மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 86 நாள்

தேவனுடைய அசைவுடன் முன்னேறுங்கள்

நாம் ஜென்ம சுபாவமுள்ள, இயல்பான, மறுரூபமாக்கப்படாத சிந்தனைக்குட் பட்டவர்களாக இருந்தால், அது நம்மை மரணத்திற்குள் நடத்தும் என்பதை கர்த்தருடைய வார்த்தை தெளிவாக்குகிறது. நீங்கள் ஆவியின் சிந்தையுடையவர்களாயிருந்தால், ஆவியானவர் உங்களுக் குள்ளாக வாசம் பண்ணுகிறார். நீங்கள் அவர் சொல்வதைக் கேட்கிறீர்கள், அவரோடு ஜீவனுள்ளவர்களைப் போல, நடக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தேர்ந்தெடுப்பது உங்கள் வேலை. ஆற்றிலே தண்ணீர் அடித்துக்கொண்டு போகும் போது, எதிர்நீச்சல் போடாமல், தண்ணீர் பாயும் திசையில், அதே வேகத்தில அதனுடன் அடித்து செல்லப்பட வேண்டுமானால் செல்லலாம். அல்லது தேவனோடு, அவருடைய அசைவுடன் நீங்கள் செல்லலாம். இதைத்தான் ஆவியின்படி நடப்பது, அல்லது “கிறிஸ்துவின் சிந்தையின்படி” நடப்பது என்று நான் அழைக்கிறேன்.

கிறிஸ்துவின் சிந்தையில் நீங்கள் எப்படி (ஆற்றின் வெள்ளத்தோடு செல்வது போல), பாய்ந்து செல்வது என்று உங்களுக்கு போதிக்க விரும்புகிறேன். முதலாவதாக, இப்படி முற்போக்கான சிந்தனையில் முன்னேறுவது, என்பது நிறைய பேருக்கு இயற்கையாகவே வருவதில்லை. அப்படிப்பட்டவர்களுடைய சிந்தனை, ஆழத்தில், படுகுழியில், மோசமாக மற்றவர்களை நினைக்கும் நிலையில் இருக்கும். அதற்கு பதிலாக, முற்போக்காக நினைக்க உங்கள் மனதை பயிற்றுவியுங்கள். “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?” (ஆமோஸ் 3:3). கிறிஸ்துவோடு நீங்கள் நடந்தால், கிறிஸ்துவைபோல் நினைக்கமுடியும். மற்றவர்களிடத்தில் நல்ல காரியங்களை காண முடியும். அவர்களை உயர்த்த முடியும். 

இயேசுவைக் குறித்து யோசித்துப் பாருங்கள். அவருடைய சீஷன் யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டார். ஆசாரியர்களால் பொய் சாட்சி வழங்கப்பட்டார். பேதுருவால் மறுதலிக்கப்பட்டார். இருந்தும், அவர் கசப்போ, வெறுப்போ அடைந்து பிற்போக்காக மாறவில்லை. அவர் எப்பொழுதும் ஜனங்களிடம், “நீ போ, இனி பாவஞ்செய்யாதே,” (யோவான் 8:11) என்று சொன்னவர்; அப்படியே இருக்கிறார். “சிலுவையில் அறையும்” என்று உரைத்த சத்தங்களுக்கு நடுவே, இயேசு பிதாவை நோக்கி, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்,” என்று ஜெபித்தார் (லூக்கா 23:34).

கிறிஸ்துவின் சிந்தை தவறானதாக இல்லாத பட்சத்தில், உங்கள் எண்ணங்கள் எப்பொழுதெல்லாம் தவறாக செல்லுகிறதோ, அப்பொழுது தேவனுடைய அசைவில் நீங்கள் செல்லவில்லை என்பதை கண்டுக்கொள்ள முடியும். நீங்கள் தேவ வல்லமையில், பரிசுத்த ஆவியானவரில் கிரியை நடப்பிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இப்படி சிந்தித்துப்பாருங்கள்; கர்த்தர் உங்களை உயர்த்தி, பரலோகத்திற்கு நேராக உங்கள் கவனத்தை பதிக்க விரும்புகிறார்; பிசாசோ உங்களை அழுத்தி, கீழ்நோக்கி, இந்த உலகத்தை பார்க்க வைக்க விரும்புகிறான். 

இரண்டாவதாக, நீங்கள் நினைவுகூர வேண்டியது, நீங்கள் “அன்புக்கூரப்பட்டவர்கள்.” இயேசு உங்களில் மிகவும் அன்புகூர்ந்தபடியால், தன் உயிரை உங்களுக்காகவே கொடுத்து மரித்தார்.“பிரியமானவர்களே,ஒருவரிலொருவர் அன்பாயிரு க்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். நாம் தேவனிடத்தில அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.” (1 யோவான் 4:7, 10).

சில நேரங்களில், “நான் அன்புகூரப்படுகிறேன். தேவன் என்னை சிருஷ்டித்தபடியால் அவர் என்னில் அன்புகூருகிறார்,” என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வது அவசியமாக இருக்கிறது. ஒரு பழைய சொல் உண்டு, “தேவன் ஏதோ உதவாத குப்பையை உண்டாக்கவில்லை”.இதன் அர்த்தம், அவர் உருவாக்கிய அனைத்துமே, நன்றாக இருந்தது - நம்மையும் சேர்த்து. நீங்கள் தேவனுடைய அன்பில் கவனம் செலுத்துவீர்களானால், ஒரு போதும் வழிதவறிப் போகமாட்டீர்கள்.

ஜாய்ஸ் மேயர் ஊழியங்களை முதலில் நான் ஆரம்பித்தபோது, தேவன் மக்களை எவ்வளவாய் அன்புகூருகிறார் என்பதை அவர்களுக்கு போதிக்க சொன்னார். வேதத்திலே கூறப்பட்டிருக்கும் இந்த வெளிப்படையான செய்தியை, நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். நம்முடைய குறை களையே நாம் பார்த்துக்கொண்டு, தேவன் என்னை எப்படி அன்புகூருவார்? என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். தேவனோ, தன் கண்களில் மெய்யான அன்பு நிறைந்தவராய் நம்மை நோக்கி, “உன்னில் நான் எப்படி அன்புகூராமல் இருக்க முடியும்? நீ என்னுடையவன்,” என்று சொல்லுகிறார்.

நாம் எத்தனை முறை தவறி இருந்தாலும் பரவாயில்லை, நாம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் பரவாயில்லை, பவுலில் வார்த்தைகளிலே கர்த்தர் நமக்கு நல்ல ஒரு உறுதிப்பாட்டைத் தருகிறார்: “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங் களானாலும்,வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” (ரோமர் 8:38, 39).

இதுதான் செய்தி, தேவனுடைய அன்பை விட்டு, ஒன்றும் நம்மை பிரிக்க முடியாது. தேவனுடைய அன்பை எவ்வளவுக்கதிகமாக தியானிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக, அவருடைய அன்பில் பாய்ந்து செல்லுவோம்.


பிதாவே, உம்முடன் எவ்வளவு நெருக்கமாக நடக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக இருக்க எனக்கு உதவும். முற்போக்கான காரியங்கள் நீர் என்னை விரும்புகிறீர், முழுவதுமாக என்னில் அன்புகூருகிறீர், உம்முடைய அந்த அன்பு எனக்குள் பாய்ந்து செல்லட்டும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 85நாள் 87

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/