மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 94 நாள்

பிரச்சனை என்ன?

“உங்களுக்கு என்ன தான் பிரச்சனை,” என்ற கேள்வியை நான் இஸ்ரவேல் மக்களிடம் கேட்க விரும்புகிறேன். அவர்கள் பிரதான தொழிலே முறுமுறுப்பது தான். மேலே உள்ள வசனங்களில் பார்த்ததுபோல, அவர்கள் முறுமுறுத்து, புலம்பியதோடல்லாமல், வனாந்திரத்திற்கு கொண்டு வந்து, அவர்களை மோசே சாகடிக்கிறான் என்று நிந்தித்தார்கள். மற்ற வேதப் பகுதிகளிலும் நாம் பார்க்கும் போது, உணவு சரியில்லை என்று புகார் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு மன்னாவை வழங்கினார். அவர்கள் தினமும் அதை காலையில் புதிதாக எடுக்கவேண்டும். ஆனால், அந்த பரலோக உணவு அவர்களுக்கு பிடிக்கவில்லை.

சுறுக்கமாக சொல்ல வேண்டுமானால், கர்த்தர் என்ன செய்தால் என்ன; அல்லது மோசேயும், ஆரோனும் எதைச் சொன்னால் என்ன அவர்களுக்கு கவலையேயில்லை. முறுமுறுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு விட்டனர். அதிகபட்சம் பழக்கம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். ஒரு காரியத்தைக் குறித்து நீங்கள் முறுமுறுக்க ஆரம்பிக்கிறீர்கள். கொஞ்ச நேரத்தில், வேறு காரியம் புகார் சொல்ல எழும்பிவிடும்.

புலம்புகிற இரண்டு பேர் ஒன்று சேர்ந்தால், இன்னும் மோசம். இலட்சக்கணக்கான, எகிப்திலிருந்து வந்த மக்களும் என்ன செய்தார்கள்? மனநிறைவற்ற இந்த குறைசொல்லும் வியாதி தாக்கியதும், அது ஒரு கிருமியைப் போல மாறி, அனைவரையும் அந்த வியாதிக்குள்ளாக்கியது. எல்லாவற்றையும் குறித்து அதிருப்தி. பிரச்சனை லேசாக வந்தாலும் எகிப்துக்கு திரும்ப அவர்கள் ஆயத்தம். அடிமைகளாக இருப்பதே மேல் என்று விரும்பி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு முன்னேற விரும்பாதவர்கள்.

ஒரு முறை, மோசே பன்னிரெண்டு வேவுகாரரை தேசத்தை பார்த்து வர அனுப்பினார். அவர்கள் திரும்பி வந்து நல்ல செழிப்பான அற்புதமான சேதத்தைக் குறித்து அவர்கள் கண்ட செய்திகளை சொன்னார்கள். (எண்ணாகமம் 13, 14 அதிகாரங்களை பார்க்கவும்). முறுமுறுக்கும் முறையிடும் பத்து வேவுகாரராக சேர்ந்துக் கொண்டனர் (யோசுவா, காலேபைத் தவிர). “அது நல்ல தேசம்” என்று ஆமோதித்தனர். ஆனால், முறுமுறுப்பவர்கள் முற்போக்கான காரியத்தை சொல்லி அதோடு நிறுத்திவிடமாட்டார்கள். “ஆனால், அங்கு வாழும் மக்கள் பெலவான்கள்... நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்...” (13:28,33).

கர்த்தர் அவர்களுக்கு செய்த எல்லா அற்புதங்களையும் அவர்கள் மறந்து விட்டார்களா? ஆமாம். இங்குதான் பிசாசு, அநேகரை மோசம் போக்குகிறான். அவர்களுடைய குறை தெரிவிக்கும், புலம்பல், சின்னக்காரியத்திற்குதான். எதற்காவது குற்றம் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற சுயநினைவு இல்லாவிட்டால், அப்படியே தொடர்ந்து செய்வார்கள்; என்ன பிரச்சனை என்ற கேள்விக்குப் பதிலாக “எனக்கு பிரச்சனை ஒன்றுமில்லை; “நான் தான் பிரச்சனை,” என்று அவர்கள் சொல்லவேண்டும்.

