எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி
ஆக்கினைத் தீர்ப்பு இல்லை
எல்லா நித்தியத்திற்கும் தேவனான கர்த்தராகிய இயேசு, மனித சாயல் எடுத்து மனிதனாக உலகத்தில் வாழ வந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. எபிரெயர் இரண்டாம் அதிகாரத்தில் சுட்டிக் காட்டியிருப்பது போல, வாழ்க்கை முழுவதும் மரண பயத்திற்கு அடிமைப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதே அவற்றில் முக்கியமான காரணம்.
தேவனுடைய மற்றும் மனிதனுடைய சட்டங்களுக்கு உட்பட்டு அவற்றை சரியாக கடைப்பிடித்து, இயேசு நமக்காக ஒரு பதிலிடமான வாழ்க்கை வாழ்ந்தார். இந்த விதமாக நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனை முழுவதும் தன் மேல் முழுமையாக சுமரும் என்று அறிந்து, தன் உடலை துர்பிரயோகத்திற்கும் துன்புறுத்தலுக்கும் கொடுத்தார். இறுதியாக, தன்னை மரணத்திற்கே ஒப்புக்கொடுத்தார். கல்வாரியில் நிகழ்ந்த அந்த மிக பெரிய பரிமாற்றத்தின் வாயிலாக, நம் மரணம் அவருடையதானது, அவர் குற்றமின்மை நம்முடையதானது.
இதன் விளைவு? "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." (ரோமர் 8:1,2). இதனால், இனி நீங்கள் தேவனுக்கு பயப்படத் தேவை இல்லை. உங்கள் செயல்களை குறிப்பிடாமல், புறநிலையாக, இலவசமாக, ஏற்கனவே உங்கள் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டன. இது நாம் பெற்ற சுதந்திரம், சம்பளம் அல்ல. இவை அனைத்தும் உங்களுடையவை -- விசுவாசிப்பவர் அனைவரும் பெறுவர்.
தேவன் நிச்சயமாக கூறுகிறார்—ஆக்கினைத் தீர்ப்பு இல்லை என்றால் ஆக்கினைத் தீர்ப்பு இல்லை. இப்போது நீங்கள் பெருமூச்சு விடலாம்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.
More
இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.