மனதின் போர்களம்மாதிரி
ஒருவரில் ஒருவர் அன்புகூறுங்கள்
“பகை” என்பது, மிகவும் வலிமையும், கொடுமையுமான ஒரு வார்த்தையாகும். விசுவாசிகளுக்குள், மற்ற விசுவாசிகளை வெறுப்பதைக்குறித்து ஒரு விவாதம் நடந்தால் பொதுவாக அவர்கள் “யாரையாவது நான் வெறுக்கிறேன் என்று என்னால் நம்பவே முடியாது” என்று சொல்லுவார்கள். யோவான் சொல்லியிருக்கும் வார்த்தைகளை நாம் யோசித்துப் பார்த்தால், பகையைக் குறித்து அவன் சொல்லவில்லை. விரோதம், பகை உணர்வு அல்ல. நாம் பொதுவாக யாரையும் வெறுப்ப தில்லை. ஆனால், அவர்களுக்கு பிரச்சனை அல்லது துன்பம் வரும் போது நாம் அவர்களுக்கு அக்கறையுடன் உதவி செய்வதில்லை.
சபைகளில், நாம் இந்நாட்களில் அதிகம் காண்பது - வசதிக்கேற்ப அன்புக்கூருவதுதான். அதாவது, நமக்கு நேரமும், பிரயாசமும், வசதிப்படும்போது மற்றவர்களை நாம் போய் சந்திப்பது.
அன்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களை நாம் சந்திக்க முடியாமல், சாத்தான் நம்மை பிரிக்கும் ஒரு திறந்த வாசலைப்போலாகும்; இத்தகைய மனப்பான்மை. இயேசுவும் நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். யோவான் 13:34,35ல், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார். நாம் ஒருவரிலொருவர் அன்புகூருவதைப் பார்த்தே, நாம் இயேசுவின் சீஷர்கள் என்று மற்ற உலக மக்கள் அறிந்துகொள்வார்கள். ஒருவேளை, மற்றவர்களுடைய தேவைகளில்; நாம் நம்முடைய இயல்பான தன்மையையும் மீறி உதவாமல் இருப்பதினால்தானோ அநேக விசுவாசிகளை குறித்து உலக மக்கள் அப்படிச் சொல்லத் தவறுகின்றனர்.
“அன்பு” என்ற சொல், செயல்படும் வினைச்சொல்லாகும். மற்றவர் களிடத்தில் நாம் அன்புகூரும்போது, அவர்களுக்கு நாம் எதையாவது செய்வோம் (வேதத்தின் அடிப்படையில்). “வெறுப்பது” என்பது, ஒன்றும் செய்யாமல் திரும்பிக்கொள்வதாகும். அதைவிட, மோசமானது, நாம் அவர்களை பழித்து, குறைகூறி, இவர்கள் மட்டும் ஆண்டவரித்தில் அன்பு கூர்ந்தால், இப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டார்கள் என்று கூறுவோம்.
நாம் தேவனைப் போல, “அன்பிலே நடந்தால்”, நாம் நிச்சயமாக வளருவோம், பிறருடைய வளர்ச்சிக்கும் உதவுவோம். நம்முடைய உறவும் இத்தகைய அன்பின் அடிப்படையில் இருக்கும்போது, பிசாசானவன் நம்மை எதுவும் செய்ய முடியாது.
நான் என்னுடைய நான்காவது பிள்ளையை பெறுவதற்கு முன்பு, கர்ப்பமான நிலையில் மிகவும் வியாதிப்பட்டதைக் குறித்து, என்னுடைய புத்தகமான “மனதின் போர்களம்” குறிப்பிட்டிருக்கிறேன். நான் வியாதிப்பட்டபோது, என்னுடைய சுகத்திற்காக கர்த்தரை நோக்கி ஜெபித்த நேரத்தில், என்னுடைய சபையிலே, இதே போல் கர்ப்பமான ஒரு பெண் மிகவும் சோர்வும், வியாதியும் உள்ளவளாக இருந்தபோது; நான் அவளை பழித்ததை கர்த்தர் எனக்கு ஞாபகப்படுத்தினார். அவளைப்போலவே இப்பொழுது நான் இருந்தேன். நான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன் என்று வருந்தினேன். அதோடு நின்று விடாமல், இந்த சூழ்நிலையில் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். நான் எதிர்பார்த்த அளவு அவர்கள் இல்லை என்ற காரணத்தால்; அவர்களை பழித்து, குற்றப்படுத்தி, நியாயந்தீர்த்ததைக் குறித்து கர்த்தர் என்னை நினைவுகூர வலியுறுத்தினார்.
நாம் அனைவருமே தவறு செய்கிறோம். அனைவருக்குமே பலவீனங்கள் உண்டு. ஆனால், அவற்றை நமக்கு சுட்டிக்காட்டவோ அல்லது நாம் மற்றவர்களுடைய தவறுகளை நியாயந்தீர்க்கவோ, தேவன் நம்மை அழைக்கவில்லை. மாறாக, நாம் மற்றவர்மேல் கரிசனையோடு கிறிஸ்து வின் அன்பை எவ்விதத்திலாவது காண்பிக்கவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். ஒருவருக்கொருவர் தயவாயும், மன உருக்கமாயும், மன்னிக்கிறவர்களாயும் இருக்க; வேதம் நமக்கு கூறுகிறது. பிசாசின் தாக்குதல்களை நாம் அதன் மூலம் ஜெயிக்கமுடியும். “அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் (விசனம் அல்லது வருத்தப்படுத்தாதிருங்கள்). சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்த துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது. ஒருவருக் கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:30-32); என்று பவுல் நமக்கு இப்படியாக சொல்லுகிறார்.
“இயேசுவுடைய சீஷர்கள்” என்பது; தயவாயும், மன உருக்கமாயும், மன்னிக்கிறவர்களாயும் இருப்பது என்பதை இந்த வசனங்கள் மூலம் கர்த்தர் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, உண்மையாக அன்புகூருவது என்பது, அவர்களுடைய பலவீனங்கள், குறைகளுக்கு அப்பாற்பட்டதாயிருக்க வேண்டும். நாம் இப்படி இருந்தால், கிறிஸ்து நம்மில் அன்புகூருவது போல நாம் மற்றவர்களை அன்புகூருவது, நமக்கு கடினமான ஒன்றாக இருக்காது.
அன்புள்ள பரலோக பிதாவே, நான் மற்றவர்களிடத்தில் அன்புகூர்ந்து, மன உருக்கமாயும், தயவாயும் இருக்க விரும்புகிறேன். நான் அநேக நேரங்களில் இதை செய்ய தவறுவதையும் அறிகிறேன். என்னை புண்படுத்துபவர்களை நான் மன்னிக்கவும் எதிர்பார்க்கும் நிலைக்கு இல்லாதவர்களை மன்னிக்கவும் எனக்கு உதவும், என்று இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/