மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 91 நாள்

தியானத்தின் ஆசீர்வாதங்கள்

“என் வார்த்தைகளை கவனி,” என்ற வாக்கியம் மேலே சொல்லப் பட்டிருக்கிறது. இது நம்மை தியானிப்பதற்கு ஊக்குவிக்கும் ஒன்றாக விளங்குகிறது. தேவன் நம்மை அவ்வப்போது அவர் வார்த்தைகளைக் குறித்து தியானிக்கும்படி, ஆழ்ந்து சிந்திக்கும்படி சொல்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் அதற்கேற்ற பலனையும் நமக்கு அடிக்கடி வாக்களித்திருக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால்? “ஜாய்ஸ், நீ என் வார்த்தைகளை தியானித்தால், நான் உனக்கு செய்யப்போவது இது தான்,” என்று சொல்வது போல் உள்ளது.

இந்த வேதப்பகுதியில் கர்த்தர் ஜீவனையும், ஆரோக்கியத்தையும் வாக்களித்திருக்கிறார். இது ஆச்சரியமாக இல்லையா? நீங்கள் வேத வசனங்களை வாசித்து, படித்து, தியானித்தால், அது உங்கள் சரீரத்தையும் ஆரோக்கியமாக்கும்.

நம் மனதை நல்ல ஆரோக்கியமான, முற்போக்கான சிந்தனைகளால் நிறைக்கும்போது, அது நம் உடல் நலத்தை மேம்படுத்தக்கூடியது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இதை எதிர்மறையாக சொல்லலாம். நம்முடைய மனதை பிற்போக்கான சிந்தனைகளால் நிறைத்தால் நாம் பெலவீனமாகி விடுவோம், அல்லது வியாதிப்பட்டது போல் உணர்வோம். அதன்பிறகு, சுய பரிதாபத்தினாலும், தோல்வி மனப்பான்மையினாலும் நிறைந்து இன்னும் பெலன்குன்றி, வியாதிக்காரரைப் போல் இருப்போம்.

இதற்கு முந்தின சில பக்கங்களில் செழிப்பைக் குறித்து எழுதி யிருக்கிறேன் (சங்கீதம் 1ம் யோசுவா 1:8ஐயும் காண்க). “செழுமை” என்று தேவன் சொல்வது; நாம் எல்லாவற்றிலும், நம்முடைய வாழ்க்கையின் எல்லா பகுதியிலும் வாழ்ந்திருப்பதாகும். வெறுமனே பொருட்கள், பணம் இந்த ஆசீர்வாதம்தான் என்றல்ல, நமக்கு கர்த்தர் வைத்திருக்கும் “அற்புதமான அனைத்து ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க முடிவதுதான்,” நமக்கு அவர் தரும் உறுதிப்பாடாகும். 

சமீபத்தில் நான் வேதத்தின் சில பகுதிகளை தியானித்தேன். அப்பொழுதுதான், கர்த்தர் தனது வார்த்தையில் மறைந்திருக்கும் பொக்கிஷத்தை - வல்லமையுள்ள, ஜீவன் தரும் இரகசியங்கள் அடங்கிய வற்றை, தேவன் வெளிப்படுத்த விரும்புகிறார், என்பதை உணர்ந்தேன். கர்த்தருடைய வார்த்தையில் மூழ்கி, ஆழ்ந்து சிந்தித்து, திரும்ப திரும்ப படித்ததை அசைபோடுபவர்களுக்குதான், இந்த விலையேறப்பெற்ற வெளிப்பாடுகள் கிடைக்கும்.

கர்த்தர் நம்முடைய ஐக்கியம், அன்பு, நம்முடைய நேரத்தையும் விரும்புகிறார் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். நம்முடைய பரலோக பிதாவுடன் ஒரு ஆழமான உறவு நமக்குத் தேவையானால் நாம் அவருடன் தரமான நேரத்தை செலவிட வேண்டும். சமீபத்தில் யாரோ இப்படி சொன்னதை கேட்டேன், “தரமான நேரம்...அதிகமான நேரத்திலிருந்து வருகிறது.” வேறு விதத்தில் சொல்ல வேண்டுமானால், நாம் தினந்தோறும், ஒழுங்காக கர்த்தரோடு நேரத்தை செலவு செய்யும்போது, விசேஷித்த மாற்றங்களை நம் வாழ்வில் காணமுடியும். நாமாகவே அந்த விசேஷித்த நேரங்களை ஏற்படுத்த முடியாது. நம்முடைய நேரத்தை நாம் தினந்தோறும் கர்த்தருடன் செலவு செய்யும்போது, அந்த விசேஷ பொழுதினை, ஆசீர்வாதமாக தேவன் நமக்கு உண்டாக்கித்தருவார்.

டி.எல்.மூடி ஒரு முறை இவ்வாறு சொன்னார். வேதம் நம்மை பாவத்திலிருந்து விலக்கும் அல்லது பாவம் நம்மை வேதத்தை விட்டு விலக்கும். இதுதான் வேதத்தின் சட்டமாக இருக்கிறது. நாம் கர்த்தருடைய வார்த்தையில் கவனம் செலுத்தி, நம்முடைய மனதை அந்த வார்த்தையால் நிறைக்கும்போது, தேவனை பிரியப்படுத்தாத பாவமான காரியங்களை புறம்பே தள்ளிவிடுவோம். அவருக்குள்ளாக நாம் ஆழமாக வேரூன்றுவோம். இதற்கு எதிர்மாறாக, நாம் பார்ப்போமானால், நம்முடைய மனதில் எப்பொழுதும் பிரச்சனைகளையே சிந்தித்துக் கொண்டிருந்தால், நாம் அதனால் பட்சிக்கப்படுவோம். மற்றவர்களுடைய தவறுகளையே நாம் தியானமாக கொண்டால், இன்னும் அதிகமான குற்றங்களும், தவறுகளும் தான் தென்படும். ஆனால், நாம் தேவனுடைய வார்த்தையில் கவனம் செலுத்தும்போது, நம்முடைய ஆத்துமாவில் அவருக்குள்ளாக நாம் ஆழமாக வேரூன்றுவோம்.

பிலிப்பியர் 4:8ல் சொல்லப்பட்டுள்ள வல்லமையான கர்த்தருடைய வார்த்தையை நான் திரும்பவும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நம்முடைய மனதை வெற்றிக்கு நேராக செலுத்துவதற்கு அது மிகவும் பிரயோஜன முள்ளதாக இருக்கும். 

“கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.” 


பரலோகத்திலுள்ள அன்பின் பிதாவே, உம்முடைய வார்த்தைகளை தியானித்து என் இருதயத்தையும் சிந்தையையும் உம்முடைய ஆவிக்குரிய மன்னாவினால் நிறைக்க எனக்குக் கற்றுத்தாரும். நான் வளர்ந்து முதிர்ச்சியடைந்து, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் சாயலில் வளர கிருபை செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 90நாள் 92

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/