மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 95 நாள்

தவறான செயல், தவறான விளைவுகளை ஏற்படுத்தும்

நான் இந்த வசனங்களை எழுதினதும், சற்று நிதானித்து, மூன்று முறை இதைத் திரும்ப படித்தேன். அந்த ஜனங்கள் சொன்னக்காரியம் எனக்கு நம்புவதற்கு கடினமாக இருந்தது. “எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது, நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயி ருக்கும்!” இவ்வளவு பயங்கரமான காரியத்த அவர்கள் எப்படி சொல்லி யிருக்க முடியும்? தேவனோடு விடுதலையுடன் இருப்பதைவிட நாங்கள் பாடுபட்டு, வேதனைப்பட்டு, அடிமைத்தனத்தில் செத்தால் பரவாயில்லை என்று உண்மையிலேயே சொல்லுகிறார்களா?

தேவனுடைய வார்த்தை பொய் சொல்லாது; அதனால், அவர்கள் சொன்னது உண்மையாகத்தான் இருந்திருக்கவேண்டும். இந்த வசனப்பகுதி, அவர்கள் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. அவர்கள் மாறவில்லை, மாறவும் போவதில்லை. அவர்களுக்கு எல்லாம் நன்றாக நடந்தாக வேண்டும் - அதாவது அவர்கள் விரும்பும் வழியில் காரியங்கள் நடைபெறவேண்டும் - ஆனால், அவர்களோ ஒன்றும் செய்ய விருப்பமில்லாமல், பல்லைக் கடித்துக்கொண்டு உறுமிக்கொண்டிருப்பார்கள்.

கெட்டது செய்தாலும், நல்லது நடக்கும் என்ற பழைய எண்ணம் ஒன்று மக்களுக்கு உண்டு. அப்படிப்பட்டவர்கள் தேவனிடத்தில் முறுமுறுப்பார்கள், ஆனால், தெய்வீக ஆசீர்வாதங்களை எதிர்பார்ப்பார்கள். அது எப்படி முடியும்? எப்படி அவர்கள் குழம்பிப்போய், முறுக்கி யோசிக்க முடியும்? ஆனால், இப்படிப்பட்ட ஜனங்கள் இந்த நாட்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

ரோஸ் என்ற பெண், குடிபழக்க வாலிபனான ஜானை திருமணம் செய்து கொண்டாள். அவன் குடிபோதை ஏறியதும் அவளை அடித்தான். அவள் தன் பிள்ளைகளைக் குடிபழக்கமுள்ளவன், அவனை விட்டுச் சென்றாள். இரண்டு ஆண்டுகளானதும் ரோஸ் மறுபடியும் திருமணம் செய்துக் கொண்டாள். அவள் மறுபடியும் ஜானை திருமணம் செய்துகொண்டாள். ஓ! அந்த ஜான் அல்ல, ரால்ஃ என்பது இந்த இரண்டாவது கணவரின் பெயர். இவனும் குடிகாரன், அவள் மறுபடியும் அதே சோகமான முடிவை எடுத்தாள். அவளது மூன்றாவது ஜானின் பெயர் கென். அவர்களுடைய பெயர்கள் வித்தியாசமானவைகளாக இருந்தாலும், அவள் அதே மனிதனை மூன்று முறை திருமணம் செய்தது போல் இருந்தது.

நான் ரோஸை சந்தித்தபோது, “நல்ல ஆண்கள் இருக்கிறார்களா?” என்று முறுமுறுத்தவாறே என்னிடம் கேட்டாள். அவள் எந்த ஒரு கிறிஸ்தவ கூட்டத்திலும் கலந்துகொண்டதில்லை, அவள் ஒரு நல்ல விசுவாசியான மனிதனை சந்தித்ததுமில்லை. அவள் சந்தித்தவர்களெல்லாம் பார்ட்டிக்கு வந்தவர்கள். பார்ட்டியை விரும்பிய ஆண்கள்தான் அவளை கவர்ந்திருக்கிறார்கள், என்று அவள் பிறகு என்னிடம் ஒத்துக்கொண்டாள்.

