மனதின் போர்களம்மாதிரி

நம்முடைய இருதயங்களை காத்துக்கொள்வது
நீதிமொழிகளின் புத்தகத்தில் உள்ள வசனத்தை, பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்திலுள்ள வசனங்களோடு இணைக்க விரும்புகிறேன். நம்முடைய இருதயத்தை நாம் “காத்துக்கொள்ளவேண்டும்” என்று கர்த்தர் சொல்லுகிறதை நாம் வாசிக்கிறோம். நாம் “எல்லா காவலோடும்”, காத்துக்கொள்ளவேண்டும். இதன் உண்மையான அர்த்தம் தான் என்ன? நாம் எதிரியானவனின் வழிமுறைகளைக் குறித்து தயாராக, விழிப்பாக இருக்கவேண்டும். எல்லாம் நாம் விரும்புவது போல நடந்து, கர்த்தரும், அவருடைய ஆசீர்வாதங்களை நம்முடைய வாழ்க்கையில் பொழிந்து கொண்டிருக்கும்போது, நாம் கவலையீனமாக, இருதயத்தை காவல் காக்காமல் இருக்கும்போது, பிசாசின் தந்திரமான செயல்திட்டத்திற்கு ஆளாகிவிடுவது எளிதாகிவிடும்.
நாம் அனைவருமே அவ்வப்போது போராட்டங்களை சந்திக்கிறோம். ஆனால், நாம் கவனமாக நம்முடைய இருதயத்தை காக்கும்போது, நாம் போராட்டங்களை மேற்கொள்வதற்கு தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை அறிந்துகொள்ளுகிறோம்.
“காத்துக்கொள்வது” என்ற பதத்தை பயன்படுத்துவதை விட, நான் இவ்வாறு சிந்திக்கிறேன்; நம் இருதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள, ஒரு காவல்காரரை அல்லது பாதுகாப்பு படையை நியமிப்பது போன்றதாகும். ஒரு படைவீரன் காவல்காக்கும்போது, என்ன செய்கிறான் என்று யோசித்துப் பாருங்கள். எதிரி தாக்க வரும்போது ஜாக்கிரதையாக பார்ப்பான். ஏதோ தயார் நிலையில் இருக்கிறான் என்பது மட்டுமல்ல; அவன் சுறுசுறுப்பாக, எதிரியின் எந்த தாக்குதலையும் “எதிர்நோக்கியும்” நிற்கிறான்.
இதைப்போலத்தான் நாமும் - ஒரு இராணுவ வீரனைப்போல உஷாராக இருக்கவேண்டும். பிசாசு எங்கே வந்து விடுகிறானோ, என்ற பயத்தில் நாம் வாழ வேண்டியதில்லை. ஏதோ ஒரு, காவல்காரனை நமக்காக நியமித்திருப்பதுபோல நினைத்துக்கொள்ளுங்கள்.
எப்படிப்பட்ட காவல்காரன் நமக்குத் தேவை? நான் இரண்டு வெளிப்படையான காரியங்களை சிந்தித்தேன்; அவைகள் ஜெபமும், தேவனுடைய வார்த்தையும்தான். நம்முடைய இருதயத்தை காவல் காக்க, பரிசுத்த ஆவியானவரிடத்தில் கேட்டால், அவர் அந்த விண்ணப்பத்தை கனப்படுத்துவார். எதிரியானவன், தந்திரமாக நுழைய பார்த்தால், காவல்காரர் “கர்த்தர் சொல்லுகிறதாவது,” என்று சொல்லுவார். உடனே எதிரி ஓடிவிடுவான் (உண்மையாகவே பிசாசு ஒரு கோழை. அவன் நேருக்கு நேர் நம்முடன் மோத மாட்டான்).
பவுலுடைய வார்த்தையை மறுபடியுமாக படியுங்கள். நாம் நம்முடைய கவலைகளை தள்ளிவிட்டு (இதை ஜெபத்தின் மூலம், விண்ணப்பத்தின் மூலம் செய்கிறோம்) நம்முடைய இருதயத்தை நன்றியினாலே (ஸ்தோத்திரத்துடன்) தேவனுக்கு ஏறெடுக்கவேண்டும். பிசாசு நம்மை நோக்கி முன்னேறி வருவதை, எதிர்க்க கர்த்தர் நமக்கு உதவி செய்கிறார்.
நாம் நன்றியோடு தேவனை துதிப்பதை, ஒரு போதும் குறைத்துக் கொள்ளக்கூடாது. நாம் பிசாசின் தந்திரங்களை அறிந்துகொண்டு, தயார் நிலையல் இருக்க உதவும் எளிய வழிகளில் துதியும் ஒன்றாகும். நம்முடைய வாயின் வார்த்தைகளினாலும், பாடல்களினாலும் தேவனுக்கு நன்றி கூறும் போதும், நம்முடைய இருதயத்தை காக்கிறவர்களாயிருப்போம். பழைய பாடல் ஒன்று இப்படியாக சொல்லுகிறது: “எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள், கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்; ஆசீர்வாதம்... எண்ணு ஒவ்வொன்றாய், கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும்...!”
இது ஒரு சில வரிகளாக இருந்தாலும், அதை நாம் பாடும்பொழுது, நிறுத்தி, நிதானமாக, கர்த்தர் நமக்கு செய்த எல்லா நன்மைகளையும் நினைத்து பாடுவது...மேலானதாகும். நம்முடைய வாழ்க்கையில், கடந்த நாட்களில் கர்த்தர் செய்த நன்மைகளை, எண்ணி, நாம் அகமகிழும்போது, வரப்போகிற ஆசீர்வாதங்களுக்கு நாம் நம்மை திறந்து கொடுப்பது போலாகும்.
நாம் “நம்முடைய பலவீனங்களை” அறிந்துகொள்ளும்போது, மற்ற உடன் விசுவாசிகளுடன் சேர்ந்து ஜெபிக்கலாம். அவர்களுடன் ஒருமனப் பட்டு ஜெபிக்கும்போது, குறிப்பாக நாம் ஜாக்கிரதையாக இல்லாமல், பிசாசு நம்மை தாக்கி, நாம் வழிதவறிப் போய்விடாதபடிக்கு, அவர்களை நமக்காக ஜெபிக்க சொல்லலாம். நாம் அவர்களுக்காக பரிந்துமன்றாடு வதைப் போலவே, அவர்களும் நமக்காக பரிந்துமன்றாடலாம். தேவனை நோக்கி மற்றவர்களுக்காக குரல் எழுப்பி ஜெபிக்கும் மனிதர்களைவிட, சிறந்த காவலாளர் இருக்கவே முடியாது. இப்படிப்பட்ட ஜெபத்தைக் கேட்கவே பிசாசுக்கு பிடிக்காது. நமக்காக இப்படி ஜெபிக்கும் உடன் விசுவாசிகளை, சில நேரங்களில் நமக்கு உதவக்கூடியவர்களாக நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.
பரிசுத்த பிதாவே, நான் வேதத்தை வாசித்து, ஜெபித்து, ஜெபவீரர்களின் உதவியோடு எப்பொழுதும் ஐக்கிய ஜெபத்தை செய்யவும், என் இருதயத்தை அதன் மூலம் காத்துக் கொள்ளவும் உதவி செய்யும். என் இருதயத்தை எப்படிக் காத்துக்கொள்வதென்று எனக்கு கற்று தந்ததற்காக உமக்கு நன்றி. நான் தொடர்ந்து எப்பொழுதும் நன்றியறிதலோடு இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!

1 தெசலோனிக்கேயர்

பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)

Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!

கவலைகளை மேற்க்கொள்ளுதல்
