எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 6 நாள்

திடன் கொள்ளுங்கள்!

குருத்தோலை ஞாயிறு துவங்கி ஈஸ்டர் நாள் வரை உள்ள அற்புதமான எட்டு நாட்களும் புனித வரம் என்று ஆச்சரியப்படும், நன்றியுள்ள கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுகின்றன. படைப்பையே மிஞ்சும் விதத்தில் இந்த உலகம் இது வரை பார்த்ததிலேயே மிகவும் பிரமாண்டமான தேவனின் மீட்பு செயல் இதுவே. மனிதக்குலத்தின் மிகக்கொடூரமான எதிரிகளான பாவம், சாத்தான், மரணம், நியாயத்தீர்ப்பு மற்றும் நரகம் ஆகியவற்றின் மேல் மீட்பரின் வல்லமையான வெற்றியை இது உள்ளடக்கியுள்ளது.

ஆனால் அந்த வாரத்தின் பெரும்பாலான பகுதியில் இயேசுவின் சீடர்கள் மிகபெரும் அழுத்தத்தில் இருந்தனர். இயேசு சொன்ன அனேக காரியங்கள் அவர்களுக்கு அந்த நேரத்தில் ஒன்றும் புரியவில்லை, அவர்களுக்கு புரிந்தவற்றை அவர்களுக்கு கேட்க பிடிக்கவில்லை. அந்த அதிசயமான வாரத்தில் வியாழக்கிழமையன்று, இயேசுவுடன் இறுதியாக ஒரு முறை பஸ்கா உணவை ஆசரித்தனர். பின்னர், முதன்மையான திருவிருந்தை ருசிப்பார்த்து, அப்பம் மற்றும் திராட்ச ரசத்துடன் உடலையும் ரத்தத்தையும் பெற்றனர். ஒவ்வொன்றாக அவர்களின் தூசி படிந்த கால்களை இயேசு கழுவி, பணிவிடை தலைமைத்துவத்தை வல்லமையாக அவர்களுக்கு செய்து காட்டினார்.

அந்த மாலை பொழுதுகள் பெரும்பாலாக நீண்ட போதனை வேளைகளாக இருந்தன. கர்த்தரையும் அவருடைய ராஜ்யத்தையும் பகிரங்கமாக சேவிக்கும் எவருக்கும் காத்திருக்கும் போராட்டத்திற்கும் கஷ்டங்களுக்கும் ஒரு முன்னோட்டமாக அது இருந்தது. அது மட்டுமல்லாமல், இயேசுவுடன் விசுவாசத்தில் இணைக்கப்பட்ட அனைவரின் இறுதி வெற்றியின் மெதுவான, சாதுவான அறிவிப்பாகவும் அது இருந்தது. "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" என்றார். (யோவான் 16:33)

இன்றைக்கு முனங்கும், பயப்படும் விசுவாசிகளுக்கு நம்பிக்கை இதோ உள்ளது. நம் வாழ்க்கைகள் கிறிஸ்துவில் மறைந்துள்ளன என்று வேதாகமம் சொல்லுகிறது. நாம் வீணடித்துகொண்டிருப்பது போல வெளியே தெரியலாம். ஆனால் அது ஒரு மாயை. நிஜம் என்னவென்றால் கிறிஸ்துவின் அற்புதமான கரங்களில் நம் வாழ்க்கைகள், நம் நம்பிக்கைகள் மற்றும் நம் உறவுகள் உள்ளன. உங்கள் வாழ்க்கை பிரச்சனையால் நிரம்பியிருக்கும் போது, திடன் கொள்ளுங்கள்! கிறிஸ்து மேற்கொண்டார். அவர் ஜெயித்தார்; நீங்கள் ஜெயிக்கிரீர்கள். இப்போது சுவாசத்தை வெளியே விடுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

More

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.