எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 9 நாள்

குற்றவாளி இல்லை

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயரின் அற்ப உள்ளம் கொண்ட முட்டாள்தனம், சுய நீதியால் மற்றவரை நியாயம்தீர்ப்பது, தங்கள் சொந்த மோசமான பாவங்களை பார்க்காமல் இருப்பது போன்றவற்றை இழிவாக நினைப்பது கடினமல்ல. இயேசுவின் சீடர்கள், பொதுவாக அவர் பணியையும் அவர் செயல்திட்டத்தையும் புரிந்துக்கொள்ளாத முட்டாள்கள் என்று ஏளனம் செய்ய கடினமல்ல. இன்றைக்கும் நம்மை சுற்றிலும் தீங்கு செய்பவர்களை பார்ப்பது கடினமல்ல.

நீங்கள் தீங்கு செய்பவரை கண்ணாடியில் பார்த்திருக்கிறீர்களா?

ரோம போர்சேவகர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தனர். யூத பிரதான ஆலோசனை சங்கம் இயேசுவை சிலுவையில் அறைந்தது. ஆளுநர் பொந்தி பிலாத்து உட்பட்ட ரோம சட்ட அமைப்பு இயேசுவை சிலுவையில் அறைந்தது. ஏசாயாவும் அப்படி செய்தார். நாமும் கூட தான். "அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்." (ஏசாயா 53:3).

எல்லா பாவமுள்ள மக்களுக்காகவும் நமக்காகவும் தான் இயேசு இந்த உலகத்திற்கு வந்து பிறந்து, தூய்மையாய் வாழ்ந்து, குற்றமற்றவராய் மரிக்க அவசியப்பட்டது. அவரது பலி தான் நமக்காக இரத்த கிரயத்தை செலுத்தியது. நம் மீது "குற்றவாளி இல்லை" என்று பிதாவனாவர் சொல்ல இயேசுவின் மரணமே காரணமாயிருக்கிறது.

அவரது காயங்களால், அவரது காயங்களால் மட்டுமே, நாம் சுகமாகிறோம்.

வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

More

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.