என்னுடைய குறிப்பு என்னவென்றால், இஸ்ரவேல் மக்களை நாம் கண்டனம் பண்ணலாம். ஏனென்றால் அவர்களைப் பற்றிய முழுக் கதையையும் வேதம் தெளிவாகக் கூறுகிறது. பவுல் எழுதுபோது, அவர்கள் வனாந்திரத்திலே அலைந்து திரிந்ததையும், முறுமுறுத்ததையும் எழுதிவிட்டு, அது போல நாம் செய்யக்கூடாது என்று கூறுகிறார். அவர்கள் சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள். இவைகளைளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்கு சம்பவித்தது. உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டும் இருக்கிறது (1 கொரிந்தியர் 10:10,11).

இந்த சம்பவங்களெல்லாம் நமக்கு எச்சரிப்பாகவும், நம்மை கண்டிக்கவும் நாம் சரியாக செயல்பட அறிவுரைகளாக நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நீங்களும் இஸ்ரவேல் மக்களைப் போல தொடர்ந்து முறுமுறுத்து வாழ்ந்தால் அவர்களுக்கு நேரிட்டதே உங்களுக்கும் நேரிடும் என்று பவுல் எழுதுகிறார். சகோதரி ரோஸ் எப்படி வாழ்ந்தாளோ, அதைப் போலவே நாமும் வாழ்ந்தால் அதே போன்ற பரிதாபமான முடிவுதான், நமக்கும் ஏற்படும். ரோஸ் என்ற பெண்ணைக் குறித்து நான் உதாரணமாக சொன்னாலும்; அதே போல, வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு சூழ்நிலைகளில் உண்டாகும். உங்கள் சம்பள செக் வருமுன்னே, நீங்கள் பணத்தை செலவு செய்கிறவர்களா? தவறான உணவு பழக்கத்தால் நாம் தேவனை கனவீனமாக்குகிறோமா? உங்கள் சூழ்நிலை, பிரச்சனை எத்தகையதாக இருந்தாலும், நீங்கள் தவறான காரியங்களை உங்களுக்குள் புகுத்தும்போது தவறான முடிவுகள்தான் ஏற்படும். 

பிற்போக்கான விளைவுகளைக் குறித்து நீங்கள் எப்பொழுது களைத்து போகிறீர்களோ - பிசாசானவனுடைய பொய்யினால் அலைக்கழிக்கப்பட்டது போதும் என்று நினைக்கிறீர்களோ - அப்படியென்றால், நீங்கள் மாறுவதற்கு ஆயத்தமாகி விட்டீர்கள் என்றுதான் அர்த்தம். வனாந்திரத்திலே இருந்த ஜனங்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வெளியே மரித்துப்போனார்கள். காரணம், அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் மாறுவதற்கு உங்களுக்கும் சந்தர்ப்பமுண்டு. நீங்கள் அவற்றை அறிந்திருப்பதோடுமட்டுமல்ல, பரிசுத்த ஆவியானவர் உங்களை மாற்ற விரும்புகிறார் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள்.

நீங்கள் மாற முடியும். முற்போக்கான சிந்தனைகளை சிந்திக்க, கர்த்தரிடம் உதவிக்கேட்டு, அதன் மூலம் மாறுவதற்கு தொடங்கலாம். ஏனெனில், முற்போக்கான எண்ணங்கள், முற்போக்கான செயல்பாடுகளை பிறப்பிக்கும். உங்கள் போக்கு மாறினால், உங்கள் வாழ்க்கையே மாறும். இது சுலபமல்ல, ஆனால் எளிமையானது.


பிதாவே, உம்முடைய ஆவியானவரின் உதவியோடு ஆரோக்கியமான முற்போக்கான, தெய்வீகமான சிந்தனை களை சிந்திக்க எனக்கு உதவிச் செய்யும். நல்ல மனப்போக்கு உடையவனாக உம்மை பிரியப்படுத்தவும்; அதன் மூலம் நிரந்தர, முழு வெற்றியை பெற, எனக்கு உதவும். இயேசு கிறிஸ்துவின் மூலம் கேட்கிறேன். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 94நாள் 96

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/