மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 74 நாள்

“நான்” என்ற பிரச்சனைகள்

மோசேயுடைய தங்கையாகிய மிரியாமும், சகோதரனாகிய ஆரோனும், மோசே விவாகம் செய்திருந்த எத்தியோப்பிய ஸ்திரீயைக் குறித்து கர்த்தரிடத்தில் குற்றம் சாட்டுகிறார்கள். பிரச்சனை உண்மையாகவே அதுவல்ல. கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் பேசினதில்லையோ?

“நான்” என்ற இந்த பெரிய பிரச்சனையை இங்கு பார்க்கிறோம். இதை பெருமை என்றும் சொல்லலாம். இது நம்முடைய வாழ்க்கையில் நுழைந்து, நம்மை ஒருவரை விட்டு மற்றவரைப் பிரித்து, நம்மை குழப்பி, இப்படி நமக்குள்ளே சண்டைபோட வைப்பது - பிசாசின் தந்திரங்களில் ஒன்றாகும்.

மேலே கூறப்பட்ட சம்பவத்தில், கர்த்தர் மோசேயைக் கொண்டு பேசினாரா; அல்லது மிரியாம், ஆரோனைக்கொண்டு பேசினாரா என்பது பிரச்சனையல்ல. அவர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும், மற்றும் தங்களையும், மற்றவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று ஏங்கினார்கள். அவர்கள் திட்டம் அவர்களையே பாதித்து விட்டது. இந்த முழு சம்பவத்தையும் வாசித்தால் தெரியும்; தேவன் மிரியாமை குஷ்டரோகத்தால் தண்டித்தார். அவள் பாளையத்திற்கு புறம்பே ஒரு வாரம் தங்கினாள்.

இன்னொரு காரியம்: அவள் ஏழு நாட்கள் பாளையத்திற்கு புறம்பே இருந்ததினால், மற்றவர்களும் முன்னோக்கி செல்ல முடியாமல், அவர்களைத் தடை செய்பவளாக இருந்தாள் (வ.15).

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று, பிசாசு தன்னுடைய பலம் மிக்க ஆயுதமாகிய பெருமையினால் யாராவது ஒன்று அல்லது இரண்டு பேரைத் தாக்கினாலும், அது அவர்களை சார்ந்த மற்றவர்களையும் பாதிக்கக் கூடியதாயிருக்கிறது. யாராவது ஒருவர் எழுந்து நின்று “நான் விசேஷமானவன்,” என்று சொல்லும்போது, சிலர் தங்களுடைய மனதிற்குள் சொல்லும் பதில்: “ஆனால் - என்னை விட நீ விசேஷமானவன் அல்ல.” அப்பொழுதுதான், பொறாமையும், கோபமும், எரிமலையைப் போல் வெடிக்கும். - இதனால், பிசாசு மட்டும்தான் சந்தோஷமாக இருப்பான்.

மற்றொரு உதாரணம். சில மாதங்களுக்கு முன்பாக கால்பந்து போட்டியின் சில காட்சிகளை செய்தி வாசிக்கும் போது, நடுவில் காட்டினார்கள். கோல் போட்டவன், அந்த கோட்டில் நின்றுகொண்டு, “நான் தான் சிறந்தவன், நான் தான் சிறந்தவன்,” என்று கத்தினான்.

அவன் வெற்றியடைந்தபடியால், உணர்ச்சிவசப்பட்டு அப்படி கூறுகிறான் என்பது தெரிகிறது. ஆனால், உண்மையாகவே வெற்றி பெற்றது, அவன் மட்டுந்தானா? பந்தை அவன் கோல் கம்பத்திற்குள் வீசி வென்றிருக்கலாம். ஆனால், எதிரிகளை சமாளிக்க விட்டு, பந்தை சாமார்த்தியமாக அதுவரை கொண்டு வந்த, அவன் குழுவைச் சேர்ந்தவர்களையும் வெற்றி சார்ந்தது என்பதை அவன் புரிந்துகொண்டு, அவர்களையும் சேர்த்து, “நாங்கள் தான் சிறந்த அணி” என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்த சம்பவம் ஒரு ஆபத்தான போக்கைக் குறிக்கும். அநேக நேரங்களில், நாமே எல்லா பாராட்டுகளையும் பெறவேண்டும் என்று நினைக்கிறோம். இன்னும் நிறைய பேர், தங்களுடைய திறமைகளுக்கும், தாலந்துகளுக்கும் தாங்களே காரணம் என்று நினைக்கின்றனர் (1 கொரிந் 4:7 ஐ பார்க்க). அவர்களும் - நாமனைவரும் - தெரிந்துகொள்ளவேண்டியது, “தேவனே” நமக்கு ஈவுகளையும் தாலந்துகளையும் திறமைகளையும் நம்முடைய வாழ்வின் முன்னேற்றத்திற்காக தருகிறார் என்பதை கண்ணோக்கிப் பார்க்க வேண்டும். கொடுக்கிறவர் “அவர்” ...நாம் அதைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் மாத்திரமே.

ஏதாவது ஒரு துறையில் நாம் ஓங்கி நிற்கிறோம் என்றால், தேவன்தான் நம்மை, அதற்கேற்ப, நமக்கு வேண்டிய தகுதிகளாலும் திறமைகளாலும் நிறைத்திருக்கிறார் என்று அர்த்தமாகும். நாம் அவர் கொடுத்திருக்கும் தாலந்துகளை வைத்து, இன்னும் சிறந்து செயல்படவேண்டும். அதே வேளையில், அவர் தான் அதைக் கொடுத்திருக்கிறார் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும். நாம் பெருமை பாராட்டி, நினைப்பதற்கு மிஞ்சி நம்மைக் குறித்து நினைக்க ஆரம்பித்தால், மற்றவர்கள் நமக்கு கீழே இருப்பவர்கள் என்பது போல நினைக்க ஆரம்பிப்போம். இதுதான் பெருமை, அகந்தை என்கிற பாவம். அப்படி இருப்பவர்களை, எவரும் மெச்சிக்கொள்ளமாட்டார்கள். பெருமையாக பேசுபவர்களைப் பார்த்தால் நாம் ஒரு அடி பின்னாலே எடுத்து வைத்துவிடுவோம். ஏனென்றால், அவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தி, பெருமையாய் பேசுவார்கள். கேட்கிற மற்றவர்கள், குறிப்பாக தாழ்ந்த மனப்பான்மை மற்றும் தங்களிடத்தில் குறைபாடு உண்டு என்று நினைக்கிறவர்கள் பிற்போக்காக உணரத்துவங்குவார்கள்.

“நான்” என்ற இந்த பெரிய பிரச்சனையை மேற்கொள்வது எப்படி தெரியுமா? நாம் ஒரு எளிதான உண்மையை எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும். நாம் இருக்கும் எல்லா நிலைகளிலும், நமக்கிருக்கும் எல்லாமே - “தேவனிடமிருந்து ஈவாக பெறப்பட்டவை.” நாம் மட்டும் இந்த உண்மையில் நம்முடைய கண்களை எப்போதும் பதிய வைத்தால், பெருமை நம் இதயத்தில் தலைதூக்காது.


அன்பும், பொறுமையும் உள்ள தேவனே, என்னுடைய தாலந்துகள், திறமைகளுக்கு நான்தான் காரணம் என்று நினைப்பேனானால், என்னை மன்னியும். என் மேல் வைத்துள்ள உம்முடைய இரக்கத்தினாலும், எல்லா ஈவுகள், திறமைகளுக்காகவும் உமக்கு எப்போதும் நன்றி சொல்ல எனக்கு உதவும். இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 73நாள் 75

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/