மனதின் போர்களம்மாதிரி
![மனதின் போர்களம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F11489%2F1280x720.jpg&w=3840&q=75)
எப்பொழுதும் - நன்றியுள்ளவர்களாயிருங்கள்!
வேதத்தில், அறிவை உணர்த்தும் வசனங்கள், ஸ்தோத்திரபலிகளாக நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கிறது என்று ஒருவர் என்னிடம் சொன்னார். அது சரியா இல்லையா என்பது தெரியவில்லை. நம்முடைய மனதில் துதி, ஸ்தோத்திரம், நன்றியறிதல் பெருக்கெடுக்கும் போது, பிசாசின் தொற்றுநோயைப்போல் பரவும் வழிகளுக்கு நாம் தடுப்புத் தன்மையை அதிகப்படுத்த முடியும்.
நாம் குறை கூறி, முறுமுறுக்கும் போது, இதற்கு எதிர்மறையாக நடக்கும். குறைகூறக்கூற, வாழ்க்கை மோசமான நிலைக்கு மாறுகிறது. பிசாசு இன்னும் அதிக வெற்றி பெறுகிறான், நாம் இன்னும் அதிக அளவில் தோல்வியடைகிறோம்.
நாம் வெற்றியோடு வாழ வேண்டுமானால், “துதி” நம்முடைய போராயுதங்களில் ஒன்றாக இருக்கவேண்டும். ஒரு ஞானமுள்ள பாஸ்டர் ஒரு முறை என்னிடம் இப்படியாக, “துதியானது பரலோகத்தையும், பூலோகத்தையும் கர்த்தருடைய பிரசன்னத்தினால் நிறைக்கிறது. இருளை விரட்டிவிடுகிறது. அதனால், நீங்கள் பிரகாசிக்கும் ஒளியில் வாழ விரும்பினால், நீங்கள் கர்த்தரைத் துதியுங்கள்,” என்று சொன்னார்.
நன்மையான காரியங்கள் நமக்கு நடக்கும்போது, நாம் வழக்கமாக கர்த்தரை துதிக்கிறோம். நம்முடைய பிரச்சனைகளில் இருந்து கர்த்தர் நம்மை விடுவித்து, நம்முடைய ஜெபத்திற்கு பதில் தரும்போது, கரங்களை உயர்த்தி கர்த்தரைத் துதிப்பது மிகவும் சுலபமானக் காரியம். எதுவும் சரியாக நடக்காதபோது கர்த்தரைத் துதிப்பது, நமக்கு எப்போதுமே இலகுவான விஷயமல்ல. நாம் வியாதிப்பட்டு, வேலையை இழந்து, அல்லது மற்றவர்கள் நம்மைக்குறித்து தவறாக பேசும் போது என்ன செய்கிறோம்? அப்படிப்பட்ட சமயங்களில், எப்படி நம் மனதை மகிழ்ச்சியான நன்றியறிதலினாலே எப்படி நிரப்புகிறோம்?
நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வசனத்தோடு, பிலிப்பியர் 4:14 ஐயும் சேர்த்தால், “கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.” இப்படியும் இருக்க நமக்கு வாய்ப்புண்டு!
நாம் பிற்போக்கானவர்களாக இருக்க தேர்வு செய்தால், யோபுவின் மனைவியைப் போல; பிள்ளைகளையும், உடமைகளையும் இழந்து, “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனை தூஷித்து ஜீவனை விடும்” (யோபு 2:9) என்று சொல்லுவோம்!
அதற்கு யோபு மிகவும் ஞானமாய் பதில் சொன்னான்: “நீ பயித்தியக்காரி பேசுகிறது போல பேசுகிறாய்; தேவனுடைய கையில் நன்மையைப் பெற்றுக் கொண்ட நாம், தீமையை பெற வேண்டாமோ” (வ.10). நீதியுள்ள வாழ்க்கை என்பது எல்லாம் நன்றாக இருக்கும், ஆசீர்வாதத்தின் மழை கொட்டிக் கொண்டே இருக்கும் என்பதல்ல, இதை யோபு நன்கு புரிந்து வைத்திருந்தான்.
இரண்டு காரியங்களில் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம்மை பொறுத்தது. முதலாவது காரியம், நாம் நடைமுறையில் அப்பியாசப் படுத்தக் கூடிய ஒன்று. இரண்டாவதாக நான் சொல்லப்போகும் காரியம். எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். முதலாவது காரியம் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் காரியங்கள் மத்தியிலும், கர்த்தரை துதிப்பது. இன்னொரு விதத்தில் சொல்லவேண்டுமானால், கஷ்டங்கள், போராட்டங்கள் மத்தியிலும், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருந்து மற்ற நல்ல காரியங்களுக்காக கர்த்தரை துதிப்பது. ஒருவேளை, இது கடினமாக தோன்றலாம். ஆனால், அப்போதுள்ள போராட்டத்தில் இருந்து நம் கண்களை எடுத்துவிட்டால், வாழ்க்கை ஒன்றும் மோசமாக நமக்குத் தெரியாது. மேலும், அந்த தத்தளித்த, கலங்கின பிரச்சனைகளிலிருந்து, கர்த்தர் நம்மை எவ்வளவு நேர்த்தியாக காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கிறார் என்பதை நினைத்து அகமகிழ்வதோடு, கர்த்தர் அதே காரியத்தை இனிவரும் நாட்களிலும், போராட்டங்களிலும் செய்வார் என்று சந்தோஷத்துடன் அவரை போற்றித் துதிக்கவும்வேண்டும்.
