மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 79 நாள்

சந்தேகத்தை, சந்தேகிப்பது

இந்த வேதப்பகுதி நம்மெல்லோருக்குமே நன்றாக தெரிந்த ஒன்றாக இருந்தாலும், நான் உண்மையாக சொல்லவேண்டுமானால், இதன்படி வாழ்வது, எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் கடினமானதாக இருந்தது. நான் சிறு பெண்ணாக இருந்தபோது, இப்படிப்பட்ட அன்பைக் குறித்து அறியவில்லை- சொல்லப்போனால், அனைவரிடமுமே “சந்தேகத்துடன் தான்” பழக எனக்கு கற்றுத்தரப்பட்டது. மற்றவர்களுடைய நோக்கங்கள், சரியாக இருக்காது என்றே என்னிடம் சொல்லப்பட்டன.

நான் வளர்ந்து வரும்போது, மற்றவர்களுடைய நடத்தை, என் மனதிலுள்ள சந்தேகங்களை உறுதிப்படுத்தியது. புதிய விசுவாசியாக, சபையிலுள்ள மற்ற விசுவாசிகளின் வெளிப்படையான போக்கு, என்னை ஏமாற்றத்திற்குள் தள்ளியது. மற்றவர்களுடைய நோக்கங்களை அறிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், நம்முடைய சந்தேக புத்தி; மற்றவர்களைப் பற்றி எப்பொழுதும் தவறாக, பிற்போக்காக எண்ணு வதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

சந்தேகப்படும் தன்மையானது, ஒரேயடியாக நம்முடைய மனதை விஷமாக்கிவிடும். அதனால், மற்றவர்களை நாம் ஏற்றுக்கொள்ளாமல், அவர்களிடம் அன்பு செலுத்தாமல் இருந்துவிடக்கூடும். நாம் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ஒருவேளை, சபை ஆராதனை முடிந்ததும் உங்கள் நண்பர் ஒருவர் வந்து உங்களிடம், “உன்னைக்குறித்து டாரிஸ் என்ன நினைக்கிறார் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, டாரிஸ் என்ன சொன்னாளோ அதை உங்களிடம் அப்படியே சொல்லுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதில், முதல் பிரச்சினை; உண்மையான நண்பர் என்றால், மற்றவர்கள் சொன்னதை அப்படியே உங்களிடம் சொல்லமாட்டார். இரண்டாவதாக, ஏற்கனவே சந்தேக மனதுடன் இருக்கும் உங்களுக்கு, இரண்டாவது நபர் சொல்லும் காரியம் ஒரு பிரச்சனையாகும்.

இப்பொழுது உங்கள் மனதில் விஷமேறியதுபோல் சந்தேகம் வளருகிறது. பிசாசு உங்கள் மனதின் அரண்களை பிடித்தாகிவிட்டது. டாரிஸ் பாவம். இனிமேல் அவள் எது சொன்னாலும், உங்களையுமறியாமல் சந்தேகத்துடன் “இவள் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள்?” அவள் உங்களிடம் இனிமையாக பழகினாலும், “இவளுக்கு என்னிடம் என்ன காரியம் நடக்கணும்” என்று தான் சந்தேகப்படுவீர்கள்.

பிசாசு இப்படித்தான் வேலை செய்கிறான். மற்றவர்கள் மீது உங்களை சந்தேகப்பட அவன் வைத்துவிட்டால், நீங்கள் அவர்கள் சொல்லும் எதையும் கவனிக்கப்பபோவதில்லை. நீங்கள் இப்படி புண்படுத்தப்படும் சமயங்கள் அதிகமானதும்; உங்கள் நினைவுகளையும் அவன் விஷமாக்கி, இன்னும் வேறு யார் உங்களுக்கு பின்னால் என்னைப்பற்றி பேசுகிறார்கள் என்று “யோசிக்கத்” தொடங்குவீர்கள்.

இந்த உதாரணத்தை தொடர்ந்து கவனிப்போம். ஒரு நாள் டாரிஸ் உங்களுக்கு இரண்டு வரிசைகளுக்கு முன்னால் அமர்ந்து கைதட்டி பாடிக்கொண்டிருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். உடனே உங்கள் மனதில், அவள் எப்படிப்பட்ட மாய்மாலக்காரி என்ற எண்ணம் எழும்பும்.

உடனே பரிசுத்த ஆவியானவர், உங்கள் நிலைமையை நீங்கள் சிந்திக்க உங்களை நடத்துகிறார். உங்கள் உண்மை நிலை என்ன? நீங்களும் கைதட்டி பாடி தேவனைத் துதிக்கிறீர்கள்; ஆனால் மனதிலோ, டாரிஸ் மேல் கசப்பை வைத்துக்கொண்டு தேவனைத் துதிக்கிறீர்கள். (மத்தேயு 5:24)ல் “பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டு போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து,” என்று இயேசு சொன்னது நினைவிருக்கிறதா?

ஒருவேளை, இந்த வார்த்தைகளினால் நீங்கள் உணர்த்தப்பட்டு, நீங்கள் டாரிஸிடம் சென்று, உங்கள் தவறான அபிப்பிராயங்களுக்காக அவளிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள்...அவளோ அதிர்ந்து போய், உங்களை ஆச்சரியமாகப் பார்க்கிறாள். அதன் பிறகுதான், உங்கள் தவறை நீங்கள் உணருகிறீர்கள். உங்கள் நண்பர் உங்களிடம் டாரிஸ் சொன்னதை, அப்படியே பகிர்ந்துகொண்டபின், நீங்கள் அதை தவறாக புரிந்துகொண்டு, அந்த நல்ல, கர்த்தருக்கு பயந்த, அருமையான சகோதரிக்கு விரோதமாக சந்தேகப்பட சாத்தான் உங்களை முடுக்கிவிட்டிருக்கிறான்.

உறவுகளை சிதைத்து, நம் மகிழ்ச்சியை கெடுத்து, நம்மைத் திசை மாறிப் போகச் செய்வதற்கு; இது ஒரு நல்ல உதாரணம். இதனால்தான், 1 கொரிந்தியர் 13ல் சொல்லப்பட்டுள்ள “அன்பு”, மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் சந்தேகப்பிராணியாக இருந்த எனக்கு, அதை மேற்கொள்வதற்கு நேரமானது. ஆனால், கடைசியில் நான் கற்றுக் கொண்டது, கர்த்தரைப் போல, அவர் வழியில், நாம் மற்றவர்களிடம் அன்புகூரும்போது, சந்தேகம் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போகும்.


ஆண்டவரே, உம்முடைய அன்பினால் நான் மற்றவர்களை அன்புகூர எனக்கு கற்றுக்கொடுத்து, சந்தேகத்தை மேற்கொள்ள உதவினீரே உமக்கு நன்றி. என்னோடு பொறுமையாயிருந்து, எனக்கு மாபெரும் முன் உதாரணமாய் நீர் விளங்குவதற்காக உமக்கு நன்றி. ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 78நாள் 80

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/