ள அல்லது மீண்டும் பற்றிகொள்ளும் நேரம் இது. தன் வார்த்தையின் மூலம், ஞானஸ்நான தண்ணீரின் மூலம், கர்த்தரின் பந்தியில் கொடுக்கப்பட்ட தன் உடல் மற்றும் ரதத்தின் மூலம், இயேசு அன்றைக்கு வந்ததுப் போல நேரடியாக இன்றைக்கும் உங்களிடம் வருகிறார். குருத்தோலைகள் உங்களை அழைக்கின்றன: அவரை இப்போது ஆராதியுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

More

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.