மனதின் போர்களம்மாதிரி
மந்தமான மனம்
“பிசாசுக்கு ஒரு சந்தர்ப்பமும் கொடாமலுல் இருங்கள்,” என்பதே அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தை சிறந்த விளக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பலவிதங்களிலே பிசாசு நம் மேல் பாய்வதற்கு நாம் அவனுக்கு சந்தர்ப்பங்களை கொடுக்கிறவர்களாய் இருக்கிறோம். அதில் ஒரு விதம், நாம் “மந்தமாக” இருப்பதாகும்.
சுறுசுறுப்பாக இருப்பதற்கு எதிர்மறையானதுதான் “மந்தமாக” இருப்பது. இது மிகவும் ஆபத்தான பிரச்சனையாகும். ஏனெனில், நீங்கள் உங்களை காத்துக்கொள்ளாமல், தயார் நிலையில் பிசாசை எதிர்க்க நிற்கிறவர்களாயில்லாமல் இருக்கிறீர்கள். பிசாசின் தந்திரங்களில் மிகவும் பெரியது இது. உங்களை ஒன்றும் செய்யாமல் உங்கள் மந்த நிலையில் திருப்திபட வைப்பான்.
“மந்தம்”, என்ற வார்த்தைக்கு நான் நிறைய அர்த்தங்களை கண்டு பிடித்துள்ளேன். ஆனால், அதை நான் இப்படியாக விவரிக்க விரும்புகிறேன். உணர்ச்சியற்ற, வாஞ்சையற்ற, சோம்பலுற்ற, அனலுமில்லாமல் குளிரு மில்லாமல் வெதுவெதுப்பான, அக்கறையற்ற நிலை என்றே சொல்லலாம். லவோதிக்கேயா சபைக்கு யோவான் எழுதும் போது, “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல, அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்,” என்கிறார் (வெளிப்படுத்தின விசேஷம் 3:15).
அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, யாரோ ஒருவர் சொன்னது எனக்கு நினைவிற்கு வருகிறது. “நான் ஒரு நல்ல விசுவாசியாக இன்று இருக்கிறேன், நான் எந்த தீங்கும் செய்யவில்லை, யாரையும் புண்படுத்தவும் இல்லை,” என்றார். அந்த நிமிஷமே நான் கேட்டேன், “ஆமாம், நீங்கள் யாருக்காவது ஏதாவது நல்லது, செய்திருக்கிறீர்களா?” அவர் ஒரு வினாடி என்னை வெறித்துப் பார்த்தார். பின்பு, “நான் அதைக்குறித்து நினைத்துக்கூட பார்த்ததில்லை,” என்றார்.
பிசாசு நம் மனதில் தந்திரமாக செயல்படும் விதங்களில் ஒன்று இது. நாம் செய்யவேண்டியதெல்லாம், வேதத்தை வாசித்து, அதன் மூலம் கர்த்தர் என்ன சொல்லுகிறார் என்று தெரிந்துகொள்ளவேண்டும். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும் போது, “இதினிமித்தமாக, நான் உன் மேல் என் கைகளை வைத்ததினால், உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல் மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ 1:6,7). பவுல், தன்னுடைய இளம் சீஷனுக்கு அறிவுரையாக, உன்னை உலுக்கி, உதறி எழுந்திரு, எதையாவது செய், நன்மையான காரியத்தை செய் என்கிறார். கர்த்தர் கொடுத்திருக்கிற வரத்தை, நாமும் உபயோகிக்க ஆரம்பிக்கவும், முன்னேறி செல்லவும், பவுல் நம்மையும் வற்புறுத்துகிறார்.
