மனதின் போர்களம்மாதிரி
உடனடியான பதில்
“உடனடியான பதில் வருவதற்கு, நீண்ட நேரமெடுக்கும்” என்று சிரித்தவாறே சொன்னாள் என்னுடைய தோழி. தன் காப்பியை மைக்ரோவேவ் அவன் சூடாக்குவதற்கு 90 வினாடிகளுக்கு அதைப் பொருத்தி விட்டு, தரையில் கால்களால் தாளம் போட்டுக்கொண்டே பொறுமையின்றி நின்றுக்கொண்டிருந்தாள் அவள்.
நான் அதைப் பார்த்து சிரித்தவாறு நின்று கொண்டிருந்தேன். ஆனால், அதே நேரத்தில், என் மனதில் எண்ணங்கள் ஓடியது. எந்த அளவு “திடீர்’ என்ற வார்த்தையால் நம் வாழ்ககை பாதிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக திடீர் கடன் பெறும் வசதி, திடீர் ஓட்ஸ் உணவு, திடீர் காதல், இதே போல் தான் கர்த்தரையும் இந்த “திடீர் வலையில்” இழுக்க பார்க்கிறோம். “ஆண்டவரே, இப்பொழுதே தாரும்” என்று ஜெபிக்கிறோம். அல்லது “உடனே,” என்ற வார்த்தையை உபயோகிக்காமல், அர்த்தம்படுமாறு ஜெபிக்கிறோம்.
என் வேதப்பாடத்தின் அநேக ஆண்டுகளாக நான் கற்ற ஒன்று, கர்த்தரை நாம் அவசரப்படுத்த முடியாது. அவருடைய நேரத்தில் அவர் காரியங்களை செய்வார். நாம் பார்த்த முந்தின தியானப்பகுதிகளில் ஆபிரகாமும், யோசேப்பும் எப்படி நீண்ட காலம் கர்த்தருக்காக காத்திருந்தனர் என்று நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். மோசே ஒரு மனிதனை கொன்ற பின், வனாந்திரத்திற்கு ஓடிப்போய், கர்த்தர் அவனுடன் இடைபட நாற்பது ஆண்டுகள் கர்த்தருக்கு காத்திருக்க வேண்டியதாயிருந்தது. ராகேலும், அன்னாளும் குழந்தையை பெறுவதற்கு முன் அநேக ஆண்டுகள் காத்திருந்தனர்.
கண்கள் குருடாக்கப்பட்ட சவுலுக்காக ஜெபிக்க, கர்த்தர் அனனியாவை அனுப்பி, “... நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும், என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்” (அப்.9:15) என்றார். சுகமாக்கப்பட்ட பின், பவுல் உடனே எழுந்து சென்று ராஜாக்களுக்கு பிரசங்கித்தானா? கர்த்தர் அந்த வாக்கை நிறைவேற்றும் முன் வருடங்கள் உருண்டன. இங்கும் உடனடியாக செயல்பாடில்லை.
அநேக மக்கள், காத்திருக்க பொறுமையிழந்து விடுவார்கள். அந்த நேரத்தில் பிசாசு அவர்கள் காதுகளில், “தேவன் சொன்னதை செய்யமாட்டார். அப்படி செய்வதாக இருந்தால், இந்நேரம் செய்திருக்கணுமே,” என்று கூறுவான்.
மனிதர்களுடைய பொறுமையற்ற தன்மையைக் குறித்து, நான் யோசித்துப் பார்க்கும் போது, பொறுமையின்மை என்பது பெருமையின் கனியாக இருக்கிறது. பெருமையுள்ளவர்கள் பொறுமையோடு காத்திருக்கும் மனப்போக்கு இல்லாதவர்கள். அவர்கள், “எனக்கு தகுதி இருக்கிறது - இப்பொழுதே அதைப்பெற்றுக்கொள்ள நான் பாத்திர மானவன்” என்று கத்துவார்கள்.
