எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 3 நாள்

ராஜா ஆசிர்வதிக்கப்பட்டவர்

ராஜ அலங்காரத்தில் பிரட்டனை மிஞ்சிய நாடு எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் வரலாற்றில் முடிசூடி நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமை இரண்டாம் எலிசபெத் மகா ராணிக்கு உண்டு. நீண்ட ஆட்சி காலத்தின் நிமித்தம், 1953ம் ஆண்டில் நிகழ்ந்த அவருடைய முடிசூட்டு விழாவை கூட நினைவு வைத்திருப்பவர்கள் வெகு சிலரே. ஆனால் விரைவில் இவ்வுலகம் அடுத்த அரசியைக் கானும். லார்ட்ஸின் உயர் நிர்வாகிகள் முன் செல்ல, புனிதர் எட்வர்டின் திட தங்க கிரீடத்தை அனிந்தபடி புதிய அரசி ஊர்வலமாக வருவார். பின்னர் தங்க தூண்டுகோலும் (கி.பி. 1189 கால அளவீடு செய்யப்பட்டது), அரச கையுறையும், தங்க உருண்டையும், தங்க செங்கோலும அவருக்கு வழங்கப்படும்

ஒப்பிடு செய்கையில், ஒலிவ மலையைச் சுற்றி எருசலேமுக்கு வந்த இயேசுவின் ராஜ சவாரி எவ்வளவு வேறுபட்டிருந்தது. அவரது ஏற்ற ஒரு கழுதை குட்டி, கூட்டத்தின் மேல் தன் தலை நிமிர்த்த இயலாத ஒரு சிறிய விலங்கு. ஆனாலும் அந்த கூட்டத்தில் பலர் அவருடைய ராஜ அடையாளத்தை உணர்ந்தவர்களாய், "ஆசிர்வதிக்கப்பட்ட கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா" (லூக்கா 19:38) என்று பறைசாற்றினார்கள். அவரை அலங்கரிக்க காத்திருந்த அரச அங்கி, ஒரு பழைய ரோமானிய இராணுவ வஸ்திரம்; அவருக்கு வழங்கப்பட்ட செங்கோல் ஒரு மெலிந்த நாணல்; அவர் தலையில் வைக்கப்பட்டது பொற்கிரீடம் அல்ல முற்கிரீடம்

முட்கள் அழுத்த, அவர் முகத்தில் வழிந்த இரத்தம் மனிதனுடையதாயும் தேவனுடையதாயும் இருந்தது. அந்த இரத்தம் இழந்ததை சம்பாதிக்கவும் மீட்கவும் வல்லமையுடையது. கிறிஸ்து, ஒரு மனிதனாக கரத்தரின் நீதிமன்றத்தில் நம்மை பிரதிநிதிப் படுத்தவும்; கடவுளாக, பாவம் நிறைந்த இவ்வுலகில் நரர் பாவிகளின் பிரதிநிதியாக நிற்கவும் முடியும். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்

ஒலிவ மலையில், மற்றும் ஒரு முக்கியமான இராஜரீக முடிசூட்டு நிகழ்ந்தது. அது உயிர்த்தெழுந்த கிறிஸ்து வானத்திற்கு எறிச் சென்ற மகிமையான நிகழ்வு. இப்போது தாழ்மைக்கு பதிலாக மகிமையும், வேலையாட்களாக பதினாயிரம் பதினாயிரம் தேவதூதரும் உள்ளன; இந்த பிரபஞ்சம் அவருடைய பிரசனத்தினாலும் ஆவியினாலும் நிறைந்திருக்கிறது; அவர் அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் நலனுக்கு ஏதுவாக எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறார். விசுவாசத்தினால் நாமும் ஆளுகை செய்கிறோம். பரலோக ராஜியத்தில்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

More

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.