நாம் செயலற்று, சோம்பலாக, நன்மை செய்ய திராணி இருந்தும், செய்யாமல் இருந்தால் முடிவில் தோல்வியைத்தான் அடைவோம் என்பதை பிசாசு அறிவான். நாம் பிசாசுக்கு எதிராக எந்த அளவு முன்னேறி செல்லுகிறோமோ, அந்த அளவு யுத்தத்தை ஜெயிக்கிறவர்களாக இருப்போம். நாம் ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது, அவன் நம்மை குறி வைக்கிறான். நாம் கிளர்ந்தெழுந்து, விசுவாசித்து, வைராக்கிய வாஞ்சையாய் தேவனைப் பின்பற்றும்போது, பிசாசின் கிரியைகளை அழிக்கலாம்.
அந்நாட்களில் உபத்திரவப்பட்ட விசுவாசிகளுக்கு பேதுரு எழுதும்போது, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்...” என்றார் (1 பேதுரு 5: 8,9).
நான் ஏன் இதை வலியுறுத்திக் கூறுகிறேன் என்றால்; நிறைய விசுவாசிகள் எதைக்குறித்தும் அக்கறையில்லாமல் இருப்பதால், அவர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதை நான் பார்க்கிறேன். ஆராதனைக்கு செல்வார்கள். இஷ்டமிருந்தால் கர்த்தரை துதிப்பார்கள். மனமும், நேரமும், இருந்தால் வேதத்தை வாசிப்பார்கள். எதையாவது செய்ய வேண்டும் என்று தோன்றினால் செய்வார்கள். இல்லையென்றால், செய்யாதிப்பார்கள்.
இது கர்த்தருடைய வழி அல்ல. பவுல் தீமோத்தேயுவுக்கு சொன்னது போல, நாமும் கிளர்ந்தெழும்பவேண்டும். நான் என்னையே உங்களுக்கு ஒரு உதாரணமாக கூற விரும்புகிறேன். எனக்கு உடற்பயிற்சி செய்யவே பிடிக்காது. ஆனால், உடற்பயிற்சி ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், செய்தால், எனக்கு நன்றாக இருக்கும். செய்ய, செய்ய, இன்னும் நன்றாக இருப்பதை உணர்வேன். துவங்கும்போது, உடம்பெல்லாம் வலி, விட்டுவிட்டு ஓடிவிடலாம்போல் இருந்தது. நான் நீண்ட நாட்களாக என் உடலுக்கு பயிற்சி கொடுக்காமல், சும்மா மந்தமாக இருந்தபோது எனக்கு உடல் வலி இருந்தது. நான் அதைக் குறித்து ஒன்றும் செய்யாதபோது, நாளாக ஆக நிலைமை மோசமானது. ஆனால், எப்பொழுது உடற்பயிற்சி விடாமல் செய்தேனோ, அதன் விளைவு நல்ல பலனை தந்தது.
நீங்கள் எழும்பி சுறுசுறுப்பாக செயல்பட, உங்களை உற்சாகப் படுத்துகிறேன். ஒன்றும் செய்யாமல் இருந்து, பிசாசுக்கு இடங்கொடா தீர்கள். நீங்கள் வேதத்தை வாசிக்கவும், கர்த்தரைத் துதிக்கவும் முடிவெடுத்து செயல்படுங்கள், தேவனும் உங்களை ஆசீர்வதிக்க தொடங்குவார். நீங்கள் இதற்கு முயற்சி எடுக்காவிட்டால், எதிரியான வனை உங்கள் வாழ்க்கையில் வரவேற்பது போலாகும். இன்றே முன்னேற தொடங்குங்கள்.முன்னேறுங்கள். முன்னேறிக்கொண்டேயிருங்கள்!
கர்த்தாவே, நான் மந்தமாக இருக்கும் நாட்களில் நான் கிளர்ந்தெழும்ப, எனக்கு உதவி செய்யும். நான் உம்முடைய சித்தத்தின்படி செயல்படும்போது நீர் என்னை கனப்படுத்துவீர் என்பதை எனக்கு நினைவுப்படுத்தும். நான் சுறுசுறுப்பாக, விழித்திருக்க, வெற்றியடைய இயேசுவின் நாமத்தில் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/