எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 2 நாள்

பாடும் பாறைகள்

அனைத்தையும் அறிதல், சர்வ வல்லமை, கடந்தக் காலத்திலும் வருங்காலத்திலும் நித்தியம், எங்கும் இருத்தல் ஆகிய தேவனின் திவ்விய சுவாபங்களை சிறுவர்கள் புரிந்துகொள்ள முயற்சிப்பதை கவனிப்பது வேடிக்கையாக உள்ளது. “அப்பா, தேவன் சர்வ வல்லவர் என்றால் அவரால் எல்லாம் செய்ய முடியும் அல்லவா?" “ஆமாம்.” “அப்படியானால் அவரால் தூக்க முடியாத அளவிற்கு பெரிய பாறையை அவரால் செய்ய முடியுமா?

தேவன் மெய்யாகவே சர்வ வல்லவர் தான், ஆனால் அவர் சில காரியங்களை செய்ய முடியாது, செய்யவும் மாட்டார். அவர் தன்னை ஆராதிக்க யாரையும் கட்டாயப்படுத்த மறுக்கிறார். அன்பை போல ஆராதனையை கட்டாயப்படுத்த முடியாது. அது இலவசமாக கொடுக்கப்படாவிட்டால் அதில் அர்த்தம் இல்லை. இயேசு ராஜா எருசலேமிற்குள் தன் சின்ன மலையில் ஏறி பவனி வந்த நாளில், தன் வழியில் பெற்ற துதிகளும் ஓசன்னாக்களும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். நிச்சயமாகவே இஸ்ரவேலில் விசுவாசம் காணப்பட்டது!

ஆனால் சிலர் அதைக் கொடுக்கவில்லை. “அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (லூக்கா 19:39,40). தேவன் ஆராதிக்கப்படுவார். தன் தூதர்களுக்கு மூச்சு இழைக்கும் போது அவரால் கல்லுகளை பாட வைக்க முடியும்.

ஆனால் உன்னை அப்படி செய்ய வைக்க மாட்டார். இந்த குருத்தோலை ஞாயிற்றில், உங்களுக்கு உயிர் கொடுக்கும்படி தன் மரணத்திற்கு மனமுவந்து பயணம் செய்த உங்கள் தாழ்மையான சேவைசெய்யும் அரசனை மெச்சுக் கொள்ளுங்கள். உங்கள் குருத்தொலைகளை அசையுங்கள்; உங்கள் முழங்கால்களை முடக்குங்கள்; உங்கள் இதயங்களை ஒப்புக்கொடுங்கள்; அவருக்கு தகுதியான கீழ்படிதல், ஆராதனை மற்றும் தொண்டை கொடுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

More

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.