மோசேயின் நாட்களிலும் இதுதான் சூழ்நிலை, கானானிலுள்ள எதிரி, இவர்கள் சந்தித்த எதிரிகளை விட மோசமான, பெரிய, சக்திவாய்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பிரச்சனை இன்னும் கொடியதாக இருந்திருந்தால், என்ன செய்திருப்பார்கள்? எகிப்தியரை செங்கடலிலே தேவனால் அழிக்க முடிந்ததனால் இன்னொரு அற்புதத்தை ஏன் அவர்களுக்கு தர முடியாதா? அவர்கள் அவருடைய ஜனம், அவர்களை அவர் அன்புகூர்ந்தாரே. பிரச்சனையே அவர்கள்தான். அதை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் சுற்றித்திரிந்தும் இந்த செய்தி அவர்களுக்கு எட்டவில்லை. எப்படி இவ்வளவு மந்தமாக இருந்தார்கள் என்று நான் வியந்ததுண்டு. இது சொல்வது எளிது - ஏனென்றால் நான் அந்த இடத்திலில்லை. அந்த சூழ்நிலையை என்னால் கற்பனை செய்துதான் பார்க்க முடிகிறது. நம்முடைய சொந்த வாழ்க்கையை நாம் பரிசோதித்து, நாம் ஏன் பல்லைக் கடித்துக்கொண்டு புலம்புகிறோம் என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

“ஆனால், என்னுடைய சூழ்நிலை வித்தியாசமானது,” என்று ஜனங்கள் அடிக்கடி என்னிடம் கூறுவார்கள்.

அது உண்மைதான், ஆனால் நம் மூலம் செயல்படும் அதே ஆவிதான் பழங்காலத்தில் இஸ்ரவேலில் இருந்தது. முறுமுறுப்பதிலும், புகார் கூறி, குறை கூறுவதிலும், தவறு கண்டுபிடிப்பதிலும் மூழ்கி போய், நம் நேரத்தையும் பெலத்தையும் செலவிட்டு விட்டபடியால், நல்ல காரியங்களை பாராட்ட நம்மால் முடியவில்லை.

“உங்கள் வாழ்க்கையில் நல்ல காரியம் தான் என்ன?” எல்லாவற்றையும் குறித்து, எப்பொழுதும் குறை கூறிய ஒரு பெண்ணிடம், நான் ஒரு முறை இப்படி சவால் விட நேர்ந்தது.

அவள் என்னை முறைத்துப் பார்த்து நான் சீரியஸாக சொல்வதை அறிந்து, “எனக்கு நல்ல கணவருண்டு, நான் நேசிக்கும் இரண்டு பிள்ளைகள் எனக்கு உண்டு, அவர்களும் என்னை நேசிக்கிறார்கள்.”

நான் சிரித்துக்கொண்டே, “தொடர்ந்து சொல்” என்றேன். அவளுடைய மாற்றம் அவள் வார்த்தைகளால் சொல்லாவிட்டாலும், பார்த்தாலே தெரிந்தது. “எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று நினைக்கிறேன், நான் தான் பிரச்சனையாக இருந்திருக்கிறேன்,” என்று ஒத்துக்கொண்டாள்.

சரியாக சொன்னாள் அவள்!


பிதாவே, நான் இருக்கும் சூழ்நிலையில் மற்றவர்களை பிரச்சனையாக பார்த்ததற்காக என்னை மன்னியும். நான் தானே என்னுடைய வெற்றிக்கு விடுதலைக்கு தடையாக இருப்பதை உணராமல், மகிழ்ச்சியில்லாமல் இருந்து விட்டேன். எனக்கு மன்னித்து என்னை விடுவியும். இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 93நாள் 95

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/