யாக்கோபு 5:7ல், யாக்கோபுடைய வார்த்தையிலிருந்து இரண்டு காரியங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதலாவதாக, நீ பொறுமையாயிருந்தால் காத்திரு” என்று கர்த்தர் சொல்லாமல், “நீ காத்திருக்கும் போது பொறுமையோடிரு” என்று சொல்லுகிறார். பயிரிடுகிறவனுடைய உவமையை அழகாக சொல்லுகிறார். பூமியை அல்லது மண்ணை பண்படுத்தி, விதைவிதைத்து அதன் பிறகு காத்திருக்கிறான். கர்த்தருடைய நேரத்திலே பயிர்விளையும் காலம் வேறு, தக்காளி விளையும் காலம் வேறு, என்றும் அறிந்திருக்கிறான்.
இரண்டாவதாக, நாம் நம்முடைய வாழ்க்கையை இப்பொழுதே - “காத்துக்கொண்டிருக்கும் நேரத்திலேயே,” மகிழ்ச்சியாய் அனுபவிக்க வேண்டும். காத்திருக்கும் நேரத்தை நிறைய மக்கள் வீணாக்கும் நேரமாக குறைசொல்லுகிறார்கள். (காத்திருப்பதைக் குறித்து அவர்கள் பேசுவது இது தான்). மளிகைக் கடையின் முன் வரிசையில் நிற்கும்போது, அல்லது பஸ்ஸில் ஏற வரிசையில் நின்று, ஒவ்வொரு அடியாக, முறுமுறுத்துக் கொண்டே காத்திருந்து நகர்வதை விட, “கர்த்தாவே உமக்கு நன்றி. நான் இப்பொழுதாவது அமைதியாக நிற்க முடிகிறதே, இந்த பொழுதை நான் மகிழ்ச்சியாய் அனுபவிக்க முடிகிறது, உமக்கு நன்றி,” என்றால் எவ்வளவு நிம்மதியாயிருக்கும்! நம் வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் நாம் வேலை செய்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது அவசியமில்லையே!
சங்கீதக்காரன் இப்படியாக சொல்லுகிறான்: “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும், என்னை துன்பப் படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்” (சங்கீதம் 31:15). நம்பிக்கையற்ற நிலைமையிலிருந்து ஒரு மனுஷனின் ஜெபமாக இது இருக்கிறது. அவனுடைய சத்துருக்கள் அவனை கொன்று போட வந்த போதும் அவன் பயப்படவில்லை. ஆனால், “என்னுடைய காலங்கள் உம்முடைய கரத்திலிருக்கிறது,” என்றான்.
இப்படித்தான் நீங்கள் வாழவேண்டும் என்று கர்த்தர் உங்களை எதிர்பார்க்கிறார். உங்கள் வாழ்க்கையும் உங்கள் காலமும் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. அப்படியென்றால், நீங்கள் காத்திருக்கும்போது, தாமதமானால், அது தேவனுக்கு தெரியும் இல்லையா? வாழ்க்கையின் கடிகாரத்தையே கட்டுப்படுத்துகிறவர் அவர். “என்னுடைய காலங்கள் உமது கரத்தில் இருக்கிறது” - நம்முடைய காத்திருக்கும் காலத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நாம் பெறுவதிலும், முன்னேறுவதிலும், நம் கவனத்தை செலுத்தாமல், நாம் அமைதியாக அமர்ந்திருக்கும் நேரத்தை, கர்த்தரிடம் இருந்துபெற்ற ஒரு வெகுமதியாக நினைத்து நாம் அனுபவிக்கவேண்டும் என்றே அவர் விரும்புகிறார்.
பிதாவே, நான் பொறுமையிழந்தவனாக என் ஜெபங்களுக்கு உடனே பதில் வரவேண்டும். என் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காணவேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால், அது உம்முடைய வழி அல்ல. என்னுடைய காலங்கள் உம்முடைய கரத்திலிருக்கிறது. உமக்காக காத்திருக்கும் நேரத்தை நான் மகிழ்ச்சியாய் அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். உமக்காக காத்திருக்கும் நேரம் பலனுள்ளது என்று எனக்கு நினைவுபடுத்தும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/