எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 14 நாள்

நீங்களும் வாழ்வீர்கள்!

வாழ்க்கையில் நாம் அனைவரும் சமநிலையை விரும்புகிறோம். நாம் அனைவரும் எல்லாம் நிலையாக, சமாளிக்க கூடிய நிலையில் இருக்கும் என்று கருத விரும்புகிறோம். வேலை இழப்பு, ஒரு கார் விபத்தில் காயம் அடைதல், ஏதோ நோயால் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் போன்ற பாதகமான மாற்றத்தால் நாம் அஞ்சுகிறோம். அதை விட மோசமாக, நாம் முதியோர் இல்லத்திற்கு சென்று விடுவோமோ, படுத்த படுக்கையாகி விடுவோமோ என்ற பயம் ஏற்படுகிறது.

மார்த்தாவின் கனவு நிஜமானது. சுகமற்ற தன் சகோதரன் லாசருவை காப்பாற்ற மிகவும் கால தாமதமாக தான் சுகமளிக்கும் வல்லமை கொண்ட இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். "மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்... இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்." (யோவான் 11:21-23).

சாவுக்கேதுவான ஒரு மனிதனும் மற்றொரு மனிதனும் இப்படி பேசிக்கொண்டால், அது வெற்று பேச்சு தான். ஆனால் இந்த வார்த்தைகள் பாவம், வியாதி, மரணம், பாதாளம் ஆகியவற்றின் கர்த்தரும் எஜமானனுமாகிய இயேசுவிடமிருந்து வந்தது. மரணத்தை மேற்கொள்ள அவரது உயிர்த்தெழுதல் அவருக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுக்கிறது. அன்றைக்கு அந்த மரித்த மனிதனை உயிருடன் வர கட்டளை கொடுத்ததன் மூலம் அந்த வல்லமையை நிரூபித்தார். மீட்கப்பட்ட இந்த மரித்த லாசருவை இயேசு இறுதியில் செய்யவிருக்கும் அந்த மிக பெரிய செயலின் ஒரு டெமோவை போன்றது.

இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் நம் ஆழமான பயங்களை அமைதிப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் உங்கள் பாவ மன்னிப்பை நிச்சயம் செய்கிறது. இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு எந்த ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை. அவரது உயிர்தெழுதல் உங்கள் உயிர்தெழுதலை நிச்சயம் செய்கிறது. அவர் வாழ்கிறார். நீங்களும் வாழ்வீர்கள்.

வேதவசனங்கள்

நாள் 13

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

More

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.