மனதின் போர்களம்மாதிரி
![மனதின் போர்களம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F11489%2F1280x720.jpg&w=3840&q=75)
மந்தமான நிலையை மேற்கொள்ளுவது
இயேசு சொன்ன இந்த வார்த்தை நம்மை பயமுறுத்தலாம். நாம் பயத்தினால் நிறைந்து கவலைப்படுவதற்காக, அவர் இந்த வார்த்தைகளை சொல்லாமல், நம்மை எச்சரிப்பதற்காகவே இதைச் சொன்னார். நாம் கெட்ட சிந்தனைகளை அகற்றினால் மட்டும் போதாது - நம்முடைய எதிரி திரும்பிவராமல் இருக்க கதவை பூட்டியும் வைக்கவேண்டும் என்றும் எச்சரிக்கையாய் இருக்கிறது. அவன் திரும்பி வருவதோடு மட்டுமல்ல, முன் இருந்ததை விட நிலைமை அதிக மோசமாக இருக்கும்.
ஒரு முறை, உணவு கட்டுப்பாட்டைக் குறித்து ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. அந்த எழுத்தாளர் இப்படியாக எழுதியிருந்தார். உணவை கட்டுப்படுத்த முயல்வோர் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை, உண்மையாகவே எடையை குறைக்கின்றனர். உணவுத் திட்டத்தை கைவிட்டால், முன்பு இருந்ததை விட மோசமாகி விடுகின்றனர் என்றார். எடை அதிகரிப்பதை மேற்கொள்ள ஒரே வழி, அவர்கள் வாழ்க்கையை வாழும் முறையையே மாற்றிக்கொள்வதுதான் - இனிமேல் எதிர்மறையான வைகளைக் குறித்து அறிந்துகொண்டு, தவறான உணவுகளை எடுக்காமல் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும்.
ஆவிக்குரிய வாழ்க்கையிலும், இது வேலை செய்கிறது. நாம் மனதை சுறுசுறுப்பாக, தயார் நிலையில், நல்ல காரியங்களினால் நிறைத்து வைக்கும் போது தவறான சிந்தனைகளை தவிர்க்கலாம். நீங்கள் பிசாசை உங்களை விட்டு துரத்தலாம். ஆனால், அதே நேரத்தில், அவனுடைய தந்திரங்களை அறிந்து ஜாக்கிரதையாய் நீங்கள் இருக்கவேண்டும்.
மனதின் போர்களம் , என்ற என் புத்தகத்தில் சொல்லியிருப்பதுபோல், சொல்லி செய்யும் பாவங்கள், சொல்லாமல் செய்யும் பாவங்கள் என்று இரண்டு வகை உண்டு. அதாவது, நாம் “பேசும் வார்த்தைகளினால்” மற்றவர்களை பாதித்து செய்யும் பாவங்கள். மற்றும், நாம் “பேசத்தவறிய” வார்த்தைகளினால் மற்றவர்களை வேதனைப்படுத்தும் பாவங்களாகும்.
ஒன்றுமே செய்யாமல் மந்தமாக இருப்பவர்களை விசாரித்தால், “நான் எதுவுமே பண்ணவில்லை,” என்று செல்வார்கள். அவர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதுதான், அவர்கள் செய்யும் தவறு. ஒன்றும் செய்யாமல் இருப்பது, பிசாசை மறுபடியும் வரவேற்பது போலாகும்.
இது ஒருவேளை, பயங்கரமான ஒரு வார்த்தையாக தென்படலாம். நான் இப்படி கூறுகிறேன்: கர்த்தரிடத்திலிருந்து வராத சிந்தனைகளையும், விருப்பங்களையும் தள்ளிவிட்டால் (இது ஒரு செயல்), நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இதை வேதம் வாசிப்பது, ஜெபிப்பது, மந்தமான நிலையை எதிர்ப்பதிலும் நீங்கள் செயல்படுத்தலாம். இது ஒரு ஆரம்ப நிலைதான், நீங்கள் விடுவிக்கப்பட்டபின், ஏதோ வெற்றி பெற்றுவிட்டோம், இதுவே வாழ்நாள் முழுவதும் போதும் என்று இருக்கக்கூடாது. தொடர்ந்து போராடவேண்டும், பிசாசை எதிர்க்க வேண்டும்.
இதற்கு உங்கள் இருதயத்தை, கர்த்தரை துதிக்கும் துதியால் நிறைப்பதுதான் சிறந்த, சுலபமான, வல்லமையான வழியாகும். நீங்கள் கர்த்தரை துதித்து ஆராதிக்கும்போது, பிசாசின் முகத்தில், கதவை ஓங்கி அறைந்து மூடுவதுபோல் இருக்கும். “இது பொது வழி அல்ல” என்று அவன் முகத்தில் நீங்கள் போர்டு மாட்டுவது போல் இருக்கும்.
ஏதோ வாழ்க்கையில், ஒவ்வொரு வினாடியும், ஒரு பிசாசோடு போராட வேண்டும் என்று நீங்கள் நினைக்கவேண்டும் என்பது அல்ல, நீங்கள் அப்படி நினைத்தால் அது பிசாசின் தந்திரமாகும். ஆனால், உங்கள் இருதயத்தை துதியினாலும், முற்போக்கான, ஆரோக்கியமான சிந்தனை களாலும் நிரப்பினால்; வெற்றியுடன் வாழலாம்.
திரும்பவும், ஆரம்ப வசனத்தை சத்தமாக படித்து, பரிசுத்த ஆவி யானவர் உங்களுக்கு சொல்லும் செய்தியை பிடித்துக்கொள்ளுங்கள். “கடைசியாக சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்க முள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ள வைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ள வைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவே அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்” (பிலிப்பியர் 4:8).
மந்தமான நிலையில் மேல் வெற்றிபெறுவது மிகவும் எளிது. உங்கள் மனதை நல்ல காரியங்களிலே செலுத்துங்கள். அப்பொழுது கெட்ட, மந்தமான காரியங்களுக்கு இடமில்லாமல் போகும்.
ஆண்டவரே, மந்தமான நிலையை மேற்கொண்டு, அனுதினமும் வெற்றியோடு வாழ வழிகாட்டினீரே, உமக்கு நன்றி. தினமும் என்னுடைய சிந்தையையும் இருதயத்தையும் தகுதியான நினைவுகளால் நிறைக்க எனக்கு ஞாபகப்படுத்தும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![மனதின் போர்களம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F11489%2F1280x720.jpg&w=3840&q=75)
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12698%2F320x180.jpg&w=640&q=75)
“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!
![உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12604%2F320x180.jpg&w=640&q=75)
உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!
![குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12656%2F320x180.jpg&w=640&q=75)
குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!
![1 தெசலோனிக்கேயர்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F15412%2F320x180.jpg&w=640&q=75)
1 தெசலோனிக்கேயர்
![பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12157%2F320x180.jpg&w=640&q=75)
பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)
![Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F15616%2F320x180.jpg&w=640&q=75)
Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி
![கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25512%2F320x180.jpg&w=640&q=75)
கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்
![கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F14002%2F320x180.jpg&w=640&q=75)
கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!
![கவலைகளை மேற்க்கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12592%2F320x180.jpg&w=640&q=75)
கவலைகளை மேற்க்கொள்ளுதல்
![தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12720%2F320x180.jpg&w=640&q=75)