மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 85 நாள்

கிறிஸ்துவின் சிந்தை

இந்த வசனம், அநேகரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். இது வேதத்தில் சொல்லப்படவில்லை என்றால், இதை நம்பவும் மாட்டார்கள். நிறைய பேர், இது எப்படி நடக்கும் என்று தலையை பலமாக ஆட்டி கேட்டதுண்டு.

நாம் பரிபூரணர், நாம் தவரே செய்யமாட்டோம் என்று பவுல் இங்கு கூறவில்லை. தேவனுடைய குமாரனாகிய, இயேசுகிறிஸ்துவை விசுவாசிக் கிறவர்களாகிய நமக்கு கிறிஸ்துவின் சிந்தை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறார். நமக்குள் கிறிஸ்து வாசமாயிருக்கிறபடியால், நாம் ஆவியின் சிந்தையுடையவர்களாய் இருக்கமுடியும். நாம் ஒரு காலத்தில், கர்த்தரை அறியாதபோது, சிந்தித்ததுபோல, இனி நம்மால் சிந்திக்க முடியாது.

இதை, நாம் வேறு ஒரு கோணத்தில் பார்க்கவேண்டுமானால், எசேக்கியல் மூலம் பேசிய தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுட்டிக்காட்டலாம்: “உங்களுக்கு நவமான இருதயத்தை கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்தில், என் ஆவியை வைத்து உங்களை என் கட்டளைகளில் நடக்கவும், என் நியாயங்களைக் கைக்கொள்ளவும், அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்” (எசேக்கியல் 36:26-27).

யூதர்கள் சிறைப்பட்டு பாபிலோனுக்கு கொண்டுபோகப்பட்டபின், தீர்க்கதரிசிகள் மூலம், வாக்குத்தத்தமாக அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த வார்த்தைகள் இவை. அவர்களுடைய அப்போதுள்ள சூழ்நிலை, அவர்கள் முடிவல்ல என்பதை தேவன் அவர்களுக்கு காட்ட விரும்பினார். எல்லா விதங்களிலும், அவர்கள் பாவம் செய்து தவறினார்கள். ஆனாலும், கர்த்தர் அவர்களை விட்டுவிடவில்லை. அவர் அவர்களை மாற்ற விரும்பினார். அவர்களுக்கு ஒரு புதிய ஆவியை - பரிசுத்த ஆவியானவரை அருள விரும்பினார்.

நமக்குள்ளாக பரிசுத்த ஆவியானவர் உயிரோடு வாழுகிறபடியால், கிறிஸ்துவின் சிந்தை நமக்குள் கிரியை செய்யும். சரியான வழியிலே நாம் நடக்க, கிறிஸ்துவின் சிந்தை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நமக்கு அவருடைய சிந்தை உண்டு, நாம் முற்போக்காக எண்ணுவோம். நாம் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை எண்ணுவோம். கர்த்தர் நமக்கு எவ்வளவு நல்லவர் என்று சிந்திப்போம். நான் ஏற்கனவே முற்போக்காக இருப்பதின் முக்கியத்துவத்தைக் குறித்து எழுதியிருக்கிறேன். ஆனால், முற்போக்கின் வல்லமையைக் குறித்து சொல்ல அது மட்டும் போதாது. 

இயேசுவானவரைக் குறித்து பலர்; பொய் சொல்லி, விட்டுவிட்டு, தவறாக புரிந்துகொண்டபோதிலும், எத்தனையோ பிற்போக்கான காரியங்களை அவருக்கு விரோதமாக செய்தாலும், அவர் முற்போக்கானவராகவே இருந்தார். சீஷர்கள் அவரோடு இருக்கவேண்டிய வேளையிலே, அவரை விட்டு ஓடி போய் விட்டனர்; ஆனாலும், முற்போக்கானவராக இருந்தார் - எப்பொழுதும் அவர்களை தூக்கி நிறுத்தும் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளையே பேசினார். அவருடைய பிரசன்னத்தில் இருந்தாலே போதும்; எல்லா பயம், பிற்போக்கான எண்ணம், சோர்வு, நம்பிக்கையின்மை எல்லாம் காற்றிலே கரைந்து போகும்.

கிறிஸ்துவின் சிந்தை நமக்குள்ளாக இருப்பது, முற்போக்கான ஒன்றாகும். ஏதாவது பிற்போக்கான, எதிர்மறையான எண்ணம் வந்தால், நாம் கிறிஸ்துவைப் போல் சிந்திக்கவில்லையே என்ற உணர்வு மேலோங்கி, மேற்கொள்ள வேண்டும். தேவன் நம்மை உயர்த்தவே விரும்புகிறார். நம்முடைய ஆத்துமாவிற்கு விரோதியானவன் நம்மை கீழே அழுத்தி, சோர்வடைய செய்கிறான். பிற்போக்கான சிந்தனைகளினாலேதான், நாம் சோர்வடைகிறோம். நமக்கு சோர்வடைய நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால், அது கிறிஸ்துவின் சிந்தையாகாது. அந்த சிந்தனைகளை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அது நமக்குரியதல்ல.

எந்த ஒரு சூழ்நிலையும், நமக்கு ஒரு தேர்வு செய்யும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது. நாம் நல்லதை தெரிந்துகொள்வதும் அல்லது கெட்டதை தெரிந்துகொள்வதும் நம்முடைய விருப்பம்.

கொஞ்சமும் நினைத்துப்பார்க்காமல், நாம் அடிக்கடி தவறான எண்ணங்களையே தெரிந்துகொள்ளுகிறோம். பழைய மனுஷனுடைய பழைய சிந்திக்கும் பாணியை நாம் தெரிந்துகொள்ளுகிறோம் - அது கிறிஸ்துவின் சிந்தனை அல்ல. கர்த்தர் யூதர்களுக்கு எசேக்கியல் மூலம் தீர்க்கதரிசனம் உரைத்தது போல, அவர் நமக்கு புதிய இருதயத்தையும், புதிய ஆவியையும் கொடுப்பார். ஆனால், எந்த சிந்தையை நாம் பின்பற்ற போகிறோம் என்று தேர்ந்தெடுக்கும் அதிகாரம் நம்முடைய கரத்தில்தான் உள்ளது. 


ஆண்டவரே, கிறிஸ்துவின் சிந்தை எனக்குள் கொடுக்கப் பட்டிருப்பதை பற்றிய உணர்வுள்ளவனாக நான் இருக்க விரும்புகிறேன். நான் கண் முழிக்கும் ஒவ்வொரு நாளும் அதை நினைவில் கொள்ள விரும்புகிறேன். உம்முடைய சித்தத்திற்கு மட்டும் நான் என்னை விட்டுக்கொடுக்கவும், பழைய மனப்போக்குகள், எண்ணங்கள் என்னை தவறான பாதையில் நடத்துவதால் அதை உதறித்தள்ள உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 84நாள் 86

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/