இரண்டாவதாக, நாம் தெரிந்துகொள்ளும் காரியம், “கர்த்தாவே இந்த சூழ்நிலையில், நான் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்? நான் உம்மிடம் இன்னும் நெருங்கவும் உம்மிலே மகிழவும், இந்த சூழ்நிலையின் மூலம் என்ன படிப்பித்துக் கொடுக்க வாஞ்சிக்கிறீர்?” இது சுலபமான கேள்வி அல்ல. சில நேரங்களில் அவரிடமிருந்து வரும் பதில் நமக்கு கடினமானதாக இருக்கும்.
நாம் சாஷ்டாங்கமாய் கர்த்தருடைய பிரசன்னத்தில் முகங்குப்புற விழுந்து கிடக்கும்போது, நாம் முக்கியமான சிலவற்றை கிரகித்துக்கொண்டு அவசர அவசரமாக அவருடைய பிரசன்னத்திலிருந்து வந்து விடுகிறோம். இதைத்தான் சங்கீதக்காரன் சொல்லுகிறான்: “நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.” ஏதோ கர்த்தர் நம்மை புண்படுத்துகிறார் என்பதல்ல. அவர் நம்மை அதிகமாக அன்புகூருவதால், நாம் வழிதப்பிப் போவதை தடுத்து, நம்மை மாற்றிக்கொள்ள நமக்கு சந்தர்ப்பம் அளித்து, நாம் அவரை பின்பற்ற வைக்கிறார்.
என்னுடைய ஊழியத்தின் நாட்கள் முழுவதிலும், நிறைய சம்பவங்களை மக்களிடம் கேள்விப்பட்டிருக்கிறேன். அருமையான வேலை, பெரிய ஊழியங்கள், அல்லது நிறைய பணம் சம்பாதித்தவர்கள் - அவர்கள் பிறகு கர்த்தரை விட்டு, தூரமாய் போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதர் - கோடீஸ்வரனாக இருந்தவர் - மூன்று வருடங்களை சிறையில் கழித்து பிறகு வெளியே வந்த அவர், எங்கள் கூட்டங்களுக்கு வந்தார். அவர் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தை, “நான் தண்டனை பெற்று மூன்று வருடம் சிறையிலிருந்ததைக் குறித்து நான் சந்தோஷப்படுகிறேன். நான் ஆண்டவரை விட்டு, நீண்ட நாட்களாக தூரமாக சென்றவன். கடைசியில் எனக்கு, “நறுங்குண்டவர்களை குணமாக்குதல்,” என்ற ஜாய்ஸ் மேயர் புத்தகம் யாரோ ஒருவரால் தரப்பட்டது. அதன் மூலம் கர்த்தர் என்னை சந்தித்தார்,” என்றார்.
எல்லோராலும் தங்கள் பாடுகளுக்காக, கர்த்தருக்கு நன்றி சொல்ல முடியாது, ஆனால், அதன் மத்தியிலும் நாம் கர்த்தருக்கு நன்றியறிதலை செலுத்த முடியும்.
ஆண்டவரே, உம்முடைய அன்பின் பிரசன்னத்திற்காக உமக்கு நன்றி. ஏதாவது தவறாக நடந்தால் உடனே முறுமுறுக்கும் சுபாவத்தை எனக்கு மன்னியும். எத்தனை நன்மையான காரியங்களை நீர் எனக்கு செய்திருக்கிறீர் என்பதை எனக்கு ஞாபகப்படுத்தும். எப்பொழுதும் உம்மில் மகிழ்ந்திருக்க எனக்கு உதவிச்செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![மனதின் போர்களம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F11489%2F1280x720.jpg&w=3840&q=75)
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12698%2F320x180.jpg&w=640&q=75)
“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!
![உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12604%2F320x180.jpg&w=640&q=75)
உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!
![குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12656%2F320x180.jpg&w=640&q=75)
குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!
![1 தெசலோனிக்கேயர்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F15412%2F320x180.jpg&w=640&q=75)
1 தெசலோனிக்கேயர்
![பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12157%2F320x180.jpg&w=640&q=75)
பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)
![Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F15616%2F320x180.jpg&w=640&q=75)
Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி
![கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25512%2F320x180.jpg&w=640&q=75)
கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்
![கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F14002%2F320x180.jpg&w=640&q=75)
கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!
![கவலைகளை மேற்க்கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12592%2F320x180.jpg&w=640&q=75)
கவலைகளை மேற்க்கொள்ளுதல்
![தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12720%2F320x180.jpg&w=640&q=75)