மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 100 நாள்

உள்ளத்தில் உண்மை

இந்த சங்கீதத்தின் தலைப்பு இப்படி ஆரம்பிக்கிறது; “பத்சேபாளிடத்தில் தாவீது பாவத்திற்குட்ட பின்பு, நாத்தான் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவன் பாவத்தை உணர்த்தினபோது; பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.” தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்து, அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று அறிந்து, யுத்தத்திலே அவள் கணவனை கொன்று போட கட்டளையிட்டான். அதற்காக, அவன் உணர்த்தப்பட்ட போது, கர்த்தருடைய இரக்கங்களுக்காக கதறினான்.

அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி, நீ சாகாதபடிக்கு கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார். ஆனாலும், இந்த காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினாலே, உனக்கு பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும்” (2 சாமுவேல் 12:13-14) என்றான்.

இந்த சம்பவத்திலிருந்து, முதல் பாடத்தை நாம் கிரகித்துக்கொள்ள வேண்டும். நாம் கர்த்தரை விட்டுக்கொடுத்தோமானால், நம்மை நாமே காயப்படுத்திக்கொள்கிறோம். அதோடு கர்த்தருடைய நாமத்திற்கும் கனவீனத்தைக் கொண்டு வருகிறோம். எப்பொழுதெல்லாம் தவறான அடியெடுத்து வைக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நம்மை நகைப்போடு, விரல் நீட்டி, சுட்டிக்காட்டுபவர்கள் உண்டு. இந்த இரண்டும் சேர்ந்தே போகும். தேவனுடைய நாமத்திற்கு அவகீர்த்தி கொண்டு வருவதோடல்லாமல், நம்மை நாமே தோல்விக்குள்ளாக்குகிறோம். சரியான காரியம் எது என்று அறிந்தும் தவறாக தெரிந்துக்கொள்ளக்கூடாது.

இது போதாது என்று பிசாசு வேறு நம்மிடம், “பார் நீ எவ்வளவு மோசமானவன். உன்னைக் கர்த்தர் மன்னிக்க மாட்டார். இது ரொம்ப மோசம்,” என்று சொல்லுவான்.அவன் பொய் சொல்லுகிறான். ஏனென்றால், அது ஒன்றை தான் அவள் சிறப்பாகச் செய்வான். அவனுடைய வார்ர்த்தைகளுக்கு நீங்கள் செவிகொடுக்காதீர்கள், ஏனென்றால், நீங்கள் செய்த எந்த பாவத்தையும் கர்த்தர் மன்னிக்கக்கூடாதவர் அல்ல. கர்த்தர், பாவங்களை இருந்த இடம் தெரியாமல் அகற்றிப்போடுவார்.

வேறொரு காரியத்தையும், இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நாம் உண்மையை சந்தித்தே ஆகவேண்டும். நீங்கள் பாவம் செய்து தேவனுக்கு கீழ்ப்படியவில்லை. உங்கள் பாவத்தைக் குறித்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நாம் சாக்குபோக்கு சொல்லலாம் (நம்மில் அநேகர் அதில் வல்லவர்கள்). அல்லது தாவீதின் உதாரணத்தை நாம் பின்பற்றலாம். தீர்க்கதரிசி, “நீயே அந்த மனிதன்...” (2 சாமுவேல் 12:7) என்று சொன்னபோது, ராஜா தன் தவறை மறுக்கவில்லை. அல்லது தன் செயலை நியாயப்படுத்தவில்லை. தாவீது, தான் பாவஞ்செய்ததை ஒத்துக்கொண்டு அறிக்கையிட்டான்.

“என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக பாவம் செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும் போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும் போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும், இதை அறிக்கையிடுகிறேன்” (வ.3-4) என்று இந்த சங்கீதத்தில் அவன் எழுதியிருக்கிறான். 

நீங்கள் இயேசு கிறிஸ்துவை பின்பற்றும்போது, நீங்கள் உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு, உலகத்திற்கு அவரை விசுவாசிப்பதை அறிவிப்பதோடு மட்டுமல்ல; நீங்கள் சத்தியத்திற்காக நிற்பதையும் பறைசாற்றுகிறீர்கள். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது சுலபம். ஆனால், நாம் முழுவதுமாக, ஜாக்கிரதையாக நமக்குள்ளாக உண்மையுடன் இருக்க தேவன் நம்மை அழைத்திருக்கிறார். மற்றவர்கள் தவறு செய்தாலும் தப்பித்துக்கொள்ளுகிறார்களே, அல்லது அவர்கள் நடத்தையை நியாயப்படுத்துகிறார்களே என்ற பார்க்க வேண்டாம். நாம் மற்றவர்களையோ, பிசாசையோ, சூழ்நிலைகளையோ பழிசுமத்த முடியாது.

இஸ்ரவேலின் பெரிய ராஜா, தான் தவறு செய்தபோது கர்த்தரை நோக்கி கதறி சொன்னது: “என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது” (வ.3). நாம் தவறும் போது, இதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பாவங்கள், தவறுகள், குறைகள் (நீங்கள் என்னவென்று வேண்டுமானாலும் அழைக்கலாம்) அதை ஒத்துக்கொண்டு, தேவனிடம் அறிக்கை செய்யும் வரை, அவை இருக்கத்தான் செய்யும். நாம் அதை அறிக்கை செய்த பின் உண்மையோடும், உத்தமத்தோடும் வாழும் சந்தோஷத்தை அறிந்துகொள்ளமுடியும்.

இந்தக் கடைசித் தியானத்தில், இதுதான் உங்களுக்கு கடைசிசெய்தி. இந்த முழு புத்தகத்தின் செய்தியும் இதுதான். உங்கள் “உள்ளத்தில் உண்மையுடன்” வாழ போராடுங்கள். நீங்களும் - கர்த்தரும் - தான் உங்கள் உள்ளத்தில் உள்ளதை அறிவீர்கள். உண்மையிலும், உத்தமத்திலும் வாழுங்கள்.


பரிசுத்த பிதாவே, தாவீது ஜெபித்தது போல, “இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக் கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.” நான் உள்ளத்தில் உண்மையை விரும்பவும், என்னால் முடிந்த அளவிற்கு திறந்த மனதோடும், உண்மையோடும் வாழ எனக்கு உதவி செய்யும். உம்மை கனப்படுத்துகிற வாழ்க்கையைத்தான் நீர் ஆசீர்வதிக்கிறீர். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 99

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/