மனதின் போர்களம்மாதிரி
விடுதலைக்கொண்டுவர அபிஷேகிக்கப்பட்டவர்
நான் கூட்டங்களில் பேசி முடித்த பின்பு, அநேகமாக எல்லாக் கூட்டத்திற்கு பிறகும், அநேகர் என்னிடம் வந்து அவர்களுடைய வாழ்க்கையின் தள்ளப்பட்ட, துயரமான சம்பவங்களை பகிர்ந்துகொள்வதுண்டு. நான் அவர்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு, அவர்கள் வலி வேதனைகளுடன் ஐக்கியமாகிவிடுவதுண்டு. நான் எப்படி அவர்களின் துயரங்களை புரிந்துகொள்ள முடிகிறது தெரியுமா? நானும் அவற்றின் வழியாக கடந்து வந்தவளாக இருப்பதால், “மனதின் போர்களம்” என்ற என்னுடைய புத்தகத்தில், என்னுடைய செயலற்ற பின்ணணியத்தைக் குறித்து குறிப்பிட்டிருக்கிறேன்.
என் கடந்த காலத்தைக் குறித்து நான் சுட்டிக்காட்டியிருப்பதின் காரணம், நான் அதை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தி, வளராமல், தோல்வியில் வாழ்ந்து, பிசாசானவன் என் மனதை கட்டுப்படுத்த இடம் கொடுத்திருந்தேன்.
“நீங்கள் என்னிடம் எதை எதிர்பார்க்க முடியும்? நான் எப்படிப்பட்ட பின்னனியிலிருந்து வந்திருக்கிறேன் என்று நீங்களே பாருங்கள்,” என்று மக்கள் அடிக்கடி என்னிடம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஒருவேளை, அவர்களுடைய கடந்த கால நிகழ்ச்சிகள், அவர்களை தற்போதும், எதிர்காலத்திலும் சுகமாக வைத்திருக்கும் என்பது அவர்கள் நினைப்பு. பிசாசானவன் சொல்லும் இந்த பொய்யை நம்புவது அவர்கள் இஷ்டம்.
“கர்த்தர் உங்களை அன்புகூருகிறார் என்றும், அவர் உங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து உங்களை விடுவிக்க விரும்புகிறார் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன், “நீங்கள் இருந்த இடம் ஒரு ஆரம்ப இடம் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வில்லையா? நீங்கள் எங்கு செல்லவேண்டும், உங்கள் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்றும் நீங்களே தீர்மானிக்கவேண்டும்.”
நான் என்னுடைய பின்னனியின் நிமித்தமாகவும், கர்த்தருடைய சத்தியத்தை அறிந்துக்கொண்டு அவர் என்னை விடுவித்ததினி மித்தமாகவும், இதை சொல்லுகிறேன்.
லூக்கா எழுதின சுவிசேஷத்தில், இயேசுவானவர் முதன் முறையாக பொது ஜனங்கள் மத்தியில் தோன்றிய அந்த சம்பவத்தில் இருந்து நான் முக்கியமான ஒன்றைக் கற்றுக்கொண்டேன். இயேசுவானவர் தன் சொந்த ஊரான நாசரேத்துக்கு சென்று அங்குள்ள தேவாலயத்தில், தலைவனால் புஸ்தக சுருளைப் பெற்று, ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலிருந்து மேலே கூறப்பட்டுள்ள வசனங்களை வாசித்தார். அங்குள்ள ஜனங்களுக்கு அவர் தன்னைக் குறித்துதான் வாசிக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. “கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்... சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும்...” (வ. 18).
இயேசுவானவர் இதைச் செய்யவில்லையா? இப்போதும் இயேசு செய்துகொண்டிருக்கவில்லையா? இதற்காகவே பிதா, இயேசுவை அபிஷேகம் பண்ணியிருக்கிறார் என்று உரைத்தார். இது உண்மையானால், இதை நான் சந்தேகப்படவில்லை என்றால் - நான் அடிமையாக இருப்பதன் மூலம் இயேசுவை உண்மையாகவே கனப்படுத்துகிறேனா? என்னை விடுதலையாக்க இயேசுவானவர் அபிஷேகம் பெற்றிருப்பாரோயானால், இரண்டு விளைவுகள்தான் இருக்கமுடியும். அவர் என்னை விடுவிப்பார் அல்லது இல்லை.
இதுதான் மனதின் போராட்டத்தின் களம். நான் திரும்பத் திரும்ப சொல்வது போல், இயேசுவானவர் சொல்கிறார், “தேவன் என்னை அபிஷேகித்திருக்கிறார்!” பிசாசு கேட்கிறான் “தேவன் உண்மையாகவே இயேசுவை அபிஷேகம் பண்ணியிருக்கிறாரா?”
உங்கள் விடுதலையும், என்னுடைய விடுதலையும் நாம் கேட்கும் குரலில் அடங்கும். நாம் இயேசு சொல்வதை கவனித்து, அவரை விசுவாசித்தால், விடுதலை என்பது “சாத்தியமாகும்” என்று மட்டும் சொல்லவில்லை, அது “நிஜமாகிவிடும்”. இயேசுவானவர், இதற்காக பிதாவினால் அபிஷேகம்ப்பண்ணப்பட்டார். இயேசுவானவரை பிதாவாகிய தேவன் வல்லமையினால் நிறைத்தார். இயேசுவானவர் சிறைக்கதவுகளை திறக்கவும், சிறைப் பட்டவர்களை விடுவிக்கவும் வந்தார். இது நடக்கும் என்று நாம் விசுவாசிக்க தொடங்கும் வரை, நாம் இந்த விடுதலையை பெறமுடியாது. கர்த்தர் உங்களை அன்புகூருகிறார். உங்களுக்கென்று சிறந்ததை வைத்திருக்கிறார், உங்கள் வாழ்க்கைக்கென்று பரிபூரண திட்டம் வகுத்திருக்கிறார் என்று விசுவாசித்தால் நீங்கள் எப்படி சந்தேகப்பட முடியும்?
என்னைப்போலவே பயங்கரமான, துயரமான, தவறாகப் பயன்படுத்தப் பட்ட கடந்த காலம் உங்களுக்கும் இருக்கலாம். ஆயிரக்கணக்கான மக்கள் உங்களைவிட குழந்தைப்பருவத்தில் மோசமாக வாழ்ந்தவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் சுகத்தைப் பெற்றுவிட்டார்கள். லூக்கா நான்காம் அதிகாரத்தில் தேவாலயத்தில் நடந்த மற்றொரு சம்பவம் உண்டு. இயேசு அங்கே சென்று, “அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்,” (லூக்கா 4:33). இயேசு அவனை விடுதலையாக்கினார். அவர் கட்டுண்டவர்களை விடுதலையாக்கும் கர்த்தராய் இருக்கிறபடியால், அவர் அதைச் செய்தார். அவர் உங்களையும் விடுதலையாக்குவார்.
அன்புள்ள பிதாவே, இயேசுவானவர் எங்களை விடுவிக்க அபிஷேகிக்கப்பட்டவர். நான் உதவிக்கு அப்பாற்பட்டவன் என்று பிசாசு சொல்லும் பொய்யை நான் கேட்டதற்காக எனக்கு மன்னியும். நீரே விடுவிக்கிறவர். முழு உள்ளத்தோடும் உமக்கு நான் ஊழியம் செய்ய முடியாதபடி, என்னை பின்னால் தள்ளி வைத்திருக்கும் காரியங்களிலிருந்து எனக்கு விடுதலையைத் தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/