எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 7 நாள்

தாழ்மையான மகத்துவம்

சிறுவர்கள் முதலில் விரும்பும் இயேசுவை பற்றிய கதைகள் பொதுவாக அவருடைய வல்லமையை பற்றியதாக இருக்கும். அவர் எவ்வளவு பெரிய அற்புதம் செய்பவர்! கடலின் ஆண்டவர், புயல்களின் அதிபதி, வியாதியை வெல்பவர், பிசாசுகளின் மீது வெற்றி சிறந்தவர், மரித்தோரை எழுப்புபவர், அவரவால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. பேட்மேன் அல்லது சூப்பர்மேனை விட அற்புதமான தலைசிறந்த ஹீரோ அவர் தான்.

ஆனால் நீங்கள் பெரியவராகும் போது, இயேசுவின் தாழ்மையான பணிவிடை செயல்களை இன்னும் அதிகமாக பாராட்டுகிறீர்கள். வேதாகமம் முழுவதிலுமுள்ள மிக வல்லமையான சம்பவங்களில் ஒன்று பெரிய வியாழன் அன்று வருகிறது. தான் சிலுவையில் அறையப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், தன் சீடர்களுக்கு சேவை தலைமைத்துவம் எப்படி இருக்கும் என்று ஒரு மறக்க முடியாத பாடத்தை கற்பித்தார்.

ஒவ்வொருவர் முன்னும் முழங்கால் படியிட்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ஒரு துண்டை வைத்து அவர்கள் பாதங்களை கழுவினார். “நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?... ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்" (யோவான் 13:12,14)

சேவை மற்றும் பாடுகள் மூலமே இயேசு நம்மை மீட்டிருக்கிறார். அவருடைய தாழ்மையான பணிவிடையின் மாதிரி தான் நம் மனப்பான்மையை ஒவ்வொரு நாளும் அறிவித்து ஊக்குவிக்கிறது. உங்களை சுற்றியுள்ளவர்கள் நீங்கள் குறைந்தது சில நேரமாவது பிடிவாதமாக, பெருமையாக, அல்லது ஆணவமாக தென்படுகிறீர்கள் என்றும் கேட்கப்படுகிரீர்கள் என்றும் சொல்வார்களா? உங்கள் வசதி, உங்கள் தேவைகள், உங்கள் உல்லாசங்கள் ஆகியவற்றை நிறைவேற்றும் ஒரு திட்டத்திற்கு நீங்கள் தானாகவே ஈர்க்கப்படுகிரீர்களா?

கால்களைக் கழுவும் தாழ்மை உங்கள் வீட்டில் எப்படி காணப்படுகிறது? மூன்று உதாரணங்களை பட்டியலிட்டு அவற்றை இன்றைக்கே செய்யுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

More

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.